Oru Kaiyil Damarukam Song Lyrics Tamil

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் (Oru Kaiyil Damarukam)
என்ற பாடல் சிவபெருமானை வணங்கி பாடுவதாகும்… இப்பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்ற சந்தேகம் இருந்தால்… இந்த பாடலின் இறுதியில் உள்ள காணொளியை பாருங்கள்…

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார், சிவ சிவ
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்

சிவ சிவ சிவ

திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

அரிஅயனார் ஒரு புறம், ஆதிசக்தி மறு புறம் அரியணையில் அமர அய்யா
சிவ சிவ மயில் மேலே குமரன் அய்யா
பரிசங்கள் ஒதவும், வான்வெளியில் கோஷமும்,
வணங்கி ஏழு முனிகள் அய்யா
சிவ சிவ
வாத்தியங்கள் முழங்குதே அய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

நந்தியும் பரிவாரங்களும், சுற்றி மூ கணமும் வந்து
சிவனை நின்று வாழ்த்துவாரையா
சிவ சிவ வணங்கி நின்று ஏற்றுவாரையா

இந்திரனும் தேவியும், எட்டில் இசை பாடலும், இசை கேட்டு மயங்கினாரய்யா
சிவ சிவ எப்போதும் வணங்கினாரய்யா

ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,சிவ சிவ
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா

வெள்ளி மலை முருகனும், வேத கோஷ கூட்டமும்
துள்ளி விளையாடும் அய்யா
சிவ சிவ துதி பாடி வருவார் அய்யா
அள்ளி அருள் வீசுவாய், அன்போடு பேசுவாய்,
ஆனந்த கூத்தாடுவாய்
சிவ சிவ அடியாரை காப்பாற்றுவாய் ஹர ஹர ஹர

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம்,
உடையாக புலி தோலை சூடுவார்,
ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார்
திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா
சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா…

ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் காணொளி

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோயில்கள்

சிவாஷ்டகம் பாடல் வரிகள்

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

108 சிவன் போற்றி

You can find a best shivan songs that can be sung in a pooja… This song is very beautiful shivan song. you can check this sivan song lyrics in this post

Leave a Comment