Thanusu rasi guru peyarchi palangal 2020-21
தனுசு ராசி பலன்கள் – 95/100. தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu rasi guru peyarchi palangal 2020-21
உதவி என்று வருபவர்களுக்கு தயக்கமின்றி… தன்னால் முடிந்த உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே…!!
நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியில் இருந்துவந்த குருதேவர் ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக தனுசு ராசிக்கு ஆறாம் இடமான ரண ருண ரோக ஸ்தானத்தையும், தன்னுடைய ஏழாம் பார்வையாக ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தையும், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
வாக்குவன்மையின் மூலம் அனைவராலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் எதிர்பாராத செல்வச்சேர்க்கையும், பொருள் வளமும் கிடைக்கும்.
பெண்களுக்கு :
தந்தையின் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களும் மாறுபடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகளை குறைத்து கொள்வதற்கான வாய்ப்புகளும், அதற்கான உதவிகளும் கிடைக்கும்.
மாணவர்களுக்கு :
மாணவர்கள் தேவையில்லாத சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் கல்வியில் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்ள முடியும். புதிய முயற்சிகளின் மூலம் மாற்றத்தை உருவாக்கி கொள்வீர்கள். படித்து முடித்த மாணவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு :
தனம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இன்சூரன்ஸ் மற்றும் நீண்டநாள் வைப்பு தொகைகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கமிஷன் அடிப்படையிலான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு :
விவசாய பணியில் இருப்பவர்கள் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனைகளை பெற்று புதிய பயிர்கள் பயிரிடுவதை மேற்கொள்ளவும். வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு :
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு உயர்வும், பாராட்டும் கிடைக்கும். கட்சி தொடர்பான பணிகளில் உயரதிகாரிகளின் ஆதரவும், தொண்டர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கட்சி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும்.
கலைஞர்களுக்கு :
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி தெளிவு கிடைக்கும். அறிமுகமில்லாத பிறமொழி மற்றும் பிறநாட்டு மக்களின் மூலம் ஆதரவுகளும், பாராட்டுகளும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை அளிக்கும். பணி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி நீங்கள் தொட்டதையெல்லாம் துலங்க வைக்கும்; அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தித் தருவதாக அமையும்.
குடும்ப குரு குரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு நீதிமன்ற பிரச்சினைகள் சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.
வழிபாடு :
வியாழக்கிழமைதோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய குருபகவானை மஞ்சள் நிற பூக்களால் வழிபாடு செய்துவர எண்ணத்தெளிவும், ஆரோக்கியத்தில் மேன்மையும் உண்டாகும்.
திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியையும், ஸ்ரீதெய்வானையையும், கிருத்திகை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். துன்பங்கள் நீங்கும்; நிம்மதி பெருகும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்