Andru Ketpavan Arasan song Lyrics in Tamil

அன்று கேட்பவன் அரசன் மறந்தால் (Andru Ketpavan Arasan song Lyrics) என்பது முருகனைப் பற்றிய மிகவும் பிரபலமான தமிழ் பக்திப் பாடல். இந்தப் பாடலை தமிழ் சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான டி.எம். சௌந்தரராஜன் [டி.எம்.எஸ்] பாடியுள்ளார்.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடல் வரிகளை பாடலாசிரியர் தமிழ் நம்பி எழுதியுள்ளார் மற்றும் மன்னனாலும் ஆல்பத்திற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது.
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்நடுவில் மனிதன் வாழுகிறான்நடுவில் மனிதன் வாழுகிறான்வீணில் மனம் தடுமாறுகிறான்இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்
மனம் போல் மாங்கல்யம் என்பார்தன்மனமே சகலமும் என்பார்மனம் போல் மாங்கல்யம் என்பார்தன்மனமே சகலமும் என்பார்தெரிந்தும் குணத்தை இழக்கிறான்தெரிந்தும் குணத்தை இழக்கிறான்இதயம் குலைந்து தவிக்கிறான்இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்
அடிக்கும் அவன் கை அணைக்கும்புவி அனைத்தும் தலைவன் இயக்கம்அடிக்கும் அவன் கை அணைக்கும்புவி அனைத்தும் தலைவன் இயக்கம்தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்
தன்னை அடித்தால் பழிக்கிறான்இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்
கற்றது கைமண் அளவுகரை கண்டவர் இங்கே குறைவுகற்றது கைமண் அளவுகரை கண்டவர் இங்கே குறைவுகண்டு அறிந்தவர் ஓர் தலைவன்கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்யாவும் அருள்வான் நம் இறைவன்இறைவா இறைவா
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்நின்று கேட்பவன் இறைவன்நடுவில் மனிதன் வாழுகிறான்வீணில் மனம் தடுமாறுகிறான்இறைவா இறைவா இறைவா இறைவா

கந்தனை மனமுருக வணங்கி இந்த பாடலை துதித்து சுப்பிரமணிய கடவுளின் அருளை பெறுவோம்…

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

பண்பொழி ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்

 

Leave a Comment