Simma rasi guru peyarchi palangal 2023-24

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2023-24

சவால்களை வென்று… சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே…!!

சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!

பாக்ய குரு – சிம்மம்

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

சூரிய பகவானின் அருள் பெற்ற சிம்ம ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கு 5-ம் இடமான தனுசுக்கும், எட்டாம் இடமான மீனத்துக்கும் உரியவரான குரு பகவான் தற்பொழுது ஒன்பதாம் இடமான பித்ரு ஸ்தானத்துக்கு செல்கிறார். அவரின் விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியிலும், ஏழாம் பார்வை சகோதர ,தைரிய வீரிய ஸ்தானத்திலும்,9-ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிவது சிறப்பு.
ஜோதிடத்தில் ஒரு பொன் மொழி உண்டு
”ஓடிப்போனவனுக்கு 9மிடத்தில் குரு” என்பார்கள்.
சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் குரு பாக்கிய குருவாக அமர உள்ளார். அது திரிகோண இடமாக அமைவது மிக மிக ராஜ யோக நிலையைத் தரும்.
பாக்கிய ஸ்தானத்தில் ஒருவருக்கு குரு அமையும் போது அவரின் செல்வாக்கும், செல்வ நிலை, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நிதி நிலை மேம்படும் என்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். திருமணத்திற்காகவும், குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்களுக்கு அது கிடைத்து நல்ல பாக்கியம் உண்டாகும்.

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு குருவின் 5ம் பார்வை கிடைப்பதும், சூரியன் உச்சம் பெற்றிருக்கின்ற மேஷத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்வதாலும் மிகவும் சிறப்பான பலனை நீங்கள் பெற்றிட முடியும்.
குரு பகவான் 5, 7, 9ம் பார்வையால் தன்னுடைய சுப பலனைத் தரக்கூடியவர்.
குருவின் 5ம் பார்வையால் சிம்ம ராசியையே பார்க்கிறார்.
7ம் பார்வையால் சிம்ம ராசிக்கு 3ம் வீடான இளைய சகோதரர், தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குருவின் 9ம் பார்வையால் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்க உள்ளார்.
இப்படிப்பட்ட அற்புத நிலையில் குருவின் பார்வை பலனால் சிம்ம ராசிக்கு தொழில், வேலை,திருமணம், குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.
உத்தியோகஸ்தர்கள் தங்களின் திறமையை நிரூபிக்கவும், அதன் மூலம் உரிய உயர்வை அடையவும் வாய்ப்புள்ளது. உங்கள் மீது இருந்த கலங்கம்நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

இருப்பினும் உங்களின் வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சிலர் உணர்ச்சிவசப்படுவதும், கோபப்படக்கூடிய சூழல் இருக்கும். நாவடக்கத்துடன் செயல்படவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடிய காலமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் செய்ய நினைக்கும் புதிய முதலீடுகள், புதிய ஒப்பந்தங்கள் ஆகிய விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பங்கு சாந்தை, லாட்டரி போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரியங்கள் சிறப்பாக நடக்க உள்ள காலமாக இருக்கும். இருப்பினும் உங்கள் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களை மதிக்காமல் பேசுவது, செயல்பட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் இருந்த மன கசப்பு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களின் பொருளாதார நிலை வலுப்படும். ஆடை, ஆபரணங்கள், அசையா சொத்துக்கள் வாங்க உங்களுக்கு சூழல் சாதகமாக இருக்கும்.
கலைத்துறையில் உங்களை நிரூபித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அலைச்சல்கள் இருப்பினும் உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற முடியும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு மேலிடம், தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் மேன்மை நிலைக்க பேச்சு, செயலில் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது.
மாணவர்கள் படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும். அதன் மூலம் நல்ல மதிப்பெண் பெற்றிடலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அஷ்டம குருவினால் வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் இனி கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது.

பலன் தரும் பரிகாரம்
ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள். துர்க்கை அருளும்,குருவின் அனுகிரகமும் உங்கள் வாழ்க்கையை செழிக்க செய்யும். சிம்ம ராசியினர் அருகில் உள்ள சிவாலய வழிபாடு செய்வதும், துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment