Guru Peyarchi Palangal 2021-22 Parigarangal

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 – 2022 (Guru Peyarchi Palangal 2021-22)

ஆண்டுக்கு ஒரு முறை நிகழக்கூடிய குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி பிலவ வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி சனிக்கிழமை அமிர்த யோகமும் சுக்கிலபட்சத்து தசமி திதியில் மதியம் 2.48 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் நேர்கதியில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

குரு பகவான் திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று (20.11.2021) அமிர்த யோகமும் பிரதமை திதியில் இரவு 11.31 மணி அளவில் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

இந்த முறை நடக்கும் குரு பெயர்ச்சியே முழுமையான குருபெயர்ச்சியாகும். ,மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி 146 நாட்கள் சஞ்சாரம் செய்கின்றார். இந்த குரு பெயர்ச்சியில் குரு ஒரு ராசியில் ஒரு வருடம் நின்ற பலனை செய்வார். இது போன்ற நிகழ்வுகள் பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும்.

மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து தொழிலில் பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தந்த குரு இப்போது ராசிக்கு யோகத்தை அளிக்க கூடிய 11ம் இடமான லாப ஸ்தானத்தில் வருகிறார். குரு லாப ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்லது. அடுத்த ஒரு வருட காலத்திற்கு நல்லது நடக்க போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பரிகாரம் : பௌர்ணமி நாட்களில் கிரி வலம் செல்லவும்.

மேஷராசிக்காரர்களுக்கு பலவிதத்திலும் நன்மைகளை தரக் கூடியவர் திருச்செந்தூர் முருகப் பெருமான். அது குரு ஸ்தலமும் கூட..! எனவே மேஷ ராசிக்காரர்கள், திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வணங்கி வந்தால் மேலும் பலவித நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.

தக்கோலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். வாழ்வில் ஆதரவில்லாமல் தவிக்கும் முதியோர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குருவின் அருள் உங்களோடு இருக்கும்.

 

ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

ரிஷப ராசி அன்பர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில இருந்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். 10ல் குரு பதவியை கொடுப்பர் என்று சொல்ல வேண்டும். செல்வங்கள் சேர்த்து தான தர்மங்கள் செய்யும் மன நிலை உருவாகும். பலரது பாராட்டுகளை கிடைக்க பெறுவீர்கள்.

பரிகாரம் : பெற்றோர்களின் கால்களில் விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஆசி பெறுவது சிறப்பு

ரிஷப ராசி அன்பர்கள், திருச்சி வெக்காளியம்மன், திருவக்கரை வக்ரகாளியம்மன் முதலான ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் அதிகப்படியான நன்மைகளும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

தென்குடித்திட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சணாமூர்த்தியைச் சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு உதவுங்கள். அவர்களின் கல்விக்குச் செய்யும் தானம் உங்கள் துன்பங்களைத் தூளாக்கிவிடும்.

 

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

மிதுன ராசி அன்பர்களே, ராசிக்கு இது வரை 8ம் இடமான மகரத்தில் இருந்து கொண்டு பல வகையிலும் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருந்த குரு பகவான் இப்போது 9ம் இடமான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு நன்மை செய்யாத கிரகமாக குரு இருந்தாலும், அதன் பார்வை நிச்சயமாக நன்மைகளை மட்டுமே செய்யும். குரு தான் நின்ற வீட்டைவிட்டு தான் பார்க்கும் வீடுகளுக்கே அதிக நன்மை செய்யும்

பரிகாரம் : மனதை கட்டுப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயம் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அங்கே ரங்கநாதரை தரிசித்து, அந்த ஆலயத்திலேயே வீற்றிருக்கும் ஸ்ரீ ராமாநுஜரை வணங்குங்கள். அதிகப்படியான நன்மைகளும், யோகங்களும் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவுங்கள் குறிப்பாக மாங்கல்யம் வாங்கிக் கொடுத்தால் உங்கள் வாழ்வில் செல்வ வளம் கிடைக்கும்.

