ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal 2019-20

ரிஷப ராசி பலன்கள் – 63/100

ரிஷப ராசிக்கு குருபகவான் 8க்குடைய அஷ்டமாதிபதியாகவும் 11-க்குடைய லாபாதிபதியாகவும் வருவார்.

இவர் ராசியாதிபதியாக சுக்கிரனுக்கு கடுமையான பகைவர் ஆவார்.

தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தையை வார்த்தைகளால் எழுத முடியாது.

கண்ணீர் விட்டுக் கதறி அழுபவர் பலர்.

அட்டமச் சனியையே அசால்ட்டாக இரண்டு வருடம் கடந்த உங்களுக்கு அட்டம குரு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தாது.

ஜனவரிக்குப் பின் சனி ஒன்பதாம் ஸ்தானத்திற்கு மாறுவதால் அட்டம சனி முழுமையாக விலகும்.

இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்ததும் என்ற பழமொழி, அட்டம குருவுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.

அதாவது ராமாயணத்தில் உள்ள வாலியின் ஜாதகத்தில், அவருடைய ஜாதகத்தில் கோட்சார குரு எட்டாம் இடத்திற்கு வரும்போது பதவியை இழந்தார் என்பதை குறிக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல அஷ்டம சனியை கடந்து வந்த உங்களுக்கு இது பெரிய பொருட்டே அல்ல.

சொல்லப்போனால் ரிஷப ராசிக்கு அட்டமாதிபதி மறைந்தது ஒரு விதத்தில் நல்லது.

அட்டமச் சனி இருக்கும் உங்களுக்கு குருவின் இணைவு சுபத்துவதுத்தை ஏற்படுத்துவதால் அட்டமச் சனியின் தாக்கம் 75 சதவீதம் குறைந்துவிடும்.

எட்டாமிடத்தில் சனி இருந்து அங்கு குரு சம்பந்தப்படும்போது சுபத்துவம் ஏற்படுவதால் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ சென்று பிழைக்கும் அமைப்பு ஏற்படும்.

குரு 5-ஆம் பார்வையால் 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சுப விரயங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தனகாரகன் குரு எட்டில் மறைந்தாலும், எட்டிலிருந்து இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் பணம் ஏதோ ஒரு வழியில் கடைசி நேரத்தில் கையில் கிடைக்கும்.

நாலாம் இடமான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு மனை வண்டி வாகனம் போன்றவற்றால் சுப செலவுகள் ஏற்படும். வீட்டை மராமத்து செய்ய ஏதுவான காலம். உடல்நலம் சீராக இருக்கும்

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பண வரவு அதிகரிக்கும்.ஆன்மீக சுற்றுலா வாய்ப்பு அமையும்.தந்தையின் உதவி கிடைக்கும்.

01- 6 -2020 வரை இந்நிலை நீடிப்பதால் நல்ல பண புழக்கம் ஏற்படும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

இதில் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் குரு சஞ்சரிக்கும் போதெல்லாம் குருவால் பெரிய தீமையை செய்ய முடியாது.

மற்றபடி இந்த குருபெயர்ச்சி ரிஷராசிக்கு பணவரவில் உள்ள பாடத்தை கற்று கொடுக்கும்.

ரிஷப ராசிக்கு 2020ஆம் ஆண்டு மிதமான பலன் ஆண்டாகவே இருக்கும்.

அறிவுரை
சனிபகவானின் அஷ்டமஸ்தான சஞ்சாரத்தின் விளைவாகவும், குருபகவானின் சஞ்சார நிலையினாலும் அதிக அலைச்சல், உழைப்பும் சிறு அளவில் ஆரோக்கியக் குறைவும் ஏற்படக்கூடும். கூடிய வரையில் உடல் நலனில் சற்று கவனமாக இருந்தால் போதும்.
பரிகாரம்
தினமும் காலையில் நீராடிய பின்பு தன்வந்திரி ஸ்தோத்திரம் சொல்லிவருவது சிறந்த பரிகாரமாகும்.
மாலையில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருளிய ஸ்ரீ ரக்ஷோ புவன நரசிம்மஸ்தோத்திரம் படிப்பது நல்ல பலனளிக்கும்.
சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தரிசனம் சிறந்த பலனளிக்கும்.
 ஸ்ரீ திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி தரிசன கைமேல் பலன் தரும்.

ரிஷப ராசியின் அதிபதி சுக்ரன் என்பதால் ரங்கநாதரையும்,தாயாரையும் வெள்ளிகிழமை வழிபடவும். ஆலங்குடி குரு பகவானை ஒரு முறை தரிசனம் செய்யவும்.

தினசரி காலை, மாலை இருவேளையிலும் வீட்டில் விளக்கு ஏற்றி, பூஜை செய்ய குரு தோஷம் விலகும்.

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

Leave a Comment