26.12.2019 வியாழக்கிழமை அன்று #சூரிய_கிரகணம் இடம் பெற உள்ளது.

காலை 8.00 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்குப்பின்னர். பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.

இந்தக் கிரகணகாலப்பகதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்ளுவதை தவிர்துக்கொள்ளவும். இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் நஞ்சாகும் தன்மை உடையன. அவ்வாறு உணவுகள் இருந்தால் தர்ப்பை புல்லினால் அவற்றை மூடி வையுகள்.

வெற்றுக்கண்ணினால் சூரியனை இக்காலப்பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்கவும். கர்ப்பிணிப்பெண்கள் இக்காலப்பகுதிகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

#கிரகண_புண்ணிய_காலம்

கிரகணம் என்பது சூரியன் அல்லது சந்திரன் இவர்களின் நேர்கோட்டில் கேது அல்லது ராகு வருவது, இதை ஏன் கிரகண புண்ணிய காலம் என்று கூறுகின்றனர், ஏனெனில் இந்த வேளையில் அனைத்து தெய்வ சக்திகளும் செயலற்று இருக்கும், ஆகவே கிரகண வேளையில் ஒரு மனிதன் எந்த நல்ல காரியங்களையும் செய்ய கூடாது அப்படி செய்தால் தெய்வ அணுகரஹம் கிடைக்காது, மேலும் ஒருவரின் கர்மா முழுமையாக இயங்கும் நேரமும் இதுவே ஆம் ஒருவரின் சஞ்சித கர்மா முழுமையாக செயலப்படும் நேரமே கிரகண நேரம், அப்படி எனில் இதை ஏன் புண்ணிய காலம் என்று முன்னோற்கள் குறிப்பிட்டனர் எனில் அந்த காலத்தில் நான் மேலே கூறியதை புரிந்துகொள்ளும் அளவுக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் இந்த வேளையை புண்ணிய காலம் என்று கூறிவைத்தனர், இப்படி குறிப்பிடுவதால் மனிதன் அந்த வேளையில் எந்த காரியத்தையும் செய்யாமல் தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடுவான் என்பதே இதன் நோக்கம், சரி தெய்வம் செயலிழந்து இருக்கையில் தெய்வ வழிப்பாடு எப்படி பலனளிக்கும் என்று வினா வரும், உண்மையில் தெய்வம் செயலிழப்பதில்லை மனிதனின் கர்மா முழு வீச்சில் செயல்புரியும் பொது அதில் தெய்வம் குறிக்கிடுவத்திலை என்பதே உண்மை, அப்படி எனில் இந்த வேளையில் வழிப்பாடு செய்தால் தெய்வம் எப்படி அருள் புரியும் என்று வினா எழும், விடை என்ன தெரியுமா நிச்சயமாக அருள் புரியும் ஏனெனில் நீங்கள் நன்றாக உற்று நோக்கினால் இந்த கிரகண வேளையில் பலர் தெய்வ வழிப்பாடு செய்யாமல் பிற வேலையில் ஈடுப்படுவார்கள் இப்படி இவர்கள் ஈடுப்படுவதற்க்கு காரணம் என்ன தெரியுமா? அவர்களின் கர்மா தான், அதையும் மீறி வழிப்பாடு செய்பவர்கள் நிச்சயமாக தெய்வத்தின் அருளை முழுமையாக பெற்று சஞ்சித கர்மாவை கழிக்க வழிபெருவார்கள்…

கிரகணம் ஏற்ப்படும் பொது நம் சஞ்சித கர்மா முழுவீச்சில் வலு பெறுகிறது அல்லவா அதன் தாக்கம் வாழ்நாள் முழுவதும் எதிரொலிக்கும் ஆம் இது அனுபவத்தில் கண்ட உண்மை, இந்த வலுவை எதிர்கொள்ளவே தெய்வ வழிப்பாடு இன்னொன்றை நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் கிரகண வேளையில் கோயில் நடை அடைக்கப்படுவதின் காரணம் என்ன தெரியுமா?, ஒருவரின் கர்மா முழு வீச்சில் செயல்புரியும் பொது தெய்வம் குறிக்கிடுவதில்லை மேலும் அவர் கர்மா வழிவிட்டால் தான் அந்த வேளையில் அந்த நபர் தெய்வ வழிப்பாடு செய்ய முடியும் அப்படி அவர் செய்ய முனைகையில் அதை அவரின் வீட்டில் செய்ய வேண்டும் என்பதற்காகவே கோயில் நடை அடைக்கப்படுகிறது, கிரகண வேளையில் நாம் அழைத்தால் மட்டுமே தெய்வம் துணைக்கு வரும் அப்படி நாம் கர்மா முழு நிலையில் செயல்புரியும்போது அழைத்தால் வாழ்நாள் பூரவும் அந்த தெய்வம் நம்மை காக்கும் ஏனெனில் நம் கர்மாவே வழிவிட்டதால்..