 

கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

கடக ராசி அன்பர்களே, இதுவரை ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து ராசியை பார்த்து கலப்படமான பலன்களை தந்த குரு பகவான் ராசிக்கு 8ம் இடமான கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். 8ல் குரு இருக்கப்போவதால் மிக பெரிய நன்மைகளும் இல்லை தீமைகளும் இல்லை. கும்ப ராசிக்கு குரு நன்மை செய்யாத கிரகம் என்பதால் 8ம் இடத்தில் அது மறைவு பெறுவதை கண்டு பயப்பட தேவையில்லை

பரிகாரம் : வியாழக்கிழமையில் ஏழைகளுக்கு தானம் செய்யவும்

கடகராசிக்காரர்களுக்கு எப்போதுமே ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் ஸ்ரீ மகா விஷ்ணு வழிபாடு மிகச் சிறந்த பலன்களை தரும். அதேபோல குருபகவான் ஆலயங்களாக இருக்கக்கூடிய ஆலங்குடி, திட்டை போன்ற ஆலயங்களுக்கும் சென்று வருவது மிகச் சிறந்த பலன்களை தரக் கூடியதாக இருக்கும். வாழ்க வளமுடன்.

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரை வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். சகலமும் நன்மையாகும்.

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

சிம்ம ராசி அன்பர்களே, சிம்ம ராசிக்கு 6ம் இடமான சிம்மத்தில் இருந்து பணக்கஷ்டம், கடன் வாங்குதல், மருத்துவ செலவுகள், எதிரிகள் என்று சகல விதத்திலும் பாதிப்பான பலன்களே கிடைத்து இருக்கும். இப்போது குரு உங்கள் ராசிக்கு 7ம் இடமான கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். குரு உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியாகவும் இருந்துகொண்டு 7ம் இடத்திற்கு வருவது மிகவும் அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்ல வேண்டும்.

பரிகாரம் : தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும்.

சிம்மராசிக்காரர்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் எப்போதும் துணையாக இருப்பார். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள். அங்கே இப்போதும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிற சித்தர் பெருமக்களை மனதார நினைத்து வணங்க அனைத்து நன்மைகளும் பல மடங்காக நடக்கும். வாழ்க வளமுடன்.

சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வணங்குங்கள். புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் இருந்த குரு இப்போது 6ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். (பொதுவாக 6, 8, 12 ம் இடங்கள் குருவுக்கு துர்பலன்களை தரக்கூடிய இடங்கள் ஆகும்.) குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களில் படுவதால் ஏராளமான நன்மைகளும் நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு 4, 7க்கு உடையவர், அவர் 6ல் மறைகிறார். இது அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இருப்பினும் குரு பகவானின் 10, 12, 2 இடங்கள் பார்வையால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்

பரிகாரம் : விட்டுப்போன முன்னோர் வழிபாட்டினை முறையாக செய்யவும்

கன்னி ராசிக்காரர்களுக்கு ஸ்ரீரங்கநாதர் ஆலயமே சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும். அதிலும் குறிப்பாக திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் பெரியபிராட்டி ஆலயத்திற்கு எதிரே இருக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு, மற்றும் செட்டிபுண்ணியம் ஸ்ரீஹயக்ரீவர் ஆலய வழிபாடு மிகச் சிறந்த நன்மைகளைத் தரும். வாழ்க வளமுடன்

சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்குங்கள். வாய் பேச மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

துலாம் ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4ல் இருந்த குரு இப்போது 5ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். பொதுவாக 2, 5, 7, 9, 11 ஆம் இடங்கள் குருவுக்கு யோகமான இடங்கள். இந்த குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம், யோகம் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3க்கும் 6க்கும் உடைய குரு நன்மை செய்யும் கிரகம் அல்ல என்றாலும் அதன் சுப பார்வை நன்மையை மட்டுமே நிச்சயம் செய்யும். உங்கள் ராசிக்கு 9, 11,1 ஆகிய மூன்று இடங்களுக்கு பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நன்மைகள் நடைபெறும். ஆரோக்கிய விஷயத்தில் எல்லா குறைபாடுகளும் முழுவதும் நீங்கிவிடும். வளமான குடும்பம் அமையும். புத்திர பாக்கியம் கிட்டும்

பரிகாரம் : ஆஞ்சநேய பெருமானுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களுக்கு, சிறந்த பரிகார ஸ்தலம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் ஆகும். எனவே இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வாருங்கள். அதிக நன்மைகளைப் பெற முடியும். அதேபோல சிவாலயங்களில் இருக்கும் தட்சிணாமூர்த்தி குரு பகவானையும் வணங்கி வாருங்கள். பெரும் நன்மைகளை பெறுவீர்கள். வாழ்க வளமுடன்.

