வரும் 29.1.2018 வருடம் ஹேவிளம்பி ஆண்டு திங்கள் கிழமை வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.
இந்த நாளில் திங்கள் கிழமை திருவாதிரை நட்சத்திரம் திரயோதசி
இந்த மூன்றும் ஒன்றாக வரும்
அபூர்வ நாள் இந்த அபூர்வ நாளில் நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்
இந்த அபூர்வ பிரதோஷம் அன்று நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் மற்றும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
*தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும்*.
*போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்*…
நாமும் இந்த அபூர்வ பிரதோஷ வழிபாடு செய்து நன்மைமை பெறுவோம் மற்றும் இந்த செய்தியை மற்றவர்களுக்கு அதிகம் பகிர்வோம்.
*சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம*……
⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛
*பிரதோஷ விரதம்!*
பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
*விரத முறை :*
🌟 வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
🌟 பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.
🌟 பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
🌟 முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
*பலன்கள் :*
பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம் நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்யம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகள், எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்..