நம் வேண்டுதல் நிறைவேற செய்ய வேண்டிய விஷயங்கள் :

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை உண்டு.அந்த கவலைகளை இறைவனிடம் சொல்லி ,
குறைகள் நீங்கி வளமான வாழ்கை அமைய வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் வேண்டுதல்.
அவ்வேண்டுதல் நிறைவேற சில நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்.

முதலில் தேவையற்ற வீணான சிந்தனைகளை தவிர்த்து , மனதை ஒருமுக படுத்தி , அமைதியாக கோவிலை வலம் வரவும்.

கொடிமரத்தை வணங்கிய பின்னரே மூலவரை வழிபட வேண்டும். பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

தேவையற்ற வீணான சிந்தனைகளை தவிர்த்து , மனதை ஒருமுக படுத்தி , அமைதியாக கோவிலை வலம் வரவும்.

தெய்வங்களை கும்பிடும்போது கூப்பி கைகளை முகவாயில் தங்கி கைகளை நெஞ்சு பகுதியில் வைத்து மனதார வேண்டவும்.

மூலவர் சன்னிதானத்தில் கீலே விழுந்து கும்பிட வேண்டாம்.

கண்களை மூடாமல் வேண்டுதலை இறைவனை பார்த்து மனமுருகி வேண்டவும்.

எல்லா தெய்வத்தையும் வணங்கி விட்டு பின்னர் மீண்டும் கோடி மரத்தின் அருகில் வந்து மூலவரை பார்த்து கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடவும்.

கோவில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருந்தால் வடக்கு புறம் தலை வைத்து வணங்கவும்.
கோவில் வடக்கு அல்லது தெற்கு நோக்கி இருந்தால் கிழக்கு நோக்கி தலை வைத்து வணங்கவும்.

பின்னர் சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தவாறு நம் வேண்டுதலை மனதிற்குள் வேண்டவும்.
இறுதியாக கோவிலை விட்டு வெளியில் வந்த பிறகு கோபுரத்தை நோக்கி வணங்கவும்.

 

 

 

Leave a Comment