சாரதா புஜங்கம் பாடல் வரிகள் | Sharada Bhujangam Lyrics in Tamil
ஆதி சங்கரர் அருளிய சாரதா புஜங்கம் பாடல் வரிகள் (Sharada Bhujangam)
சரஸ்வதி அம்பாள் பக்தி கீதம்
👇👇👇
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்
1.ஸுவக்ஷே ஜகும்பாம்
ஸுதா பூர்ணகும்பாம்
ப்ரஸாதா வலம்பாம்
ப்ரபுண்யா வலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம்
ஸதாநோஷ்ட பிம்பாம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும், க்க புண்யம் வாய்த்தவருக்கே எட்டிப்பிடிக்க முடிந்தவளும், கொடுக்கிறேனே என்ற சொல்லுடன் கூடிய கோவைப் பழ மொத்த உதடு உடையவளுமான எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை சேவிக்கிறேன்.
2. கடாக்ஷே தயார்த்ராம்
கரே ஜ்யானமுத்ராம்
கலாபிர்விநித்ராம்
கலாபை:ஸுபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம்
புரஸ்துங்கபத்ராம்
பஜேசாரதாம்பாமஜஸ்ரம்
மதம்பாம்
கடைக்கண்ணில் கனிவுகொண்டவள், கையில் ஞான முத்திரையும், கலைகளில் விழிப்பும், செயல்பாடுகளில் நல்லவற்றையும் கொண்ட கண்காணிப்புள்ள பதிவ்ரதையாயும், உயரிய நல்லவற்றையே தன் முன்னே காண்பவளாயும் இருக்கிற என தன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
3.லலாமாங்கபாலாம்
லஸத்கானலோலாம்
ஸ்வபக்தைகபாலாம்
யச:ஸ்ரீகபோலாம்
கரேத்வக்ஷமாலாம்
தநத்ப்ரத்னலோலாம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
நெற்றியில் சிறந்த திலகம் கொண்டவள், நல்ல கீதத்தில் ஈடுபாடுள்ளவள், தனது அடியார்களைப் காப்பவள், புகழ் அழகுடன் ளிரும் கன்னங்கள் உள்ளவள். கையில் ஜபமாலை, தெளிவான பழமையில் நேசமும் கொண்டவள், அத்தகைய எனதன்னை ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
4.ஸுஸீமந்த வேணீம்
த்ருசா நிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம்
நமத்வஜ்ரபாணீம்
ஸுதாமந்தராஸ்யாம்
முதா சிந்த்ய வேணீம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
நல்ல வகிடும், பின்னலும் கொண்டவள், கண்பார்வை காரணமாக மான்களை விஞ்சியவள், அழகிய கிளிப்பேச்சுள்ளவள். இந்திரன் வணங்க, அம்ருத பாணத்தால் தெளிவு கொள்ளாத முகபாவமுடையவள், கரைபுரண்டோடும் மகிழ்ச்சி கொண்டவள். அத்தகைய ஸ்ரீசாரதாம்பாளை வழிபடுகிறேன்.
5. ஸுசாந்தாம் ஸுதேஹாம்
த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ
மனந்தா மசிந்த்யாம்
ஸ்ம்ருதாம் தயஸை:ஸர்க
பூர்வதிதாம் தாம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
நல்ல அமைதியும், உடல்வாகும் கொண்டவள், கண் முடிகின்ற இடத்தில் கேசம் முடிவதும், கொடி போன்ற அங்கம் அமைந்தும் இருப்பவள். இவ்வளவு என்றோ, இப்படி என்றோ சொல்ல முடியாதவள். முனிவர்கள் தியானம் செய்யப்படுபவள், பிரம்மன் படைப்புக்கு முன்னமே இருப்பவள். அத்தகைய அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
6. குரங்கே துரங்கே
ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராலே மதேபே
மஹோக்ஷேதிரூடாம்
மஹத்யாம் நவம்யாம்
ஸதாஸாமரூபாம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
மான் மீதும், குதிரை மீதும், சிங்கத்தின் மீதும், கருடன் மீதும், அன்னத்தின் மீதும், யானை மீதும், விருஷபத்தின் மீதும் ஏறப் பயணிப்பவளும் மஹாநவயன்றும் எப்பொழுதும் ஸாம் வேத ஸ்வரூபிணியாக இருப்பவளுமான அன்னை சாரதாம்பாளை சேவிக்கிறேன்.
8. பவாம்போஜநேத்ராஜ
ஸம்பூஜ்ய மாநாம்
லஸன்மந்தஹாஸ
ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா
சாருதாட ங்ககர்ணாம்
பஜேசாரதாம்பா
மஜஸ்ரம் மதம்பாம்
பிரஹ்ம விஷ்ணு மகேச்வரர்களால் பூஜிக்கப்பட்டவள், அழகிய புன்முறுவலையே முகத்தின் அடையாளமாக உடையவள். அசையும் ன்னலெனத் தோன்றும் காதணி கொண்டவள். அத்தகைய சாரதாம்பாளை எனதன்னையை சேவிக்கிறேன்.
சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் முற்றிற்று.
சரஸ்வதி ஸ்தோத்திரம் பாடல் வரிகள்