திருச்செந்தூரில் அருள்புரியும் ஸ்ரீமுருகப் பெருமானைச் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

 

விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு இது வரை 3ம் இடத்தில் மறைவு பெற்றிருந்த குரு இப்பொழுது 4ம் இடத்திற்கு வருகிறார். குரு 8ம் வீடான மிதுனத்தையும், 10ம் வீடான சிம்மத்தையும், 12ம் வீடான துலாத்தையும் பார்க்க போகிறது. இக்காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். குரு பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது படுவதால் தொழில் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும்படி மிக மிக சிறப்பாக இருக்கும். விட்டுப்போன தொழிலை மீண்டு ஆரம்பித்து வெற்றி காண்பீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்ற சொல்லுக்கு ஏற்ப 8, 10, 12ம் வீடுகள் சிறப்பாக அமையும்.

பரிகாரம் : குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம்.

விருச்சிக ராசி வாசகர்களுக்கு எப்போதும் பக்கபலமாக துணையாக இருப்பது ஸ்ரீ துர்கை அம்மன் வழிபாடு தான். எனவே பட்டீஸ்வரம் துர்கை அம்மன், கதிராமங்கலம் வனதுர்கை போன்ற துர்கை ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் நன்மைகள் அதிகமாகப் பெற முடியும். பிரச்சினைகள் எது வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியும். வாழ்க வளமுடன்.

கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

தனுசு ராசி அன்பர்களே, தனுசு ராசிக்கு இது வரை 2ம் இடத்தில் இருந்து மிகவும் அற்புதமான பலன்களை தந்து கொண்டு இருந்த குரு இப்போது ராசிக்கு 3ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பாக அமையும் என்று சொல்லிவிட முடியாது. மேலும் 3ம் இடமாகிய மறைவு ஸ்தானத்திற்கு குரு வருவது பொதுவாக நன்மை தர கூடியது அல்ல. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கிடைப்பதால் மிக பெரிய நன்மைகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடும். திருமண ஆனவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பரிகாரம்: குரு பகவானின் திரு அருளை பெற ஞானிகள், தவசீலர்கள் முக்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று தரிசிப்பது நல்லது

காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மகர ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசியில் இருந்து வந்த குரு பகவான் ராசிக்கு 2ம் இடமான கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இது மிகவும் சிறப்பான இடம். தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தானம் ஆகியவற்றில் குரு இருப்பது சிறப்பான பலனை தரும். மன உறுதியுடன் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். காதல் விவகாரங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. திருமணத்தில் இருந்த தடை நீங்கி திருமணம் கைகூடும். குரு 2ம் இடத்தில் இருந்து 6, 8, 10ம் பாவத்தை பார்ப்பார்.

பரிகாரம் : சனிக்கிழமையில் அனுமனை விரதம் இருந்து வழிப்படவும்

திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரை வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.

கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

கும்ப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்து அதிகப்படியான செலவுகளை தந்து கொண்டு இருந்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்கிறார். ஜென்ம ராசியில் குரு இருப்பது பொதுவாகவே பலம் பொருந்திய அமைப்பாகும். இது வரை 12ம் இடத்தில் இருந்த குரு மிகுந்த அலைச்சலையும் சேமிக்க முடியாத செலவுகளையும் கொடுத்து இருப்பார். ஜென்ம குருவாக இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வை செய்து பலம் சேர்கிறார்

 

பரிகாரம் : தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுல்லைவனேஸ்வரரை வணங்குங்கள். ரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும்.

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-2022

மீன ராசி அன்பர்களே, இது வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு 12ம் இடமான கும்ப ராசிக்கு செல்கிறார். பொதுவாக குரு 12ல் இருப்பது பணம் பல வகையில் விரயமாகும்.12ல் வரும் குரு வருமானம் இன்றி செலவுகளை அதிகப்படுத்துவார். பல விதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: குல தெய்வ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment