Kumba rasi guru peyarchi palangal 2017-18

கும்ப இராசி அன்பர்களே…

உங்கள் இராசிக்கு குரு பகவான் 02.09.2017 அன்று 9-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி வருகிறார். செவ்வாய் சாரத்தில் அதாவது 3, 10-க்குரிய சாரத்தில் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் செய்வார். குரு பகவான் உங்கள் ஜென்ம இராசியையும், கீர்த்திஸ்தானத்தையும், பஞ்சமஸ்தானத்தையும் பார்வை செய்வதால் உங்கள் புகழ் ஓங்கும். மற்றவர்கள் பெருமைபட பேச வைக்கும். உடலில் புது பொலிவு உண்டாகும். தொட்டது துலங்கும். பொன் ஆபரணங்கள் சேரும். திட்டங்கள் வெற்றி பெறும். பலநாட்கள் பட்ட துன்பங்கள் தூசுபோல் பறந்து போகும். தொழில்துறையினர் பிரமாதமாக முன்னேறுவார்கள். புதிய தொழிலும் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, இடப்பெயர்ச்சி பெறுவார்கள். வீடு, மனை அமையும். பொதுவாக குரு பகவான் பல நன்மைகளை வாரி வழங்குவார். சரி, எந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? கொடுக்கல் – வாங்கலில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலருக்கு பித்ரு தோஷங்களால் சில பிரச்னைகளும் ஏற்படும். சகோதர – சகோதரி வழியில் பிரச்னைகள் வராதபடி பேச வேண்டும். மற்றபடி, குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் நன்மையே செய்வார். நல்வாழ்த்துக்கள்.

 

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்

 

 

 

உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லாரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்கள் ஜென்ம ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான பொன்னவன் எனப்போற்றப்படக்கூடிய குரு பகவான்  வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்புவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். வாக்கியப்படி 19-12-2017 முதல் ராசியாதிபதி சனிபகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். இதுமட்டுமின்றி ராகுவும் 6-ல் இருப்பது மேன்மேலும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களின் பலமும், வலிமையும் கூடும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக் கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெற்றிமேல் வெற்றியினை ஏற்படுத்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.

 

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

 

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.

 

கொடுக்கல்வாங்கல்

கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும். பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.

 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும்.

 

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும்.

 

பெண்கள்

குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம், செல்வாக்கு, உயரும். சிலர் அழகான புத்திரசெல்வத்தைப் பெற்றெடுப்பர். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் அமையும்.

 

அரசியல்

உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.

 

விவசாயிகள்

விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும்.முதலீட்டிற்குமேல் லாபத்தைப் பெற்றுவிட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி, மனை சேரும்.

 

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.

 

மாணவமாணவியர் 

மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றிலும் பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். உங்களால் உங்கள் பள்ளி,கல்லூரிகளின் பெயர், புகழ் உயரும்.

 

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை

குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகமும் வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடபுட லாக நடைபெற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெறும். கூட்டுத்தொழிலிலும் நல்ல லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் மறைந்து எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் மறையும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரை

குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில்  தொழில், வியாபாரத்தில் சிறப்பாக லாபம் கிட்டும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். உங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துகளாலும் சாதகமான பலனைப் பெறமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் மனமகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். பொன் பொருளும், ஆடை ஆபரணமும் சேரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு பதவி உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன் தொகை வசூலிப்பதில் எந்தத் தடையும் இருக்காது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கடந்தகாலப் பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலைகள் உண்டாகும். வாக்கியப்படி 19-12-2017 முதல் சனி பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்திலிருந்த தேவையற்ற செலவுகள் மறையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகி தடபுடலாக நிறைவேறும். பெண்கள் சிறப்பான குழந்தைபாக்கியம் பெறுவார்கள். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரமும் சிறப்பாக நடைபெறு வதால் லாபங்கள் பெருகும். போட்டி, பொறாமைகள் விலகி பொருட் தேக்கங்கள் குறையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். கொடுக்கல் -வாங்கலில் பிரமாதமான நற்பலன்களை அடையமுடியும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதன்மூலம் வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

 

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை

குரு பகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு தனஸ்தானமான 10-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் கொடுக்கல்-வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். உடல்நிலையில் புதுத்தெம்பும், உற்சாகமும் பிறக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்-உறவினர்களும் சாதகமாகவே இருப்பார்கள். தொழில், வியாபாரத்திலும் அமோகமான வெற்றிகள் கிடைக்கும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங் களாலும் சாதகமான பலனை அடைவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகள் சாதகமான பலனை ஏற்படுத்தும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. மாணவர்கள் கல்வியில் சற்று முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடையமுடியும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை

குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை, தீமை கலந்த பலன்களை அடையமுடியும் என்றாலும் சனி லாப ஸ்தானமான 11-லும், ராகு 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும்.முயற்சிகளில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடைவீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை உண்டாக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சுபகாரியங் களுக்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளலாம். குடும்பத்திலும் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்-வாங்கல் சரளமானநிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்படமுடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுக்களில் கவனமுடன் செயல்பட்டால் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

 

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை

குரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்களின் தேவைகளும் ஆசைகளும் திருப்திகரமாக நிறைவேறும். பெரிய காரியங்களையும் எளிதில் செய்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அனைத்தும் குறையும். நண்பர்கள் மற்றும் உறவி னர்கள் யாவரும் சாதகமாக இருப்பார்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் உங்களின் பெயர், புகழ் உயரும். கடன்கள் குறையும். எல்லாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கக்கூடிய உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். எல்லாவகையிலும் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். சிலருக்கு கடல்கடந்து செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் தனலாபமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில், வியாபரத்தில் அற்புதமான வளர்ச்சி ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் சரளமானநிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துவழியில் லாபம் கிட்டும். சேமிக்கமுடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.  விநாயகரை வழிபடுவது உத்தமம்.

 

பரிகாரம்

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

கிழமை: வெள்ளி, சனி     .

திசை: மேற்கு.

கல்: நீலக்கல்.

நிறம்: வெள்ளை, நீலம்.

தெய்வம்: ஐயப்பன்.

 

Leave a Comment