Vellai Thamarai Saraswathi Song Lyrics Tamil

வெள்ளை தாமரை பூவில் (Vellai thamarai saraswathi song lyrics) என்ற சரஸ்வதி தேவியின் பாடல் இந்த பதிவில் உள்ளது… சரஸ்வதி தேவியை வணங்க இந்த பாடலும் ஒரு மிக சிறந்ததாகும்…. ஓம் சரஸ்வதி தேவியே போற்றி…

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்ரொளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்…

சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள்

மாணிக்க வீணை பாடல் வரிகள்

சரஸ்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

சரஸ்வதி அந்தாதி பாடல் வரிகள்

Leave a Comment

error: Copying content is Prohibited, Instead you can share it! :)