கிரகண வேளையில் #பிதுர்_தர்ப்பணம்..

கிரகணம் பிடித்து அது முடிவடையும் வேளையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது மிக பெரிய பாக்கியம் ஆகும், இந்த வாய்ப்பு அனைவருக்கும் அமைவத்தில்லை ஏனெனில் சஞ்சித கர்மா, கிரகணம் முடிந்து நாம் தரும் தர்ப்பணம் நேரடியாக பிதுர்க்களுக்கு செல்கிறது அவர்கள் இதை மிக மகிழ்ச்சியாக ஏறப்பார்கள், இதனால் ஒருவர் செய்த சஞ்சித கர்மா அந்த வேளையில் நம் முன்னோர்களின் ஆசியால் குறைக்கிறது, ஆனால் ஒருசிலருக்கு தர்ப்பணம் செய்த பின்பு சஞ்சித கர்மா கடுமையாக தாக்கும் இதன் காரணம் முன்னோர்கள் அதை ஏற்கவில்லை என்பதால், அதாவது இவரின் சஞ்சித கர்மா அனுபவித்தே கழிக்க வேண்டும் என்று அர்த்தம், இதை ஜனன ஜாதகத்தை வைத்து கர்மா செய்யும் கொடுபிணை இருக்கிறதா என்று ஒரு ஜோதிடரால் கூறமுடியும், இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு பிதுர் காரியம் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை அப்படியே செய்தாலும் அவரின் சஞ்சித கர்மாவால் அசுபம் நிகழும், இவர்கள் கர்ம காரியம் செய்யாமல் இருப்பதே மேல்..

26/12/2019 அன்று நிகழும் கிரகணம்..

நாளை நிகழவிருக்கும் #கிரகணம்_காலை_8_மணி_முதல்_11_30_வரை_நிகழ்கிறது, இந்த கிரகணம் தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் நிகழ்கிறது, இதில் உள்ள சூழச்சமம் என்ன என்று பார்ப்போம்..

இந்த கிரகணம் நிகழும் தனுசில் தற்ப்போது குரு அவ ஆரோகன கதியில் மூல திரிகோண வலுவில் உள்ளார் மேலும் இந்த கிரகணம் கேதுவினால் ஏற்ப்படுகிறது அன்று வியாழக்கிழமை என்பது கூடுதல் விசேஷம், இந்த கிரகண வேளையில் செய்யப்படும் தெய்வ வழிப்பாடு 100% பலன் தரும் ஏனெனில் குரு வலுவாக இருக்கும் பொது காலபுருஷ வீடான தனுசில் கேதுவால் நிகழும் இந்த கிரகணம் தெய்வ காரியம் மற்றும் வழிப்பாட்டிற்க்கு மிகவும் உகந்தது, இந்த வேளையில் சிவ நாம ஜபம் செய்தால் மிக அதிக நன்மை கிடைக்கும், மேலும் அன்று கிரகண காலம் முடிந்து தரும் தர்ப்பணம் மிக நன்மையை தரும், மேலும் கேதுவை குறிக்கும் உறவுமுறை காரக முன்னோர்களுக்கு தரப்படும் தர்ப்பணம் மிக மிக அதிக நன்மை அளிக்கும், அதே வேளையில் கேதுவை குறிக்கும் காரக உறவு உயிருடன் இருந்தால் அவகளிடம் ஆசி பெறுங்கள் மேலும் அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள் மிக பெரிய புண்ணியம் ஆகும், ஆகவே எல்லோரும் இந்த கிரகண புண்ணிய காலத்தை பயன்படுத்திக்கொள்ளவும்…

 

சூரிய கிரகணம்*

26.12.19 இன்று சூரிய கிரகணம் காலை 8.05 மணியிலிருந்து காலை 11.20 மணி வரை நடைபெறுகிறது.

*கிரகண சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் : அனுஷம், கேட்டை, மூலம், உத்திராடம், அசுவினி, மகம்.*

அந்த நேரத்தில் மேற்கண்ட
நட்சத்திரத்திங்களில் பிறந்தவர்கள் அவர்களின் நட்சத்திரத்திற்கான காயத்ரியை *குறைந்தது 108 முறை அல்லது கிரகணம் முடியும் வரை சொல்லவும்.*

*நட்சத்திர காயத்ரிகள்*

*அனுஷம்:*

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தந்நோ அனுராதா ப்ரசோதயாத்.

*கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தந்நோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்.

*மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி
தந்நோ மூலப் ப்ரசோதயாத்.

*அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தந்நோ அச்வநௌ ப்ரசோதயாத்.

*மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தந்நோ மக ப்ரசோதயாத்.

*பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி
தந்நோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்.

*உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி தந்நோ உத்ராஷாடா ப்ரசோதயாத்.

Leave a Comment