50 வருடங்களுக்கு பிறகு வரும் அற்புதமான இந்த மாசி மகம் – 24/02/2024

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாசி மகம் 🙏🙏🙏🙏

நம்முடைய வழிபாட்டு முறைகளில் சில தமிழ் மாதங்கள் வழிபாட்டிற்கென ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மாசி மாதமும் தெய்வ வழிபாட்டிற்கும் பூஜைக்கும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் வரக் கூடிய பல்வேறு விசேஷமான நாட்களில் மாசி மகமும் முக்கியமான ஒரு வழிபாட்டிற்குரிய நாள்.

மாசி மகம் புனித நீராடலுக்கு சிறப்பு வாய்ந்ததாக நாளாக கருதப்படுகிறது.இந்த மாசி மகமானது மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாள் தான். இந்த வருடம் அதே நாளில் பௌர்ணமியும் இணைந்து வந்திருப்பது மிகவும் அற்புதமான நாளாக கருதப்படுகிறது. இது பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

எல்லா நாட்களிலும் நாம் இறைவனின் வழிபட்டாலும் கூட சில நாட்களில் ஒரு சில வழிபாடுகளும் பரிகாரங்களும் அதிக பலனை தருவதாக இருக்கும். அத்தகைய பலனை தரக்கூடிய நாளில் இந்த மாசி மகமும் முக்கியமான நாள் .

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️