Prabho Ganapathe Lyrics Tamil

ப்ரபோ கணபதே பாடல் வரிகள் (Prabho ganapathe lyrics)  இந்த பதிவில் உள்ளது…. விநாயகரை வழிபட இந்த பாடல் மிக சிறப்பு வாய்ந்த ஒன்று… இந்த பாடல் வரிகள் இந்த பதிவில் படித்து, விநாயகரின் அருளை பெறுவோம்….

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாய…….

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (2)

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே (2)

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே(2)

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே(2)

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே….

பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்

விநாயகர் ஸ்லோகங்கள்

விநாயகர் அகவல்  பாடல் வரிகள்

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)