Events

Magara rasi Guru peyarchi palangal 2022-23 | மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Magara rasi guru peyarchi palangal 2022-23

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Magara rasi guru peyarchi palangal 2022-23

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!!

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023

உங்களின் மதிப்பெண் – 40/100

உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!

பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். குருபகவான், 14.04.22 முதல் 22.4.23 வரை, ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். எதையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும். ஒரு வேலையை இரண்டுமூன்று முயன்று முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனினும் முடிவு வெற்றியாகவே அமையும்.

2022 குருப்பெயர்ச்சி மகரம் ராசிபலன்கள்2022 குருப்பெயர்ச்சி மகரம் ராசிபலன்கள்
இளைய சகோதரர் வகையில் பிணக்கு, வாயுக் கோளாறு வரலாம். வீண் கெளரவத்துக்காக சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களை நம்பவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் குறையாது. சில விஷயங்களை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

குருபகவானின் பார்வை பலன்கள்
குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்பும், அந்நியோன் யமும் குறையாது. அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வரவேண்டாம். உங்களுக் குள் மறைந்துக்கிடந்த திறமைகள் வெளிப்படும்.

குரு உங்களின் 9-வது வீட்டைப் பார்ப்பதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். நீங்களும் தரவேண்டிய கடனையெல்லாம் தந்து முடிப்பீர்கள். மகனின் திருமணத்தை தடபுடலாக முடிப்பீர்கள். குரு லாப வீட்டைப் பார்ப்பதால், புது முயற்சிகள் வெற்றி அடையும். திடீர் பண வரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். அரசியல் வாதிகளுக்கு மேலிடத்தின் ஆசி கிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் சேவக, விரயாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.

30.4.22 முதல் 24.2.23 வரை உத்திரட் டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். செலவுகளும் துரத்தும். ஆன்மிகத்தில் நாட்டம் பிறக்கும். வேற்று மொழிக் காரர்களால் ஆதாயம் உண்டு. 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும்.

24.2.23 முதல் 22.4.23 வரை குரு உங்களின் ரோக, பாக்கியாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், தந்தையுடன் மோதல் போக்கு நீங்கும். பிதுர் ராஜ்ஜிய சொத்துக்கள் வந்து சேரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுபநிகழ்வுகளால் வீடு களை கட்டும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில்
பற்று-வரவு உயரும். எனினும் சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் முரட்டுத்தனம் வேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் குடைச்சல் கொடுக் கவே செய்வார்கள். மருந்து, ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில்
விமர்சனம் வேண்டாம். மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். ஆனாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகள் ஒப்படைப்பார். சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேலைச்சுமை குறையும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி தைரியமாக முடிவெடுக்கும் சக்தியைத் தருவது டன், உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும் அமையும்.

பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திர நாளில் காஞ்சிபுரம் சென்று, ஶ்ரீஏகாம்பரநாதேஸ்வரரையும் அங்குள்ள ஶ்ரீதட்சிணாமூத்தியையும் வணங்கி வாருங்கள். மனவளம் குன்றிய அன்பர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.

கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டையில் வீற்றிருக்கும் பசுபதிநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
  • Recent Posts

    Lalitha sahasranamam Lyrics Tamil | ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள்

    Lalitha Sahasranamam Lyrics Tamil இந்த பதிவில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாடல் வரிகள் (lalitha sahasranamam lyrics tamil)… Read More

    2 days ago

    Sri lalitha pancharatnam lyrics tamil | ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

    ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராதஹ: ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ரதுல மௌக்திக ஷோபிநாசம் ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்டலாட்யம்… Read More

    1 week ago

    ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி | kala bhairava jayanti 2023 Date

    ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023) Date ஸ்ரீ காலபைரவர் ஜெயந்தி (Kala Bhairava Jayanti 2023)… Read More

    2 weeks ago

    ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார காயத்ரி மந்திரங்கள் | Maha vishnu gayatri mantra in tamil

    ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 10 அவதார (தசாவதாரம்) காயத்ரி மந்திரங்கள் ஸ்ரீ மகா விஷ்ணுவின் காயத்ரி மந்திரம் (maha vishnu… Read More

    2 weeks ago

    சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil

    சின்ன சின்ன முருகா முருகா பாடல் வரிகள் | chinna chinna muruga lyrics tamil சின்ன சின்ன முருகா… Read More

    2 weeks ago

    வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா | Villali Veeran Ayya Song Lyrics Tamil

    வில்லாளி வீரன் ஐயா பாடல் வரிகள் வில்லாளி வீரன் ஐயா வீர மணிகண்டனையா பாடல் வரிகள் அல்லது (Villali Veeran… Read More

    2 weeks ago