Rishaba rasi guru peyarchi palangal 2017-18

ரிஷப இராசி அன்பர்களே!!!

உங்கள் இராசிக்கு 6-ம் வீட்டுக்கு குரு பகவான் 02.09.2017 அன்று பெயர்ச்சி ஆகி வருகிறார். செவ்வாய் சாரத்தில் அதாவது 7, 12-க்குரியவர் சாரத்தில் அமர போகிறார். சிலர் கூறுவார்கள்… 6-ம் இடத்தில் குரு அமரக் கூடாதென்று. ஆனாலும் பயம் வேண்டாம். 8-க்குரியவன் 6-ம் இடத்தில் அமரலாம். இது உங்களுக்கு விபரீத யோகத்தை தரும் குரு பெயர்ச்சியாக இருக்கும். உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக வரும். கல்வி தொடரும். தனஸ்தானத்தை, ஜீவனஸ்தானத்தை, விரயஸ்தானத்தை குரு பார்வை செய்வது, எப்படியோ பணத் தட்டுபாட்டை நீக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். விரோதம் மறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்க்கை யோகம் அமைத்து தரும். குழந்தை பாக்கியம் கிட்டும். அதேபோல, உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்று கணிக்கும்போது, மற்றவர்கள் உங்களை கோபம் கொள்ள செய்வார்கள். பதட்டம் அடைய செய்வார்கள். அதை பற்றி கடுகளவும் கவலைப்படாதீர்கள். குழப்பம் தரும் யோசனைகள் வேண்டாம். நீங்கள் சும்மா இருந்தாலும் பிரச்னை முதுகை தட்டும். நீங்கள் திருப்பி கூட பார்க்க வேண்டாம். நண்பர்களாக நடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள். மற்றபடி, குரு பகவான் வாரி வழங்குவார். நல்வாழ்த்துக்கள்.

 

கிருத்திகை (2,3,4), ரோகிணி, மிருகசீரிஷம் (1,2)

சாந்தமான குணம் இருந்தாலும் கோபம் வந்தால் கட்டுப்படுத்த முடியாத இயல்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு 8, 11-க்கு அதிபதியான ஆண்டுக்கோளான குரு பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் வாக்கியப்படி 2-9-2017 முதல் 4-10-2018 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் எதிர்பாராத பிரச்சினைகள், வம்பு வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்றாலும் 3-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் தடைகள் நிலவுவதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

உங்களுக்கு சனி பகவான் 19-12-2017 முதல் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அனுகூலமானப்பலனைப் பெறமுடியும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தொடர் முயற்சிகளுக்குப் பின்பே சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிறைவைத்தரும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள், போட்டி, பொறாமைகள் போன்றவற்றைச் சமாளிக்க வேண்டிவரும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதும் உத்தமம். உங்கள் ராசிக்கு சனி கேந்திர திரிகோணாதிபதியாகி யோகக்காரகன் என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். அதுமட்டுமில்லாமல் ராகுவும் 3-ஆம் வீட்டில் இருப்பதால் எதையும் சாமளிக்கக்கூடிய பலம் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அடிக்கடி ஜலத்தொடர்புடைய பாதிப்புகள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகி சேமிப்புக் குறையும். தேவையற்ற பிரச்சினைகளாலும் மனநிம்மதி குறையும். எதிரிகளின் பலம் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.

குடும்பம், பொருளாதார நிலை
குடும்பத்தில் அமைதி குறையும். அடிக்கடி உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பணவரவுகளிலும் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாட வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். உற்றார், உறவினர்களால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும் வீண்விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக செயல்பட்டால் எதிர்பார்க்காத திடீர் உதவிகளால் எதையும் சமாளிக்கமுடியும்.

கொடுக்கல்வாங்கல்
கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் துறைகளில் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியாது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் பிறரின் நம்பிக்கையை இழப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுத்தால் வீண்பிரச்சினைகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் போட்டிகள் அதிகரிக்கும். எந்தவொரு புதிய முயற்சியிலும் வெற்றிகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அபிவிருத்திக் குறைவதால் ஆர்டர்களும் குறையும். வங்கிக் கடன்களைத் திருப்பிச்செலுத்த நெருக்கடி ஏற்படும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருட்தேக்கம் உண்டாகி லாபம் குறையும்.

