வியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்.

நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் கொட்டி செல்வந்தராகலாம். இதுக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விஷ்ணு பகவானை வணங்குவது

வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்தப் பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும்.

தானம்
வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.

விரதம்
முடிந்தால் வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருங்கள். இதனால் செல்வந்தர் ஆகலாம்.

மஞ்சள் லட்டு சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.

வாழைமரம்

வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

வாழைப்பழம்

வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானம் வணங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

சாமந்தி மாலை

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வம் பெருக செய்வார்.

மந்திரம்

வியாழக்கிழமைகளில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.

 

 

Leave a Comment