Thula rasi Guru peyarchi palangal 2021-22
துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்- Thula rasi Guru peyarchi palangal 2021-22
துலாக்கோல் போல் எதையும் சீர்தூக்கி பார்த்து எடை போடும்… தூய்மையான இதயம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே…!!
துலாம் ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4ல் இருந்த குரு இப்போது 5ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். பொதுவாக 2, 5, 7, 9, 11 ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம், யோகம் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3க்கும் 6க்கும் உடைய குரு நன்மை செய்யும் கிரகம் அல்ல என்றாலும் அதன் சுப பார்வை நன்மையை மட்டுமே நிச்சயம் செய்யும். உங்கள் ராசிக்கு 9, 11,1 ஆகிய மூன்று இடங்களுக்கு பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும். ஆரோக்கிய விஷயத்தில் எல்லா குறைபாடுகளும் முழுவதும் நீங்கிவிடும். வளமான குடும்பம் அமையும். புத்திர பாக்கியம் கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் தாமதப்படலாம். சிலர் காதல் விவகாரங்களில் ஈடுபடக்கூடும். உடல் நிலை பொருத்தவரை உணவு விஷயங்களில் கவனம் தேவை. எப்படி பார்த்தாலும் குரு பெயர்ச்சி ஏற்றமான பலன்களே தரும்.
5-ம் இடம் என்பது குருவிற்கு சிறப்பான ஒரு இடம். 5-ம் இடம் என்பது சிந்தனையை பற்றி சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையை உருவாக்குவார். மேலும் சிறப்பு பார்வை ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் புதுமையான எண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி பெற முடியும். உங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். புதிய பாதையில் பயணிக்க விரும்புவீர்கள். வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். உறவினர்கள் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியும். அடிப்படை வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். குடும்ப உயர்வுகள் சீராகும். உடலிலும் மனதிலும் புது தெம்பு பிறக்கும். எங்கும் எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும்.
நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வண்டி, வாகனம் வாங்க முடியும். திருமண காரியம் நடைபெறும். சுப செலவுகள் கூடுதலாகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய சொந்த பந்தங்கள் மீண்டும் வந்து இணைவர். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எதிரிகள் ஒதுங்கிய நிற்பர். நட்பு வழியில் கவனம் தேவை. தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய சொத்து சேர்க்கையும் ஒரு சிலருக்கு அமையும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வழியே வந்து பேசுவர். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் எண்ணங்கள் பூர்த்தியாகும். திருமண தடை உள்ள ஜாதகருக்கு குரு அருளால் விரைவில் திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை குருவே பார்ப்பதால் வழக்கு விவகாரங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபட முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஏற்படும். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது.
தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு விடாமல் வேறு வேலை தேட முயற்சிக்கவும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் அதிக ஆர்வம் கூடும். தொழில், வியாபாரம் சிறப்புடன் அமையும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய தொடர்புகள் கிடைக்கும். இந்த குருபெயர்ச்சியில் பல நன்மைகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.
பரிகாரம் : ஆஞ்சநேய பெருமானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்
துலாம் ராசி அன்பர்களுக்கு, சிறந்த பரிகார ஸ்தலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் ஆகும். எனவே இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வாருங்கள். அதிக நன்மைகளைப் பெற முடியும். அதேபோல சிவாலயங்களில் இருக்கும் தட்சிணாமூர்த்தி குரு பகவானையும் வணங்கி வாருங்கள். பெரும் நன்மைகளை பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.
திருச்செந்தூரில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானைச் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்