ராமர் ஸ்லோகம் :

ராம நாம சுர வந்தித ராம் 
ரவிகுல ஜனநிதி தந்தவராம் 
சாகேதஸ்தலம் வந்தவராம் 
தசரத கோசலை தந்தவராம்
விஸ்வாமித்ரர் பின் சென்றவராம்
மேவு தாடகையைககொன்றவராம்
அகலிகை சாபம் முடித்தவராம்
அரியதோர் பாணம் ஒடித்தவராம்
பாவை சீதை மணம் கொண்டவராம்
பரசுராமன் வலி கொண்டவராம்
தாய் மொழிப்படி வனம் போந்தவராம் 
சாரும் குகன்பால் அன்பு மீந்தவராம் 
பரதற்கு பாதுகம் ஈந்தவராம் 
பரவு தண்டகவனம் போந்தவராம் 
முனிவர்களுக்கு அபயம் அளித்தவராம் 
முனிவர் புகழக்கண்டு களித்தவராம்
சூர்பனகைக்கு மையல் கொடுத்தவராம் 
தோன்றும் கரன் படையைக்கெடுத்தவராம்
மாயமானின் பின்னே ஓடினராம் 
வைதேகியைப் பிரிந்து தேடினாராம் 
சபரிக்குத் தன்பதம் தந்தவராம் 
சாரும் அனுமனை உகந்தவராம்
சூரனாம் வாலியை வாட்டினராம் 
சுக்ரீவனை முடி சூட்டினராம் 
அனுமனை சீதைபால் விடுத்தனராம் 
அடையாளமும் கையில் கொடுத்தனராம்
தேவி சூடாமணி பெற்றவராம் 
தென் சமுத்திரக் கரை உற்றவராம் 
சரணம் விபீஷணர்க்கு ஈந்தவராம்
சமுத்திரம் அணைகட்டி போந்தவராம் 
இராவணாதியரைக் கொன்றவராம்
ராட்சசர் முதலற வென்றவராம் 
அன்னையை சிறை நீக்கினராம்
அவர் பெருமையை வெளியாக்கினராம் 
வீடணனுக்கு முடி புனைந்தவராம் 
மேவும் அயோத்தி செல்ல நினைந்தவராம் 
புஷ்பக மீதில் போனவராம் 
புண்ய முனிவர் விருந்தானவராம் 
சேதுவில் பூஜை செய்தவராம் 
சேர அரக்கர் பழி கொய்தவராம் 
அனுமனை பரதன்பால் விடுத்தனராம் 
அவன் உயிர் அழியாமல் தடுத்தவராம்
தமர் அயோத்திலன் மீண்டவராம் 
கைகேயி மலர்ப்பதம் பூண்டவராம் 
மகிழ்ச்சி எவரும் பெறக்கொண்டவராம்
மகுடாபிஷேகம் கொண்டவராம்
குவலய ரக்ஷணை புரிந்தவராம் 
கோதண்ட ரக்ஷா குருவரராம் .