Hara Hara Sivane Arunachalane Song Lyrics in Tamil
ஹர ஹர சிவனே அருணாசலனே பாடல் வரிகள் (hara hara sivane) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபெருமானின் பாடல்களில் மிக மிக பிரபலமான பாடல்களில் இது தலைசிறந்த ஒன்றாகும். திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது இந்த பாடலை நாம் கேட்காமல் இருக்க முடியாது.. இந்த பாடல் வரிகளை படித்து சிவபெருமானின் அருளை பெறுவோம்… இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவின் இறுதியில் உள்ளது…
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
ஹர ஹர சிவனே அருணாசலனே அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
சிவா சிவா ஹரனே சொனாச்சலனே அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நம சிவாய
அனலே நமசிவாயம், அழலே நமசிவாயம்
கனலே நமசிவாயம், காற்றே நமசிவாயம்
புலியின் தோலை இடையில் அணிந்த புனித கடலே போற்றி
சிவ ஓம் நம சிவாய
கலியின் தீமை யாவும் நீக்கும், கருணை கடலே போற்றி
ஹர ஓம் நம சிவாய
புனலே நமசிவாயம், பொருளே நமசிவாயம்
புகழே நமசிவாயம், புனிதம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
சிவனார் கங்கை கரையில் அமர்ந்த சீதள ஒளியே போற்றி
சிவ ஓம் நம சிவாய
தவமே செய்யும் தபோவனத்தில், ஜ்யோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
வேதம் நமசிவாயம், நாதம் நமசிவாயம்
பூதம் நமசிவாயம், போதம் நமசிவாயம்
மனிபூரகமாய் சூட்சமம் காட்டும் அருணாசலனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே, செங்கனல் வண்ணா போற்றி
ஹர ஓம் நம சிவாய
அன்பே நமசிவாயம், அணியே நமசிவாயம்
பண்பே நமசிவாயம், பரிவே நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நினைத்த உடனே முக்தியை தந்திடும் அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சந்நிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நம சிவாய
அருளே நமசிவாயம், அழகே நமசிவாயம்
இருளே நமசிவாயம், இனிமை நமசிவாயம்
சித்தர் பூமியாய் சிவாலயம் காட்டும் அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
பக்தர் நெஞ்சினை சிவமயம் ஆக்கும் சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நம சிவாய
உருவே நமசிவாயம், உயிரே நமசிவாயம்
அருவே நமசிவாயம், அகிலம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
அன்னை உமைக்கு இடமாய் உடலில் ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நம சிவாய
சொன்ன வண்ணமே செய்யும் நாதனே சொனாச்சலனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
ஆதியும் நமசிவாயம், அந்தமும் நமசிவாயம்
ஜ்யோதியும் நமசிவாயம், சுந்தரம் நமசிவாயம்
சூரியன் சந்திரன் அஷ்ட வசுக்கள் தொழுதிடும் நாதா போற்றி
சிவ ஓம் நம சிவாய
சுந்தரி உன்னமுளையுடன் திகழும் அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நம சிவாய
சம்புவும் நமசிவாயம், சத்குரு நமசிவாயம்
அம்பிகை நமசிவாயம், ஆகமம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
எட்டா நிலையில் நெட்டை எழுந்த ஏக லிங்கனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
பட்ரா இருந்து பற்றும் எவர்க்கும் பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நம சிவாய
கதிரும் நமசிவாயம், சுடரும் நமசிவாயம்
உதிரும் நமசிவாயம், புவனம் நமசிவாயம்
ஜ்யோதி பிழம்பின் சுடரில் கனிந்த அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நம சிவாய
குளிரே நமசிவாயம், முகிலும் நமசிவாயம்
கனியும் நமசிவாயம், பருவம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
குமரகுருவான குகனே பணிந்த குருலிங்கேச போற்றி
சிவ ஓம் நம சிவாய
இமையமலை மீதி வாசம் புரியும் அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நம சிவாய
மண்ணும் நமசிவாயம், மரமும் நமசிவாயம்
விண்ணும் நமசிவாயம், விளைவும் நமசிவாயம்
மனிமையம் ஆகிய மந்திர மலையில் சுந்தரம் ஆணை போற்றி
சிவ ஓம் நம சிவாய
அணியபாரணம் பல வகை சூடும் அருணாசலனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
மலையே நமசிவாயம், மலரே நமசிவாயம்
சிலையே நமசிவாயம், சிகரம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
கம்பத்திளையான் குகனை கண்ணில் படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும் நாதாபாரனா போற்றி
ஹர ஓம் நம சிவாய
திருவே நமசிவாயம், தெளிவே நமசிவாயம்
கருவே நமசிவாயம், கனிவே நமசிவாயம்
அருணை நகரசிகரம் விரிந்த அக்னி லிங்கனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
கருணையை வேண்டி காலடி பணிந்து சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நம சிவாய
