Mithuna rasi Guru peyarchi palangal 2021-22
மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal 2021-22
மிதுன ராசி அன்பர்களே, ராசிக்கு இது வரை 8ம் இடமான மகரத்தில் இருந்து கொண்டு பல வகையிலும் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருந்த குரு பகவான் இப்போது 9ம் இடமான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு நன்மை செய்யாத கிரகமாக குரு இருந்தாலும், அதன் பார்வை நிச்சயமாக நன்மைகளை மட்டுமே செய்யும். குரு தான் நின்ற வீட்டைவிட்டு தான் பார்க்கும் வீடுகளுக்கே அதிக நன்மை செய்யும். உங்களுக்கு 7, 10க்கு உடைய குரு 9ல் வருகிறார். தெய்வ பக்தி, பூர்வ புண்ணிய பலத்தால் சகல சுகமும், உடன் பிறப்புகள் ஆதரவும், நெருங்கிய உறவினர்களின் உதவியும், தூர தேச பயணங்களும் அதன் மூலம் ஆதாயங்களும் ஏற்படும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளிநாடு சென்று வரும் யோகம் கிடைக்கும். பொதுவாக 9ல் குரு நல்லது செய்வார். 9ல் இருக்கும் குருவால் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடும், குல தெய்வ வழிபாடும் பலனை முழுவதுமாக தரும். தெய்வ காரியங்களுக்காக பணம் நிறைய செலவு செய்ய வேண்டியது வரும். உங்கள் காரியங்கள் எதுவானாலும் அனைத்தும் வெற்றி பெரும். எதிர்பாராத திடீர் யோகம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். பெற்றோர்களின் உடல் நலன் சீராக இருக்கும். குரு அருளால் எதையும் துணிந்து செய்ய முற்படுவீர்கள். குரு மாறுதல் உங்கள் ராசிக்கு சிறப்பான பலனை தரும்.
உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 1ஆம் வீடு, 3ஆம் வீடு, மற்றும் 5 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. முதல் வீடு என்பது, திறமை, குணநலங்கள், பொதுவான வாழ்க்கை ஆகியவற்றையும்; 3 ஆம் வீடு என்பது, தகவல் தொடர்பு, துணிவு, கடவுள் நம்பிக்கை, இளைய உடன் பிறப்புக்கள், அண்டை அயலார் போன்றவற்றையும்; 5 ஆம் வீடு, குழந்தைகள், பூர்வ புண்ணியம், அறிவாற்றல், அன்பு, நினைவாற்றல், போன்றவற்றையும் குறிக்கிறது. இந்தப் பெயர்ச்சி பல வகைகளில் அதிர்ஷ்டம் அளிக்கும் பெயர்ச்சியாக அமையும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடலாம். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மன ஆழுத்தம், பயம் ஆகியவை நீங்கும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உற்றார், உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை மேம்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும்.
எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்குதீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு பெருகும். பூர்வீகச் சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வங்கியிலிருந்த ஆவணங்களை மீட்க முடியும். வீடு வாங்கும் கனவு நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள், அண்டை அயலார் ஆகியவர்களுடன் தற்காலிகமாக மனஸ்தாபம் வரலாம் என்பதால், கவனம் தேவை.
புதிய முயற்சிகளில் தெய்வ அருளால் வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அனுபவ அறிவை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். நீங்கள் எல்லாரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். பயணங்களில் பல அலைச்சல் இருக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசுவது, பழகுவது, சமூக பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் சற்று பின்னடைவு இருக்கும். உங்கள் வருமானமும் கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும் வருமானம் தேவைகளை நிறைவேற்றப் போதிய அளவு இருக்காது. அதிக கடன்களை வாங்க வேண்டாம். கடன் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. பல சவால்களை நேரடியாக சந்திக்க நேரும்.
பொதுவாக குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவ, மிகவும் பெரியோர்கள் உறுதுணையாக இருப்பர். மற்ற உறவினர்களுடன் நெருக்கம் சாதாரணமாக இருந்தாலும், அவர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. திருமணமான தம்பதிகளும் விவாதங்களில் ஈடுபடாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது உறவை பலப்படுத்தும். ஆரோக்கிய விஷயத்தில் பொறுத்தவரை மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம். வருமுன் காப்பது நல்லது என்பதை உணர்ந்து உங்களை தற்காத்துக் கொள்வது நல்லது.
உத்யோக இடத்தில் மேலதிகாரிகளுடனும் நல்லுறவு மேம்படும். அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்காது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்காது. தொழில், வியாபாரத்தில் போட்டி மற்றும் பொறாமைகளை சந்திக்க நேரும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் காண இயலாது. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கைப் பயணம் இந்தப் பெயர்ச்சியில் வெற்றிகரமாக அமையும்.
எப்படி பார்த்தாலும் இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்பினை தரும்.
பரிகாரம் : மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அங்கே ரங்கநாதரை தரிசித்து, அந்த ஆலயத்திலேயே வீற்றிருக்கும் ஸ்ரீ ராமாநுஜரை வணங்குங்கள். அதிகப்படியான நன்மைகளும், யோகங்களும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்