தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu rasi guru peyarchi palangal 2019-20

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 | மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2020

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

தனுசு ராசி பலன்கள் – 65/100.

தனுசு ராசியை பொறுத்த வரை குருபகவான், ராசி அதிபதியாகவும், நாலாம் அதிபதியாகவும் வருவார்.

இதுநாள்வரை 12ம் இடமான விருச்சிகத்தில் நின்று விரயத்தை கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது ராசியில் உள்ள சனி பகவானுடன் இணைந்து 7ம் வீட்டில் இருக்கும் ராகுவை பார்ப்பதால் ராகு மற்றும் சனியால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும்.

அதேநேரத்தில் தனுசு ராசியைப் பொறுத்தவரை இன்னும் ஏழரைச் சனி தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

பொதுவாக ஜென்ம ராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்ததும் என்ற ஒரு பாடல் ராமாயணத்தில் உண்டு.

எம்பெருமான் ஸ்ரீமன் ஸ்ரீராமனின் ஜாதகத்தில் ஜென்மத்தில் குரு வந்தபோது சீதையைத் தேடி வனத்தில் அலைந்தார் என்பது அதன் பொருள்.

குரு பொதுவாக ஜென்மத்தில் வரக்கூடாது.

ஆனால் இந்த விதி தனுசு ராசிக்காரர்களுக்கு முழுமையாக பொருந்தாது ஏனென்றால் ராசிக்கு அவரே அதிபதி.

இங்கு ராசி அதிபதியாகிய குருபகவான் ராசியிலேயே ஆட்சி பெறுவது ஒரு விதத்தில் நல்லதே.

குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவார்.

குரு பார்வை பெறும் இடங்கள் அனைத்தும் சிறப்பான இடங்கள் என்பதால் இதுநாள்வரை பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமலிருந்தது. இனி பிரச்சனைகளை சமாளிக்க கூடிய அளவிற்கு மனவலிமையும், பொருள் வளமும் கூடும்.

அதேநேரத்தில் ஏழரைச்சனி தொடர்வதால் அகலக்கால் வைக்க வேண்டாம்.

குரு 5-ஆம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும். பெரியோரின் ஆசியும் அருளும் கிடைக்கும்.

ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தடையின்றி நடைபெறும்.

ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும். ஆன்மீக எண்ணம் அதிகரித்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும்.

அடுத்த சில மாதங்களில் சனி பகவான் 2-ஆம் இடமான தன, குடும்ப , வாக்கு ஸ்தானத்திற்கு செல்வதால் பணம் சார்ந்த விஷயங்களில் மிக மிக எச்சரிக்கை தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது.

வேலை பார்க்கும் இடத்தில் வெறுப்பை உமிழ வேண்டாம்.

குடும்பத்தில் அவ்வப்போது குண்டு வெடித்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் விரிசல் உண்டாகும்.

எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பொதுவாக இந்த குருபெயர்ச்சி ,முன் இருந்த நிலைமைக்கு பரவாயில்லை.

இப்பொழுது பிரச்சனை சமாளிக்கும் நிலையை மட்டுமே கொடுக்கும் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.

இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.

30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவிஷயத்தில் கவனம் தேவை. 01 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.

தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர்வதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.

அறிவுரை
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பின்னிரவு நேரங்களில் வாகனம் ஓட்டுதல் தவிர்ப்பது அவசியம், கூடியவரையில் சிக்கனமாக செலவு செய்வது நன்மையளிக்கும். பிறர் பிரச்னைகளில் தலையிடவேண்டாம். அரசியல் பிரமுகர்கள் தவறான வழிகளில் செல்ல வேண்டாம். ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
பரிகாரம்
காலையில் நீராடிய பின்பு தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் படித்து வரவும்.
மாலையில் சனீஸ்வரபகவானின் ஸ்ரீ ரக்ஷோபுவன ஸ்தோத்திரம் படித்தல்
மேல்வெண்பாக்கம் ஸ்ரீ நரசிம்ம நாராயணர் தரிசனம் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்
4 24 வியாழக்கிழமைகளில் மாலையில் நெய்தீபமும், 24 சனிக்கிழமைகள் நல்லெண்ணெய் தீபமும் உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகில் உள்ள திருக்கோயில் ஒன்றிலோ ஏற்றி வருவது கைமேல் பலனளிக்கும்.
தினமும் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் பாராயணம் செய்தல். இதன் பலன் அளவற்றது.

ஆலங்குடி சென்று குருவை தரிசிக்க வாழ்வில் பெரிய மாற்றங்கள் நிகழும்.

திருப்பட்டூர் சென்று ப்ரம்மாவை வழிபட பரிபூரண நன்மை கிட்டும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-20

மேஷம் – http://bit.ly/mesham
ரிஷபம் – http://bit.ly/rishabam
மிதுனம் – http://bit.ly/mithunam
கடகம் – http://bit.ly/kadagam
சிம்மம் – http://bit.ly/simmam
கன்னி – http://bit.ly/kannirasi
துலாம் – http://bit.ly/thulam
விருச்சிகம் – http://bit.ly/viruchigam
தனுசு – http://bit.ly/thanusu
மகரம் – http://bit.ly/magaram
கும்பம் – http://bit.ly/kumbam
மீனம் – http://bit.ly/meenamrasi

Leave a Comment