குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22 Mesha rasi guru peyarchi palangal 2022-23
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே…!
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள். இதுவரையிலும் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணப் புழக்கத்தையும், பிரபலங்களின் அறிமுகத்தையும், வசதி வாய்ப்பையும் கொடுத்து வந்தார் குரு பகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.2023 வரையிலும் விரய வீடான 12-ம் வீட்டில் வந்து அமர்கிறார்.
புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வாகனம் அமையவும் வாய்ப்பு உண்டு. உறவினர் – நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். தன்னிச்சையாக திடீர் முடிவுகள் எடுப்பதைத் தவிருங்கள். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். கெளரவத்துக்காகச் செலவு செய்வதை நிறுத்துங்கள்.
வாழ்க்கைத் துணைவருக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம். எவருக்கும் தடாலடியாக வாக்குறுதி கொடுக்க வேண்டாம். எந்த வேலையையும் எந்தப் பொறுப்பையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்கவேண்டாம். ஒவ்வொன்றையும் நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், உடம்பில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று உருவான பயம் நீங்கும். வாகனத்தை ஓட்டுவதில் தடுமாற்றம் நீங்கும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல முடிவு கிடைக்கும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வேற்று மொழிக்காரர்கள் உதவுவர். அரசுக் காரியங்களில் அலட்சியம் மாறும். இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தன்னிச்சை யாகச் செயல்பட வேண்டாம்.
குருபகவான் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரையிலும் குரு பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு வேலையும் கிடைக்கும்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். வேற்றுமொழிக் காரர்களால் ஆதாயம் உண்டு. எனினும் சனிபகவான் உங்களுக்குப் பாதகாதிபதியாக இருப்பதால், திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள் வந்து செல்லும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். அதேநேரம், 8.8.22 முதல் 16.11.22 வரையிலும், குரு உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார். வேலைச் சுமை, பணப் பற்றாக்குறை விலகும்.
24.2.23 முதல் 22.4.2023 வரை குரு பகவான் உங்கள் தைரிய, ரோக ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், உறவினர்களுடனான பகை நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில்
பாக்கிகள் வசூலாகும். கொடுக் கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பல வகையிலும் கடன் வாங்கிப் புது முதலீடு செய்வீர்கள். வியாபார ரகசியங்களைக் காப்பது நல்லது. கமிஷன், உணவு, மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக லாபம் கிடைக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகவும்.
உத்தியோகத்தில்
வேலை கூடும். மேலதி காரிகளிடம் கவனம் தேவை. உயரதிகாரியின் பார்வை உங்கள் மேல் விழும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வகிப்பீர்கள். முக்கியக் கோப்புகளில் கவனம் தேவை. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்வில் முன்னேற மாறுபட்ட அணுகுமுறை தேவை எனும் பாடத்தைத் தருவதாக அமையும்.
பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திர நாளில் தஞ்சை மாவட்டம்-வலங்கைமான் வட்டத்திலுள்ள ஆலங்குடி ஶ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் வழிபட்டு வாருங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; வெற்றி கிட்டும்.
திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரையும், ஸ்ரீ எறும்பீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
Leave a Comment