Hanuman Chalisa Lyrics in Tamil

அனுமான் சாலிசா பாடல் வரிகள் (Hanuman Chalisa Tamil Lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… தினமும் அல்லது பிரதி வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் இந்த ஹனுமான் சாலிசா வாசித்தால் பல நல்ல பலன்களை பெறலாம் . 16 ஆம் நூற்றாண்டு கவிஞரான துளசிதாஸ் அவதி மொழியில் ஹனுமான் சாலிஸா எழுதியுள்ளார் என்று நம்பப்படுகிறது – தேவநகரி (முக்கியமாக உத்திரப் பிரதேசத்தில் அவந்த் பிராந்தியத்திலும் நேபாளத்தின் டெரேய் பகுதியிலும் பேசப்படும் இந்திய-ஆரிய மொழி).

தோஹா – 1
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி

தோஹா – 2
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார்

சௌபாஈ (1 – 40)
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர (1)

ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா (2)

மஹாவீர விக்ரம பஜரங்கீ
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ (3)

கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா (4)

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை (5)

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன (6)

வித்யாவான குணீ அதி சாதுர
ராம காஜ கரிவே கோ ஆதுர (7)

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா (8)

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா (9)

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே (10)

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே (11)

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ (12)

ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை (13)

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா (14)

யம குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே (15)

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா (16)

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா (17)

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ (18)

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ (19)

துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே (20)

ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே (21)

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா (22)

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை (23)

பூத பிஶாச னிகட னஹி ஆவை
மஹவீர ஜப னாம ஸுனாவை (24)

னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா (25)

ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை (26)

ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா (27)

ஔர மனோரத ஜோ கோயி லாவை
தாஸு அமித ஜீவன பல பாவை (28)

சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா (29)

ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே (30)

அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா (31)

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா (32)

தும்ஹரே பஜன ராமகோ பாவை
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை (33)

அம்த கால ரகுவர புரஜாயீ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ (34)

ஔர தேவதா சித்த ன தரயீ
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ (35)

ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா (36)

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ (37)

ஜோ ஶத வார பாட கர கோயீ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ (38)

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா (39)

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா (40)

।। தோஹா ।।
பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப்

ஸியாவர ராமசன்த்ரகீ ஜய
பவனஸுத ஹனுமானகீ ஜய
போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய…

அனுமான் 108 போற்றி

அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் சுந்தரகாண்டம்

ஆஞ்சநேயர் வழிபாடு பலன்கள்

அனுமன் ஜெயந்தி ஸ்பெஷல்

 

அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது.
இதில் உள்ள நாற்பது பாடல்களும் தனி தனியாக ஒரு வரத்தினை நல்குகிறது. அனுமன் சாலிசா 40 பாடல்களின் தமிழாக்கம் இதோ.
அனுமன் சாலிசா :
ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே!
உலகத்தின் ஒளியே வானரர் கோனே. (1)
ராமதூதனே! ஆற்றலின் வடிவமே!
அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே..(2)
மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே!
ஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய். (3)
தங்க மேனியனே, பட்டாடை அணிபவனே!
மின்னும் குண்டலமுடன் அலைமுடியும் கொண்டவனே. (4)
இடி,கொடிமிளிரும் கரங்கள் கொண்டோனே!
முஞ்சைப் பூணூல் தோ ளணிவோனே! (5)
சிவனின் அம்சமே ! கேசரி மகனே!
உனதொளி வீரத்தை உலகமே வணங்குமே! (6)
பேரறி வாளியே! நற்குண வாரியே!
ராமசேவைக்கென மகிழ்வுடன் பணிவோனே! (7)
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்!
ராமனின் புகழை கேட்பது பரவசம்! (😎
நுண்ணிய உருவாய் அன்னைமுன் தோன்றினாய்!
கோர வுருவினில் இலங்கையை எரித்தாய்! (9)
அசுரரை அளித்த பெரும்பல சாலியே !
ராம காரியத்தை முடித்த மாருதியை ! (10)
சஞ்சீவி கொணர்ந்தே இலக்குவனை எழுப்பிட
விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்! (11)
ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து
பரதனைப் போல நீ உடனுறை என்றார்! (12)
ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன்
பெருமையைப் புகழ்வதாய் அணைத்தே சொன்னார்! (13)
சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும்
ஈசனும் நாரதர் கலைமகள் சேஷனும் (14)
எமன், குபேரன், திசைக் காவலரும், புலவரும்
உன் பெருமை தனை சொல்ல முடியுமோ? (15)
சுக்ரீவனுக்கு அரசை அளித்திட
ராமனின் நட்பால் உதவிகள் செய்தாய்! (16)
உன் அறிவுரையை வீடணன் கொண்டதால்
அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்! (17)
தொலைவினில் ஒளிரும் ஞாயிறைக் கண்டே
சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்! (18)
வாயினில் ராமனின் மோதிரம் கவ்வியே
ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ! (19)
உலகினில் முடியாக் காரியம் யாவையும்
நினதருளாலே முடிந்திடும் எளிதாய்! (20)
ராமராச்சியத்தின் வாயிற் காவலன்நீ!
நுழைந்திட வியலுமோ நின்னருள் இன்றி! (21)
உனைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம்!
காவலாய் நீவர ஏதிங்கு எமக்கு அச்சம்! (22)
நின்னால் மட்டுமே நின்திறல் அடங்கும்!
மூவுலகும் அதன் முன்னே நடுங்கும்! (23)
பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ!
மஹாவீர னுன் திருநாமம் சொல்வாரை! (24)
நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும்!
பலமிகு நின்திரு நாமம் சொல்லிட! (25)
தொல்லைகள் தொலைந்திட அனுமன் அருள்வான்!
மனம், வாக்கு, செயலால் தியானிப் பவர்க்கே! (26)
தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடும்
ராமனின் பணிகளை நீயே செய்தாய்! (27)
வேண்டிடும் பக்தர்கள் ஆசைகள் நிறைவுறும்!
அழியாக் கனியாம் அனுபூதி பெறுவார்! (28)
நான்கு யுகங்களும் நின்புகழ் பாடிடும்!
நின்திரு நாமமே உலகினில் சிறந்திடும்! (29)
ஞானியர் நல்லோரைக் காப்பவன் நீயே!
தீயவை அழிப்பாய்! ராமனின் கனியே! (30)
எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும்
கேட்டவர்க்கு அருள்வரம் சீதையுனக் களித்தார்! (31)
ராம பக்தியின் சாரமே நின்னிடம்!
என்றும் அவனது சேவகன் நீயே! (32)
நின்னைப் பற்றியே ராமனை அடைவார்!
தொடர்வரும் பிறவித் துன்பம் துடைப்பார்! (33)
வாழ்வின் முடிவினில் ராமனடி சேர்வார்!
ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறுவார்! (34)
மறுதெய்வம் மனதில் நினையா பக்தரும்
அனுமனைத் துதித்தே அனைத்தின்பம் பெறுவார்! (35)
துன்பங்கள் தொலையும் துயரங்கள் தீர்ந்திடும்!
வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே! (36)
ஆஞ்ச நேயனே! வெற்றி! வெற்றி! வெற்றி!
விஞ்சிடும் குருவே! எமக்கருள் புரிவாய்! (37)
நூறுமுறை இதைத் துதிப்பவர் எவரோ
அவர் தளை நீங்கியே ஆனந்தம் அடைவார்! (38)
அனுமனின் நாற்பதைப் படிப்பவர் எல்லாம்
சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்! (39)
அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவான்
அனைவர் உள்ளிலும் திருமால் உறையவே! (40)
இந்து மதத்தை சார்ந்த பலரும் தற்போது தினம்தோறும் ஹனுமான் சாலிசா பாடலை துதிக்க துவங்கி உள்ளனர். தினம் தோறும் துதிக்க முடியாதவர்கள் அனுமனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளில் துதிக்கின்றனர். இதை ஜெபிக்கும் பக்தர்கள் அனுமன் மீது எந்த அளவிற்கு பக்தியை கொண்டுள்ளனரோ அந்த அளவிற்கு அவர்களுக்கு பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 40 பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பில் 38 வது பாடலை கவனித்தோமானால், எவர் ஒருவர் இதை தொடர்ந்து 100 நாட்கள் 100 முறை ஜெபிக்கிறாரோ அவருக்கு பிறப்பு இறப்பற்ற நிலை உருவாகும் அதோடு மகிழ்ச்சியான வாழ்வு உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அனுமனை போற்றும்
எத்தனையோ பாடல்களும் மந்திரங்களும் இருந்தாலும் அனுமன் சாலிசா தான் மிகவும் சக்தி மிக்கதாக கருதப்படுகிறது…

Leave a Comment