சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம்
பந்தள நாடனை நினைப்போம் அவன் சுந்தர மேனியை துதிப்போம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
வெட்டுப் பாறையில் நடப்போம்
பதினெட்டுப் படிகள் கடப்போம்
பக்திபழரசம் குடிப்போம்
ஐயன் பாதங்களில் பற்றிப் பிடிப்போம்
சத்திய ஒளி பரப்பும் சபரிமலை
சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2)
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சொல்லுங்கள் ஐயப்பன் நாமம்
தொலைவில் ஓடுது பாவம்
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா…..