Thula rasi Guru peyarchi palangal 2023-24

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்- Thula rasi Guru peyarchi palangal 2023-24

துலாக்கோல் போல் எதையும் சீர்தூக்கி பார்த்து எடை போடும்… தூய்மையான இதயம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே…!!

துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

களத்திர குரு – துலாம்

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே லாபம் (11-மிடம் ) சகோதரன் ,தைரியம் (3-மிடம்) ஜென்ம ராசி(1மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குரு பகவான் உங்க ராசிக்கு 6வது வீட்டிலிருந்து 7வது வீட்டிற்கு பெயர்ச்சியாக உள்ளார். இனி உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் பிறக்கிறது என்றே சொல்லலாம். 7வது கலஸ்த்திர ஸ்தானம் என்பதால் இழந்தவை எல்லாம் மீண்டும் கிடைக்கும். அர்த்தாஷ்டம சனியின் பிடியில் சிக்கி படாதுபாடு பட்டிருந்த துலாம் ராசியினருக்கு ஏற்கனவே சனி பெயர்ச்சியால் 50% விடிவு காலம் பிறந்திருக்கும். இப்போது குருபகவானும் உங்க ராசிக்கு சிறப்பான இடத்தில் அமர இருப்பதால் அதிர்ஷ்டம் தான்.

12 வருடங்களுக்கு பிறகு குரு பகவான் உங்க ராசிக்கு கலஸ்த்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், பொருளாதார ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகி, சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்தவந்த நெருக்கடிகள் நீங்கி, புதிய வாடிக்கையாளர்கள் வருகைத் தருவார்கள். இதனால், மந்தமாக கிடந்த வியாபாரம் சூடு பிடிக்கும். லாபம் எதிர்பார்த்தைவிடவும் அதிகமாகவே இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் துலாம் ராசியினருக்கு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நிச்சயம் திருமண யோகம் உண்டு. காதல் உறவில் இருந்த துலாம் ராசியினர் தம்பதிகளாவீர்கள். அதாவது, உங்க காதலுக்கு பெற்றோரிடத்தில் சம்மதம் கிடைத்துவிடும்.

மேலும், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த துலாம் ராசியினருக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் பல நன்மைகள் உண்டாகும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கலாம். அவர்களே வாழ்க்கை துணையாகவதற்கும் வாய்ப்புண்டு. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பட்ட கஷ்டங்கள், பட்ட அவமானங்கள் அனைத்திற்கு பொற்காலம் பிறக்கப் போகிறது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். மனை சார்ந்த பிரச்சனைகள் விலகி சாதகமான பலனை தரும்.

குரு பகவானின் சஞ்சாரம் அமோகமாக இருப்பதோடு குருபகவானின் பார்வையும் சிறப்பாக உள்ளது. அதாவது, குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிலருக்கு மனதிற்கு பிடித்த வேலை மாற்றம் உருவாகும். வாழ்க்கைத் துணையோடு இருந்துவந்த வாக்குவாதங்கள், பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பாராட்டு ஏற்படும். சொந்த தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும்.

அதேபோல், 7வது பார்வையாக உங்க ராசிக்கு சுய ஸ்தானத்தை பார்வையிடுவதால், கேது பகவானால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறையும். குடும்ப பிரச்சனையால் நிம்மதி இல்லாமல் இருந்திருக்கும், தற்போது எல்லாவிதமான பிரச்சனையும் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை பொங்கும். அரசாங்கத்தால் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 3வது வீடான இளைய சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், புத்தி ஸ்தானத்தை பார்வையிடுவதால், எதிலும் துணிந்து இறங்குவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்த மனக்கசப்பு விலகும். மாணவர்களுக்கு அற்புதமான காலம் பொறக்க போகிறது.

துலாம் ராசிக்காரர்களே..குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுகிறார். 12 ராசிகளில் அதிக பலனை அடையப்போவது துலாம் ராசிக்காரர்கள்தான். திருமண யோகம் கைகூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருபார்வை கிடைத்தாலே வாழ்க்கை பொன்னாக ஜொலிக்கும். மகிழ்ச்சியை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

பரிகாரம்:
வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் குடியிருக்கும் நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment