கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kadaga rasi guru peyarchi palangal 2022-23
மென்மையான மனமும்… சிந்தித்து செயல்படும் உள்ளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே…!!
கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 70/100
கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே…!
சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள். குரு பகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ல் அமர்வதால், உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.
2022 குருப்பெயர்ச்சி கடகம் ராசிபலன்கள்2022 குருப்பெயர்ச்சி கடகம் ராசிபலன்கள்
அடிப்படை வசதிகள் உயரும்; அந்தஸ்து பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் சச்சரவுகள் விலகும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். வாழ்க்கைத் துணைவர் உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர் வழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சோர்ந் திருந்த உங்களை உற்சாகப் படுத்துவார். இனி சேமிக்கும் அளவுக்குப் பணம் வரும். வருங் காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங் களைத் திட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீட்டில் நல்லது நடக்கும்.
குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளி வட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை பைசல் செய்வீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவீர்கள். சிலர், வீடு மாற நேரிடும். அரசியல் வாதிகள் வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை குருபகவான் தன்னுடைய பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் திடீர் யோகம், பண வரவு, சொத்துச் சேர்க்கை எல்லாம் உண்டு. மகளுக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். புது வேலை அமையும். செல்வாக்கு கூடும்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் சப்தம, அட்டமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத் திரத்தில் குரு செல்வதால், கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டு. அதேநேரம் சிறு சிறு மனஸ்தாபங்களும் ஏற்படும். காலில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள்.
8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால், வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வீண் பழி வந்துசேரும். கடன் பிரச்னை மனதில் பயத்தை ஏற்படுத்தும்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் தைரிய, விரய ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
வியாபாரத்தில்
மந்த நிலை மாறும். அதிரடி சலுகைகளால் வாடிக்கையாளர்களை அதிகப் படுத்துவீர்கள். போட்டியாளர்கள் திணறுவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து போனாலும் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
உத்தியோகத்தில்
இதுவரை குறை கூறிய மேலதிகாரி இனி உங்களைப் பாராட்டுவார். பதவி உயர்வு தேடி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பர். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி மதில் மேல் பூனையாக இருந்த உங்களைக் குன்றிலிட்ட விளக்காக ஒளிரவைக்கும்.
பரிகாரம்: மூலம் நட்சத்திர நாளில், விருத்தாசலத்தில் அருளும் ஶ்ரீவிருத்தகிரீஸ்வரரையும், ஶ்ரீவிபசித்து முனிவரையும், ஶ்ரீதட்சணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.
சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்புக் கூடும்.
நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
சந்திரனுக்குக் கிடைத்த சாபம் | Chandran Vinayagar Story Tamil சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! ஒருமுறை, சந்திரன் கயிலைக்குச் சென்றிருந்தபோது,… Read More
Vinayaga 100 special information விநாயகர் சதுர்த்தி விரதம் சிறப்பு பதிவு. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகள் .… Read More
Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் (Vinayagar Agaval) - ஆசிரியர் ஔவையார் (14-ஆம் நூற்றாண்டு) விநாயகர்… Read More
ஓம் கணநாதனே போற்றி போற்றி ஓம் ஞான முதல்வனே போற்றி ஓம் வெள்ளை கொம்பனே போற்றி கணபதியே கணபதியே… கணபதியே… Read More
Vinayaka Chathurthi Pooja Procedure Tamil விநாயகர் சதுர்த்தி (7/9/2024) வழிபடும் முறைகள் (Vinayagar Chathurthi Pooja Procedure in… Read More
Vinayagar Statue directions வீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்? ⭐ விநாயகர் சதுர்த்தி, விநாயகரின் முக்கியமான விழாவாகும்.… Read More
Leave a Comment