உத்தியோகம்உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைப்பளு அதிகரிக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக் குறைவாக இருக்கும். நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவிகளும் பிறர் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் தாமதப்படும். வேலையில் ஈடுபாடற்றநிலை ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொள்வது சிறப்பு.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியாமல் எல்லாவகையிலும் நெருக்கடிகள் நிலவும். பணவரவுகளிலும் தடைகள் நிலவினாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். பிறரிடம் எந்தவொரு பொருளையும் இரவல் வாங்குவதைத் தவிர்க்கவும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். புத்திரர்களாலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு களங்கங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களே வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் அனுகூலம் ஏற்பட்டு மனநிம்மதி உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்காது. இதனால் உழைப்பிற்கேற்ற பலனின்றிப்போகும். நீர் வரத்துக் குறைவதால் தொடர்ந்து பயிரிட முடியாத நிலை ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் விரயங்கள் ஏற்படும். கடன் அதிகரிக்கும்.
கலைஞர்கள் கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடைப்படும். தொழிலில் போட்டிகள் அதிகரித்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பிற கலைஞர்கள் தட்டிச் செல்வார்கள். வரவேண்டிய பணத்தொகையும் தாமதப்படும். புதிய வாய்ப்புகள் தடைப்படுவதால் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.
மாணவ- மாணவியர்மாணவ- மாணவிகள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசம் உங்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும். எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். விளையாட்டுப்போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 2-9-2017 முதல் 5-10-2017 வரை
குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் தன் நட்பு நட்சத்திரமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சில இடர்ப்பாடுகளை சந்தித்தாலும் ராகு 3-ஆம் வீட்டில் இருப்பதால் இறுதியில் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். வீணான செலவுகளைக் குறைத்துக்கொள்வதன்மூலம் கடன்களைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் பெரிய தொகை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தினாலும் அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் உண்டாகும். கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதற்கேற்ற அபிவிருத்தியை உங்களால் செய்யமுடியாமல்போகும். எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தெய்வ காரியங்களுக்காக சில செலவுகளைச் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் மதிப்பு, மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவீர்கள். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் 6-10-2017 முதல் 7-12-2017 வரைகுரு பகவான் 6-ஆம் வீட்டில் ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குச் சற்று சோதனைகளை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நிலையில் தடைகள், எதிர்பார்க்கும் உதவிகளில் தாமத நிலை உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புக்கள், தேவையற்ற பிரச்சினைகள், வீண்வாக்கு வாதங்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மனநிம்மதி குறையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். வரவேண்டிய ஆர்டர்கள் குறையும். லாபம் தடைப்படும். கூட்டாளிகளும் ஒற்றுமையாக செயல்பட மட்டார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிக்கமுடியாது. தேவையற்ற வம்பு வழக்குகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். இக்காலங்களில் சாதகமற்ற பலன்களை சந்திக்கக்கூடும் என்பதால் குரு பகவானுக்கு பரிகாரம் செய்வது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 8-12-2017 முதல் 13-2-2018 வரை
இக்காலங்களில் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் குழப்பமும், பிரச்சினைகளும் உண்டாகும். நீங்கள் பிறருக்கு நல்லதாக நினைத்துச் செய்யக்கூடிய காரியங்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மருத்துவச் செலவுகளால் மனநிம்மதி குறையும். 19-12-2017 முதல் சனி அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகு 3-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களும் கிடைக்கும் ஆர்டர்களைத் தக்கசமயத்தில் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் பொருள்தேக்கத்தைத் தவிர்க்கமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பது நன்மையளிக்கும். அரசியல்வாதி களுக்கு தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.

குரு பகவான் அதிசாரமாக விருச்சிக ராசியில் 14-2-2018 முதல் 6-3-2018 வரை
குரு பகவான் அதிசாரமாக உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உடல்நிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்குப் பெருமை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள். பணவரவுகள் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் பாக்கியமும், புத்திரபாக்கியமும் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் உண்டாகும். வண்டி, வாகனம், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் மேலதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்லதொரு மேன்மை உண்டாகும். புதிய கிளைகள் நிறுவுவதற்கான சந்தர்ப்பங்களும் சிறப்பாக அமையும். மாணவர்களின் கல்வித்திறன் உயரும். சேமிப்பு பெருகும். சனிப்பரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் வக்ரகதியில் 7-3-2018 முதல் 3-7-2018 வரை
குரு பகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் நீண்டகால வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்-வாங்கல் மிகச்சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் சில வீண்செலவுகளும், மனசஞ்சலங்களும் தோன்றி மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய செயல்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஓரளவுக்குச் சாதகமான பலனைப் பெறுவீர்கள். கடன்கள் சற்றுக் குறையும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாகவே இருக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 4-7-2018 முதல் 4-10-2018 வரை
குருபகவான் 6-ஆம் வீட்டில் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்றே கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தடை ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் உடனடியாக ஒரு மாறுதல் உண்டாகும்.முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஒற்றுமை குறையாது. ராகு 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத வீண்விரயங்களைச் சந்திக்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சற்றுத் தாமதமாக நல்ல வேலை அமையும். உடல் நிலையில் சிறுபாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தாமதப்படும். குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 6-ல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றுவது நல்லது. அஷ்டமச்சனி நடப்பதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் சனிக்குப் பரிகாரம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 5, 6, 8.
நிறம்: வெண்மை, நீலம்.
கிழமை: வெள்ளி, சனி.
கல்: வைரம்.
திசை: தென்கிழக்கு.
தெய்வம்: விஷ்ணு, லக்ஷ்மி.

Leave a Comment