தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu rasi guru peyarchi palangal 2022-23
உதவி என்று வருபவர்களுக்கு தயக்கமின்றி… தன்னால் முடிந்த உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே…!!
தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே…!
சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும் என்ற சூட்சுமத்தை உணர்ந் தவர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை நான்காவது வீட்டிற்குள் அமர்கிறார். வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள்.
2022 குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள்2022 குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள்
உறவினர்கள், நண்பர்களின் விஷயத் தில் அத்துமீறி நுழைய வேண்டாம். நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாகக் கையாளுங்கள். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களைத் தவிருங்கள். குரு உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்வதால், அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பணத்தட்டுபாடு குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். எந்த சிக்கலாக இருந்தாலும் பெரியவர்களை வைத்துப் பேசி சுமுகமாக முடிக்கவும். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்படவேண்டாம். உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள்.
சில நேரங்களில் உங்களின் கோபதாபங்களை, கூடா பழக்கவழக்கங்களை வாழ்க்கைத் துணைவர் சுட்டிக்காட்டுவார்; தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். நேரம் தவறி சாப்பிடுவதைத் தவிருங்கள். சொத்து வாங்கும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எவரையும் விமர்சிக்கவேண்டாம்.
குருபகவானின் பார்வைப் பலன்கள்
குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங் களால் பயனுண்டு. மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புது வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் ராசி நாதனான குரு தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர்ப் பயணங்கள், தாயாரின் உடல் நிலை பாதிப்பு, வீடு வாகனப் பாராமரிப்புச் செலவுகள் அதிகரித்தல், எதிலும் ஒரு நாட்டமில்லாத நிலை வந்து நீங்கும்.
30.4.22 முதல் 24.2.23 வரையிலும் உங்களின் தன, சேவகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். முன்கோபம், வாக்குவாதம் வந்து நீங்கும். தோலில் அலர்ஜி வரக்கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டு. 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது.
24.2.23 முதல் 22.4.23 வரை குரு உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் உதவுவர். புது வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில்
லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பற்று – வரவு உயரும். என்றாலும் பெரிய முதலீடுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தப் புதிய யுக்திகளைக் கையாளுங்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் கருத்துமோதல்கள் வரக் கூடும்; வளைந்துகொடுத்துப் போகவும்.
உத்தியோகத்தில்
மற்றவர்களின் வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க நேரிடும். அலுவல ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. மேலதிகாரி யிடம் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரக்கூடும். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வருங்காலத்தில் சாதிப்பதற்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: பூரட்டாதி நட்சத்திர நாளில், கருவூரில் அருளும் ஶ்ரீபசுபதீஸ்வரரையும் ஶ்ரீதட்சிணாமூத்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.
நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
காரடையான் நோன்பு -விளக்கம்-விரத முறை *காரடையான் நோன்பு* 🙏🙏 *காரடையான் நோன்பு* *சிறப்பு பதிவு* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *15.03.2023* *புதன் கிழமை*… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் (more…) Read More
கந்தன் காலடியை வணங்கினால் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது... அருமையான மெல்லிய பாடல் முருகப்பெருமானை போற்றி பாடப்பட்டுள்ளது... … Read More
தைப்பூசம் / thai poosam என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில், பூசம் எட்டாவது… Read More
Draupadi amman 108 potri tamil திரௌபதி அம்மன் 108 போற்றி (Draupadi amman 108 potri tamil) -… Read More
Sani peyarchi palangal 2023-2025 மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கும் திருக்கணிதப் படி சனிப்பெயர்ச்சி பலன்கள், மதிப்பெண்,… Read More
Leave a Comment