மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

அபிஷேக‌ மணம் காற்றில் அலைவீசுதே ( x 2)
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே ( x 2)

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம் ( x 2)

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே

ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே

நாம் வாழ‌ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி

அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே

Leave a Comment