Kanni rasi guru peyarchi palangal 2020-21

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Kanni rasi guru peyarchi palangal 2020-21

கன்னி ராசி பலன்கள் – 90/100.

கவனம் எதில் இருந்தாலும்… தன் கடமை தவறாத கன்னி ராசி அன்பர்களே…!!

நடைபெற இருக்கின்ற குருப்பெயர்ச்சியில் குருவானவர் கன்னி ராசிக்கு நான்காம் இடத்திலிருந்து பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசியையும் பார்க்கின்றார்.

மனதில் இருந்துவந்த பல குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதுமையான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு :

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். சகோதர, சகோதரிகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் நெருக்கமானவர்களின் தலையீடுகளை தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மாணவர்களுக்கு :

பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெற இயலும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளில் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும், ஆதரவுகளையும் பெற முடியும்.

 

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பயிர் விளைச்சல்கள் சாதகமாக அமைந்திருந்தாலும், லாபங்கள் குறைவாக கிடைக்கும். கால்நடைகளின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையாட்களிடம் நிதானமாக செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும்.

 

கலைஞர்களுக்கு :

கலைத்துறையில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். புத்துணர்ச்சியும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். வயதில் மூத்த மற்றும் பிரபலமானவர்களின் அறிமுகங்கள் மற்றும் நட்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்புகள் கிடைக்கும்.

 

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும், கட்சி தொடர்பான பணிகளில் ஆதரவுகளும் கிடைக்கும். எதிர்பாராத சில நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் தொண்டர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியையும், இலக்குகளையும் அடைவீர்கள்.

 

வியாபாரிகளுக்கு :

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவும், அறிமுகமும் மனதிற்கு புதியதொரு உத்வேகத்தை ஏற்படுத்தும். அழகு பொருட்கள் சார்ந்த விற்பனைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, தொட்ட காரியங்களைத் துலங்கவைப்பதுடன், திடீர் யோகங்களை அளிப்பதாகவும் அமையும்.

பூர்வ புண்ணிய குரு குரு 5ஆம் வீட்டில் வரப் போகிறார். புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 என்றாலும் குரு அதிசாரமாக செல்லும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். சில பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் ஸ்ரீராகவேந்திரரை வழிபாடு செய்துவர மனை மற்றும் சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது திருப்புலிவனம். இவ்வூரில் அருளும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணாமூர்த்தியை, சித்திரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள்; வெற்றி உண்டு.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment