Powerful Meditation Technique in Tamil
வலிமையான தியான முறை… (பிரபஞ்ச தியானம்). (Powerful meditation technique) மந்திரங்கள் வலிமையானவை என்று கூறலாம் அதனால்தான் கோவில்களில் மந்திரங்கள் ஒலித்துக்கொண்டே உள்ளது.
மந்திரங்களில் மிகவும் வலிமையானது ஓம் என்னும் பிரணவ மந்திரம்தான்.
நமது அனைத்து குடும்பங்களுக்கும் தலைவரானவர் சூரியன். சூரியனில் இருந்து வெளிப்படும் ஒலி ஓம் என்றுதான் ஒலிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒலியின் அடிப்படையே ஓம் (ம்ம்ம், எ யூ ம்) என்னும் அதிர்வு தான். உதாரணமாக, ஏதேனும் இரண்டு பொருட்களை எடுத்துக் கொண்டு அதில் ஊராய்வை ஏற்படுத்திப் பாருங்கள் புரியும்.
ஓம் என்பதுதான் பிரபஞ்ச மந்திரம். ஏனென்றால் பிரபஞ்ச இயக்கமே அதிர்வுகளால் தானே நடக்கின்றது. அதிர்வின் இயல்பு ஓம் என்னும் ஒலி தானே?
பொருளின் இயக்கம், உயிரின் இயக்கம், உணர்வின் இயக்கம் அனைத்துமே அதிர்வுகளால் தான் நடக்கின்றது. அத்தகைய அசாத்திய அதிர்வை தியானத்தில் உணரலாம்.
தியானத்திற்கு ஏற்ற இடத்தில் ஏற்றதுபோல் அமர்ந்துகொள்ள வேண்டும். ஓம் என்று அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் ஓஓஓஓம்ம்ம்ம்ம்ம் என்று கூறியபடியே தியானிக்க வேண்டும்.
ஓம் என்னும் மந்திரத்தை எண்ணிக்கை இல்லாமல் உங்கள் மனம் கூறும்வரை செய்திடுங்கள். நீங்கள் உச்சரிக்கும் அதிர்வுகள் உங்கள் அலைபேசியில் அதிர்வுகள் வருவதுபோல் இருத்தல் வேண்டும்.
எண்ணிக்கை தேவையில்லை ஆனால் நீங்கள் உருவாக்கும் ஓம் என்னும் ஒவ்வொரு அதிர்வுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் வலிமை உள்ளது என்கிற உணர்வுடன் செய்யுங்கள்.
அந்த அதிர்வுகளை உணர முயற்சிக்க வேண்டும். அதிர்வுகள் உங்கள் தொண்டையில் உருவாகி வெளியேறுவது முதல் அந்த அறை முழுவதும் பரவுவது மற்றும் எதிரொலிப்பது வரை அனைத்தையும் உணர வேண்டும்.
உதாரணமாக, ஒரு மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ள உங்கள் அலைபேசியின் அதிர்வுகள் மேசை முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்துவதைப் போலவே. நீங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சுற்றியும் பரவ வேண்டும்.
இந்த தியான முறையை எந்த நேரத்திலும் செய்யலாம். கொஞ்சம் அமைதியான சூழல் கிடைத்தால் போதும்.
இந்த தியானத்தின் வலிமை உங்கள் முதல்நாள் தியானத்திலேயே உணர முடியும். இதை எங்கேயும் எப்போதும் செய்திடும் அளவிற்கு எளிமையானது.
உறங்கும் முன்னரும், அதிகாலை எழுந்ததும் இந்த தியானத்தை செய்தாலே உங்களால் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
அதிர்வு உங்கள் உள்ளும்-புறமும் ஏற்படுவதால் அதன் தாக்கம் உங்களுக்கு மிகவும் பிடித்ததாக மற்றும் உங்களால் உணரும் வண்ணமே இருக்கும். நீங்கள் உணர்வுடன் இருப்பதால் எண்ண ஓட்டங்கள் இருக்காது எனவே இந்த தியானத்தைத் உங்களால் எப்பொழுதும் தொடர்வது எளிமையாகவே இருக்கும்.
இதை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் அனுபவத்தை பதிவிடுங்கள். ஓம்குருவே துணை…
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என 2015 ஆண்டு டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடுகிறது. தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல், மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
உடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள்
உள்ளங்கை ரகசியம் மற்றும் சக்திகள்
யோகா பற்றிய வரலாறு மற்றும் பலன்கள்