சாக்கிய நாயனார்.
திருச்சங்கமங்கை என்ற திருதலத்தில் அவதரித்தவர் சாக்கியர். சைவசமயம் சார்ந்த அடியார் மீண்டும் பிறவாமை பேறுபெற்று முக்தி நிலையை அடையும் வழியைதேடி பௌத்த சமயத்தை சார்ந்தார்.அங்கு பலகாலம் பலநூல்களை ஆராய்ந்தார். பதவிகள் கிடைத்தது. முக்திநிலையை அடையும்வழி கிடைக்கவில்லை.
அதனால் மீண்டும் சைவசமயம் சார்ந்தார்.தான் ஏற்ற பௌத்ததுறவி கோலத்திலேயே ஈசனை தேடி வந்தார்.மேலும் சைவசமயத்தை நன்கு ஆய்ந்து, ஈசனால் மட்டுமே முக்திபேற்றை நல்கமுடியும் என்பதை உணர்ந்து கொள்கிறார்.
இங்கே அனைத்து சிவனடியார்களும் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். நம் உயிரை படைப்பதும் உயிராய் நம் உடலில் இருப்பதும் ஈசனே.எனவே இந்த உயிர் ஈசனுக்கு மட்டுமே சொந்தம்.அதை எந்த நிலைக்கு கொண்டு செல்வதும் ஈசனின் செயலே. முக்திபெறும் நிலைக்கு நம்மை உருவாக்க வேண்டியது நம் கடமை.அதை சரியாக செய்தால் மட்டுமே நம் மாயபிறப்பறுக்கும் மன்னன் திருவடிபேறை பெற்று முக்திநிலை அடையமுடியும். இதை சாக்கியரும் உணர்கிறார். பின்னர் முக்திபேறு அளிப்பது ஈசன் ஒருவரால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு வருகிறார்.அரிது அரிது தமிழகத்தில் பிறப்பது அரிது.அதனினும் அரிது தமிழனாய் பிறப்பது அரிது.தமிழனாய் பிறந்திடினும் சைவசமயம் அறியும் நிலை பெறுவது அரிது.சைவநிலை அறிந்தும் அன்னை தமிழிலே பண்ணிரு திருமுறை ஓதுதல் மிகமிகஅரிது.இவை அனைத்தையும் விட அரிது ஈசனை நெஞ்சத்தே இருத்தி முக்திநிலை அடையும் வழியை அறிதல் அதனினும் அரிது.இத்தனை அரிதையும் நாம் அறிந்துகொண்டால் ஈசனை அடைவது மிகமிக எளிது.நாம் தமிழராக பிறப்பதற்கே பெரும்புண்ணியம் செய்திருக்க வேண்டும். எழுத படிக்க தெரியாவிட்டாலும் மற்ற அடியார்கள் ஓதுவதை காதில் கேட்டாவது அருள் பெறும்நிலை கிட்டுகிறது.
பதிணென் சித்தரும் அறுபத்து மூன்று நாயன்மார் பெருமக்களும் தமிழராய் பிறந்ததாலும் தமிழகத்தில் இருந்ததாலும் பெரும்பேறு பெற்றனர்.இந்த உண்மையை உணர்ந்த சாக்கியனார் சிவலிங்க வழிபாட்டுமுறையை வழக்கப்படுத்த நினைந்தார்.
ஓர்நாள் தோப்பில் இருந்த ஒரு புதரில் சிவலிங்கம் ஒன்றை காண்கிறார். அவருக்கு என்ன நேர்ந்ததோ அவருக்கே புரியவில்லை. சிவலிங்கத்துடன் பேசுகிறார். இறைவா உயிர்களுக்கு பிறவா முத்தியை அளிப்பவர் தாங்கள். எமக்கு அதை அடையும் வழியை அருளுங்கள். அப்படி அருளாவிட்டால் நாளை தங்கள்மீது கல்கொண்டு எறிவேன் என்கிறார். மறுநாள் காலை குளித்துமுடித்து இறைவனிடம் செல்கிறார். இறைவன் அவருக்கு அருளவில்லை. உடனே இறைவா தாங்கள் அருள் புரியவில்லை. ஆயினும் அடியேன் சொன்ன சொல்லை மீறமாட்டேன் என கூறியவாறே அங்கிருந்த கல்கொண்டு லிங்கரூபத்தின் மீது எறிகிறார். மறுநாளும் அங்கு சென்ற சாக்கியர் லிங்கரூபத்தின் மீது கற்களை எறிகிறார். இதை கண்ட மக்கள் சாக்கியரை நிந்திக்கின்றனர். இன்னும் சிலர் இறைவன் மீது கல்லெறியும் இவன் நாசமாக கட வது எனவும் சபிக்கின்றனர்.
இவை எவற்றையும் சாக்கியனார் செவிமடுக்கவில்லை.ஈசனுக்கு வாக்களித்ததால் தினமும் கற்களை எறிந்து பூசிப்பதை வழக்கமாக கொண்டார். முறைமை தவறாது பூசித்தார்.ஈசனும் அந்த பூசைமுறை புதிதாக இருந்ததால் விரும்பி ஏற்றுக்கொண்டார். ஒருநாள் உணவு அருந்த சென்றபோது லிங்கரூபத்தின் மீது கற்களை எறிந்து பூசிக்காததை நினைக்கின்றார். அக்கணமே கரத்தில் எடுத்த உணவை அருந்தாமல் அப்படியே நழுவவிடுகிறார். காரணம் இறைவழிபாட்டை இன்று நழுவவிட்டால் மீண்டும் எத்தனை பிறவி எடுத்தால் கிட்டுமோ தெரியாது. எனவே உணவு அருந்தாவிட்டாலும் பரவாயில்லை. சிவவழிபாட்டை நழுவ விடக்கூடாது என்றெண்ணி லிங்கரூபத்தின்மீது கற்கள் எறிந்து பூசிக்க சென்று கல் எறிந்து பூசிக்கின்றார்.
இறைவனும் அதற்குமேலும் சோதிக்க மனமின்றி விடைமீது உமையம்மையுடன் வந்து மாசற்றசோதியாய் காட்சி தந்தருளி திருவடிபேற்றையும் பரமுத்திநிலையையும் தந்தருளுகிறார்.சிவபுரம் சாரும் நிலையும் அருளுகின்றார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களிலும் ஒருவராகும் அருளையும் பெறுகிறார் சாக்கிய நாயனார்..
சாக்கிய நாயனார் திருவடிகள் போற்றி
அம்மையப்பன் மலரடிகள் போற்றி போற்றி.