Rama Navami ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்

இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர்.சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார். அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமபாணங்கள் எகிறின.

ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார்.அதை இராமரே ஒப்புக்கொள்கிறார்.அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.இன்னோர் உபகதையும் உண்டு. இராமாயணத்திலே விபீடணன் புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்து இராமபட்டாபிஷேகம் கண்டும், எல்லாரையும் கண்டு ஆனந்தித்தும், இலங்கைக்குச் செல்லும் வேளையில்,விபீடணனின் அயோத்தி நண்பர் ஒருவர், தனக்கு அந்த இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பகத்தில் அவனையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார்.

அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டான். உடன் அவன் “நான் எவ்வாறு கடல் கடந்து போக முடியும்?” என்று விபீடணனிடம் வினவஅதற்கு விபீடணன் “ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.” என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய அரையில் கட்டி விட்டார்.எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்” என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்.” என்றும் கூறினார்.அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான். பின் வேகமாகவும், ஓட்டமாகவும் நடந்து முன்னேறினான்.

பல காத தூரங்கள் கடந்து, இயற்கையையும் கடல் வாழ் ஜந்துக்களையும் ரசித்துக் கொண்டே நடந்து சென்றான்.‘எப்படிப்பட்ட மகாமந்திரம் இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்’ என்று வியந்தான்.தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. ‘இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்?அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான்.அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான்.ஆச்சர்யத்துடன் ‘பூ’ இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?’ என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான்.அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்திக்கரை சேர்ந்தான் என்பது அதன் சுவாரஸ்யம்.அதன் சாராம்சம் ‘ராம’ என்ற நாம மகிமைதான் காரணம். அதுதான் தாரக மந்திரமுமாகும்.ஸ்ரீ ராம ஜெயம்

ராமநவமி: வீட்டில் எவ்வாறு வழிபட வேண்டும்…

பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

 

வழிபடும் முறை: ஸ்ரீராமநவமி இந்நாளில், ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும். 🙏 *ஶ்ரீராமஜெயம்* 🙏

108 ஸ்ரீ ராமர் போற்றி

Rama navami, the birth of Shree Rama, is celebrated on the ninth day of the bright fortnight of the Hindu month of Chaitra. In some parts of India it is a nine-day festival, coinciding with the Vasanta Navratri, and many people fast over this period.
Glory of Shree Rama
Shree Rama is the 7th incarnation of Lord Vishnu, born into the Ikshvaaku lineage of King Dasharath of Ayodhya. Shree Rama is known as Maryaada Purushottama meaning “the perfect man”or“Lord of Self-Control”, as His life exemplifies the ideal son, ideal brother, husband and King. Shree Rama’s incarnation was to restore Dharma on Earth by destroying the evil King of Lanka, Ravana.
Shree Rama’s journey is one of perfect adherence to Dharma, even through difficult situations in life. Seen as a truly devoted renunciant, Shree Rama abandons His claim to the throne for His father’s honour, and serves a 14 year exile in the forest. Unable to bear separation, His wife Sitaji and brother Lakshman both join Shree Rama in his exile.
Many events occur throughout their time in exile, but the most important being the kidnapping of His wife Sitaji by Ravana. This leads to a colossal war against Ravana after a long and painful search. The battle tests Shree Rama’s personal strength and virtue, but He eventually slays Ravana and liberates Sitaji.
Upon completing His exile, Shree Rama returns to Ayodhya (the capital of his Kingdom and birthplace) and eventually becomes Emperor, under a reign famously termed Rama Rajya – eleven thousand years of perfect happiness, peace, prosperity and justice. Shree Rama’s presence and strict following of Dharma attracted powerful devotees such as Hanumanji and the vanaras (monkeys) of Kishkinda, who helped Shree Rama rescue Sitaji. Shree Rama is revered for His endless compassion, courage and devotion to Dharmic values and duty.

Ritual & Celebration
Celebrations of Ramnavmi are marked by Akhand Paath (continuous recital) of the Ramcharitmanas, bhajans and kirtans. Images of Rama are placed on cradles and rocked by devotees. As Rama was born at noon, Mandirs are elaborately decorated and Aarti is performed. Many devotees uphold a Vrata (fasting) on this day and feast in the evening.
Ayodhya, the birthplace of Rama, is a focus for great celebration. A huge fair is organised for two days, where Ratha Yatras (chariot processions) of Rama and his wife Sita, brotherLakshman and devotee Hanuman, set out from many temples. Nasik, Tirupati and Rameshwar(major pilgrimage sites in India) also celebrate Ramnavmi with much joyous ceremony.

Leave a Comment