Saabam meaning in tamil

சாபம் என்றால் என்ன??? (Saabam meaning tamil)

வாழ்த்து கூறுவது போல தான் இதுவும்.

ஒரு சாதாரண உணர்வுகளின் சொற்களே…

ஆனால் அதன் வலிமை எப்படி‌பட்டதென்றால் அதை சொற்களில் விவரிக்க முடியாது.

குலதெய்வ சாபம்,மண் சாபம், பெண் சாபம், அன்னம் சாபம், பிரேத சாபம், பித்ரு சாபம், தாய் தந்தை சாபம், உடன் பிறந்தோர் சாபம், மனைவியின் சாபம், பிள்ளையின் சாபம், ஆசிரியரின் சாபம், தொழிலாளியின் சாபம், மரம் செடிகளின் சாபம் என்று சாபத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

சாபத்திற்கு விமோசனம் உண்டா? என்று கேட்டால் சில சாபத்திற்கு மட்டுமே அது உண்டு.

சில விசயங்கள் நம் வாழ்வில் நடந்தே தீர வேண்டும் என்று இருக்கும் போது அது சாபங்களால் நிறைவேற்றப்படுகிறது.

இட்ட சாபத்தையும் வாழ்த்தையும் திரும்ப பெற இயலாது.

ஒரு உயிர் (ஆன்மா) மனதின் வலிகளால் கண்ணீர் சிந்த கூட வேண்டாம்.

உணர்ந்தாலே போதும். சாபத்தின் வேலை ஆரம்பித்துவிடும்.

அப்படி இருக்கும் போது உள்ளத்தில் வலிகளும் ரணங்களும் கண்ணீரும் பொங்க,

ஒருவரின் வார்த்தைகளில் வெளிப்படும் சாபமானது அதிபயங்கர பலனை அளிக்கவல்லது.

அதெப்படி சாத்தியம் என்று நினைத்தால் நாம் முட்டாள் தான்…

ஒரு கல். அதை மந்திரங்கள் சொல்லி சொல்லி அதில் சக்தி உருவேற்றி கடவுள் என்று வணங்குவதும், மந்திரங்கள் ஒலிப்பதும் எப்படி சக்தி உணர்த்துகிறது..

ஒரு சாதாரண மாவு பொம்மை அல்லது செப்பு தகடு. சில வர்ணம் அல்லது எழுத்துக்கள். மந்திரங்கள் சொல்லி சொல்லி அதில் தீம் சக்தியை ஏற்றி பில்லி சூன்யம் ஏவல் என்று செய்யும் போது அதன் அதிர்வலைகள் எப்படி தாக்குகிறதோ அது போல தான் சாபமும்.

சொற்களில் வலிமை அளப்பரியது. அது நற்சொல்லாக இருந்தாலும் சரி. தீய சொற்களாக இருந்தாலும் சரி.

தெரியாமல், ஏதோ கோபத்தில் சாபம் கொடுத்துவிட்டேன். இனி என்ன செய்வது என்று வருந்தினால், நடக்க கூடாது என்று இறைவனிடம் வேண்டினால் கூட அதை மாற்ற முடியாது.

காரணம் இந்த பிரபஞ்சம் அந்த சொற்களை கிரகித்து காத்துக் கொண்டு இருக்கும்.

அந்த சாபம் பல தலைமுறைகள் தாண்டியும் தொடரும் என்பது கூட உண்மை தான்.

வர்க்க சாபம் என்று அதனை கூறுவர்.

குடும்பத்தில் ஒருவர் திருமணம் இன்றி இருப்பது. மூத்த மகன்/மகள்/பேரன்/பேத்தி என்று இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் செல்வது.

பெண் குழந்தை இல்லாத வம்சம், திருமணம் வாழ்க்கை பிரச்சினையில் மட்டுமே செல்லும் வாழ்க்கை, இரண்டு திருமணம், ஊனமான குழந்தை என்று தலைமுறை தொடரும் வர்க்க சாபமும் பலர் அறிந்து இருப்பர்…

அது சரி….

இதெல்லாம் தப்பு செஞ்சவனுக்கு பாதிப்பு அடைந்தவன் தருவது தானே. சாபம் கொடுத்தவருக்கு என்ன கஷ்டம் என்று பலரும் நினைக்கலாம்.

இங்கு தான் பிரபஞ்சத்தின் சூட்சமம் ஒளிந்துள்ளது.

சாபம் கொடுத்து அதுவும் பலித்து அவனும்‌ அழுது கஷ்டப்பட்டு வாழ்க்கையை கடக்கிறான்.

ஆனால் கொடுத்த சாபம் திருப்ப கொடுத்தவருக்கே வரும் என்பதே நிதர்சனம் உண்மை.

சாபம் கொடுத்த சொற்கள் கொடுத்தவரையும் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒருவேளை அவர் இறக்க நேரிட்டாலும் கூட‌ தலைமுறையை தொடரும்….

அந்த அளவுக்கு வலிமை கொண்டது சாபம்…

இன்றும் கிராமங்களில் சாபம் கூட வரமாக கொடுப்பார்கள். “நாசமத்து போ”என்று வார்த்தையால்..

நாசமத்து=நாசம்+அற்று.

“நீ நாசமத்து போயிடுவ”…
“டேய் நாசமத்து போனவனே”..
இது போன்ற சொல்லாடல்கள் கேட்டிருப்போம்.

வரத்தை அளித்து வரத்தை சேர்ப்பது தான் இது.

முன்னோர் வாக்கு ஒன்று உள்ளது… நம் மரபில் கூறும் வார்த்தை இது.

“தாத்தன் சொத்து பேரனுக்கே”

ஆம். தாத்தா சேர்த்து வைத்த பாவம் புண்ணியம் வரம் சாபம் ஆகிய சொத்துக்கள் அனைத்தையும் அவன் பேரன் பேத்திகள் வைத்துக்கொள்ள வேண்டும்…

தர்மத்தின் மூலம் கர்மத்தின் தீமை குறையும். ஆனால் சில கர்மத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அகத்தியர் வாக்கு…

முடிந்த வரை சாபத்தை கொடுக்காதீர்கள்..

சாபம் ஒருவரை விடாமல் துரத்தும் எப்போதும்…

Leave a Comment