மகா சிவராத்திரி அன்று சொல்லவேண்டிய மந்திரங்கள் | maha shivaratri 2024 mantras in tamil
maha shivaratri 2024 mantras in tamil is given in this post
சிவ பஞ்சாட்சரம்: ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய
சிவபெருமானுடைய இந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பஞ்ச பூத சக்திகளையும் பெற முடியும். இதை கட்டாயம் இந்த நாளில் 108 முறை உச்சரிக்கலாம்.
சிவன் மூல மந்திரம்:
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
திருமூலர் அருளிய இந்த சக்தி வாய்ந்த மந்திரம் சிவனுடைய மூல மந்திரமாக கொள்ளப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இம்மந்திரத்தை உச்சரித்தால் எவ்விதமான துன்பங்களும் உங்களை விட்டு விலகி விடும்.
சிவபெருமான் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே!
மஹாதேவாய தீமஹி!
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்!!
கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும்.
சிவன் தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
இந்த தியான மந்திரத்தை உச்சரிப்பவர்கள் சகலமும் வசமாகும் என்பது நியதி.
சிவ ருத்ர மந்திரம்:
ஓம் நமோ பகவதே ருத்ராய
பாவம் போக சொல்ல வேண்டிய மந்திரம்:
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
பாவ வினைகள் இருந்து மோட்சம் பெறுவதற்கு சிவனுடைய இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். மகா சிவராத்திரி அன்று இம் மந்திரத்தை உச்சரித்தால் பலன்களும் இரட்டிப்பாகும்.
எம பயம் நீங்க சிவன் மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
வாழ்வில் பயம் இல்லாமலும் தைரியமாகவும் இருக்க, எம பயம் நீங்க, தோல்வி குறித்த பயங்கள் நீங்க சிவனுடைய இந்த மந்திரத்தை இன்றைய நாளில் உச்சரிப்பது நல்ல பலனாக இருக்கும்.
#பிரதோஷ #விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham viratham benefits !