பெண்ணும் நமசிவாயம், ஆணும் நமசிவாயம்
எண்ணம் நமசிவாயம், ஏகம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நம சிவாய
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே சூலனாதனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
ஒளியே நமசிவாயம், உணர்வே நமசிவாயம்
வெளியே நமசிவாயம், இசையே நமசிவாயம்
மௌன வடிவாகி மோகனம் காட்டும் மூர்த்தி லிங்கனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
ஞானம் வழங்கி நற்கதி அருளும் நந்தி வாகன போற்றி
ஹர ஓம் நம சிவாய
ராகம் நமசிவாயம், ரகசியம் நமசிவாயம்
யோகம் நமசிவாயம், யாகம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
அர்தனாரியாய் வித்தகம் செய்யும் அருணாசலனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
நர்த்தனம் தாண்டவம் நாடகம் ஆடும் நாக நாதனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
அதிர்வும் நமசிவாயம், அசைவும் நமசிவாயம்
இலையும் நமசிவாயம், நிறைவும் நமசிவாயம்
ரமண முனிக்கு ரகசியம் சொன்ன ராஜ லிங்கனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
இமையோர் தலைவன் பதவியும் வழங்கும் ஈச மகேச போற்றி
ஹர ஓம் நம சிவாய
கொடையும் நமசிவாயம், கொண்டாலும் நமசிவாயம்
வாடையும் நமசிவாயம், தென்றலும் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
பரணி தீபமாய் தரணியில் ஒளிரும் பரமேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
ஹர ஹர என்றால் வர மழை பொழியும் ஆதிளிங்கனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
சித்தியும் நமசிவாயம், முக்தியும் நமசிவாயம்
பக்தியும் நமசிவாயம், சக்தியும் நமசிவாயம்
கார்த்திகை திருநாள் உற்சவம் காணும் தீப சுடரே போற்றி
சிவ ஓம் நம சிவாய
தீர்த்தம் யாவிலும் நீரடிடுவாய் அருணாசலனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
நிலவே நமசிவாயம், நிஜமே நமசிவாயம்
கலையே நமசிவாயம், நினைவே நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும் சொனாச்சலனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
பொற்சபை தன்னில் அற்புத நடனம் புரியும் பரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
லிங்கம் நமசிவாயம், லீலையும் நமசிவாயம்
கங்கையும் நமசிவாயம், கருணையும் நமசிவாயம்
சோனை நதி தீரம் கோயில் கொண்ட அருணாசலனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
வானவெளி தனை கோபுரம் ஆக்கி மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நம சிவாய
செல்வம் நமசிவாயம், சேரும் நமசிவாயம்
வில்வம் நமசிவாயம், வேஷம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
ஆதிரை அழகா ஆவுடை மேலே அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நம சிவாய
வேதியர் போற்றும் வேஞ்சடை இறைவா வேத பொருளே போற்றி
ஹர ஓம் நம சிவாய
முதலும் நமசிவாயம், முடிவும் நமசிவாயம்
இடையும் நமசிவாயம், விடையும் நமசிவாயம்
நாக முடியுடன் யோகம் புரியும் நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
மேக நடுவிலே திருநீர் அணியும் அருநேஸ்வரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
அம்மையும் நமசிவாயம், அப்பனும் நமசிவாயம்
நன்மையையும் நமசிவாயம், நாதனும் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
அடிமுடி இல்லா ஆனந்த வடிவே அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
அம்மை அப்பனை அகிலம் காக்கும் அமுதேஸ்வரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய
அதுவும் நமசிவாயம், இதுவும் நமசிவாயம்
எதுவும் நமசிவாயம், எதிலும் நமசிவாயம்
விடையம் காலை வாகனம் ஏரி விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நம சிவாய
வேண்டிய கணமே எண்ணிய கணமே கண்ணில் தெரிவை போற்றி
ஹர ஓம் நம சிவாய
சூலம் நமசிவாயம், சுகமே நமசிவாயம்
நீளம் நமசிவாயம், நித்தியம் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
பௌர்ணமி நாளில் பிரைநிலவனியும் மகாதேவனே போற்றி
சிவ ஓம் நம சிவாய
ஔஷத மலையாய் பிணிகள் தீர்க்கும் அருணாச்சலமே போற்றி
ஹர ஓம் நம சிவாய
தீபம் நமசிவாயம், திருவருள் நமசிவாயம்
ரூபம் நமசிவாயம், ருத்ரம் நமசிவாயம்
பனி கைலாயம் தீ வடிவாகிய அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
பணிவடிவாகிய தென்னடுடையாய் திருவருலேசா போற்றி
ஹர ஓம் நம சிவாய
எங்கும் நமசிவாயம், எல்லாம் நமசிவாயம்
எழிலும் நமசிவாயம், என்றும் நமசிவாயம்
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய ஓம் நம சிவாய…
Hara Hara Sivane Arunachalane Video Song
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடல் வரிகள்