ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள் திருக்கோவில் | singaperumal koil narasimha temple
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்:
இந்தப்புனித தலம் தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்திற்குத் தெற்க்கே தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரத்திலிருந்து சுமார் 22 கி .மீ தூரத்தில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிலையத்திற்கும் , ரயில்நிலையத்திற்கும் அருகாமையில் செங்கற்பட்டு வட்டம் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மூலவர் : ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள்
உற்சவர் : ஸ்ரீ ப்ரஹலாத வரதர் ஸ்ரீதேவி , பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்
தாயார் : ஸ்ரீ அஹோபிலவல்லித் தாயார்
விமானம் :ப்ரணவகோடி விமானம்
தீர்த்தம் : சுத்த புஷ்கரணி
க்ஷேத்ரம் : பாடலாத்ரிபுரம்
ஆகமம் : ஸ்ரீ வைகாநஸம்
ஸ்தல விருக்ஷம் : பாரிஜாதம்
ஆகமம் வழிபாடு : ஸ்ரீவைகாநஸ பகவத் சாஸ்திரம்
இதர சிறப்புகள் :
ஸ்ரீ ஆண்டாளுக்கும் , ஸ்ரீ லக்ஷ்மி நர்ஸிம்ஹ பெருமாளுக்கும் தனித் தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன .
மற்றும் ஆழ்வார்கள் , ஆச்சர்ய புருஷர்கள் சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன. சன்னதி தெரு முனையில் சிறிய திருவடிகள் ( ஹனுமார் ) சன்னதியும் அமைந்துள்ளது.
singaperumal koil narasimhar temple timings: 7.00 a.m. to 12.00 a.m. and 4.30 p.m. to 8.30 p.m
guduvanchery to singaperumal temple route location map
திருத்தல வரலாறு :
இத்திருக்கோவில் சிறந்ததொரு புராண ஸ்தலமாகும்.பிரம்மாண்ட புராணத்தில் இக்கோவிலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது . நாம் அனைவரும் முக்கண்ணுடைய எம்பெருமான் சிவபெருமானை தரிசித்திருப்போம் . ஆனால் இத்திருத்தலத்திலோ ஸ்ரீ நரசிம்மஹ் பெருமாள் முக்கண்ணுடையவராய் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் . நரசிம்மஹ் அவதார காலத்தில் இக்கோவிலை சுற்றி பெரிய ஆரண்யம் ( காடு) இருந்ததாகவும் , அக்காட்டில் ஜாபாலி என்னும் மஹரிஷி தவம் செய்து கொண்டிருந்ததாகவும் , அவரது வேண்டுகோளுக்கிணங்க , ஸ்ரீ நரசிம்மஹ் பெருமாள் இரண்யனை வதம் பண்ணியவுடன் உக்ர நரசிம்மராஹ ( அதாவது கோப மூர்த்தியாக ) காட்சி கொடுத்ததாக வரலாறு கூறுகிறது .கோவில் அமைப்பின் மூலம் பார்க்கும் போது பல்லவர் காலத்திய குடைவரைக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்தல புராணந்தர்கதம்
கீழ்கண்ட ஸ்துதியை நம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், உள்ளம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் பெருமாள் நம்மைக் காது ரக்ஷிப்பார் என்பது அனுபவப்பூர்வ உண்மை .
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹப் பெருமாள் ஸ்துதி
ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ஹர் ஸ்லோகம் : —
ஜிதந்தே மஹாஸ்தம்ப ஸம்பூத விஷ்ணோ!
ஜிதந்தே ஜகத்ரக்ஷணார்தாவார
ஜிதந்தே ஹரே! பாடலாத்ரௌ நிவாஸின்
ஜிதந்தே ந்ருஸிம்ஹ ப்ரஸீத ப்ரஸீத
நமஸ்தே ஜகந்நாத விஷ்ணோ முராரே
நமஸ்தே ந்ருஸிம்ம அச்யுதாநந்த தேவ
நமஸ்தே க்ருபாலோ சக்ரபாணே
நமஸ்தம்ப ஸம்பூத திவ்யாவதார
பரப்ரஹ்மரூபம் ப்ரபுத்தாட்டஹாஸம்
கரப்ரௌல சக்ரம் ஹரப்ரஹ்மஸேவ்யம்
ப்ரஸந்நம் த்ரிநேத்ரம் ஹரிம் பாடலாத்ரௌ
சான்மேக காத்ரம் ந்ருஸிம்ஹம் பஜாம்
கிரிஜந்ருஹரிமீசம் கர்விதாராதி வஜ்ரம்
பரமபுருஷமாத்யம் பாடலாத்ரௌ ப்ரஸன்னம்
அபய வரத ஹஸ்தம் சங்க சக்ரேததாநம்
சரண மிஹபஜாம் சாச்வதம் நாரஸிம்ஹம்
ஸ்ரீந்ருஸிம்ஹ! மஹாஸிம்ஹ! திவ்யசிம்ஹ!
கிரிஸம்பவ! தேவேச! ரக்ஷமாம் சரணாகதம் … !!!
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி.
மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், இந்த ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால் அருள்மிகு அஹோபிலவல்லி சமேத ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஓடோடி வந்து நம்மை காத்து ரக்ஷிப்பார் என்பது அனுபவபூர்வமாக கண்டறிந்த பேரின்பம்.
ஸ்ரீ நரஸிம்ஹ ! மஹாஸிம்ஹ ! திவ்யஸிம்ஹ ! கிரிஸம்பவ ! தேவேச !ரக்ஷமாம் சரணாகதம் .