பல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம் Siddhar Remedies
மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும். அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும், பித்ரு சாபத்தை நீக்கவும், மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும், என அறிந்து கொள்ளலாம். நாம் செய்த ஒரு பாவத்தை ஆரம்பத்திலேயே போக்காத போது அந்த ஒரே பாவம் மட்டும் நம்மிடம் இருக்காது. ஒரு பாவம் விலக்காத போது அந்த பாவம் நம்முள் இருந்து தினம் தினம் ஒரு புது பாவத்தை செய்ய வைக்கும். இது நமக்கேதெரியாது அதனால்தான் பாவிகள் கடைசி வரையுமே பாவிகளாக பலரும் இருக்கிறார்கள். இடைபட்ட வாழ்வில் ஒன்றோ, நூறோ தர்மத்தை செய்து விட்டு நான் எவ்வளவோ தர்மம் செய்கிறேன், என் கஷ்டம் மட்டும் போகமாட்டேங்குது என புலம்புவார்கள்.
இவர்கள் கஷ்டம் தீராமல் இருப்பதற்கு மேற்கண்ட தினசரி பாவ கணக்கே காரணமாகும். எனவே நாம் செய்யும் தர்மம் அளவு அதிகரித்தால் தான் இந்த பித்ரு ஜென்ம பாவம் கழியும் எனவே இதை அறிந்த நம் முன்னோர்கள் ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவி (அ) குளித்து பொறி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள் .உணவே இல்லாமல் தவிக்கும் கிணறு, குட்டை, ஏரி ஆறு போன்ற இடத்தில் உள்ள மீன்களுக்கும் பொறி உணவு கொடுத்தால் அவ்வளவும் தர்மம்! உடனே வேலை செய்யும். யார் செய்கிறார்களோ இல்லையோ மாந்திரீக அருள் வாக்கு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் செய்ய வேண்டும் . காரணம் இறைக்கடமையில் குறுக்கிடக் கூடியவர்கள் ஆன்மீகவாதிகள்! ஊர் பாவத்தை சுமக்கும் துர்யோகம் உள்ளவரும் ஆன்மீகவாதிகள்தான்! பிறக்கும் போதே அதிக பித்ரு பரம்பரை பாவத்தில் பிறக்க கூடியவரும் ஆன்மீகவாதிகள்தான்! எனவே அவசியம் நீங்கள் தான்அதிகம் தர்மம் செய்ய வேண்டும். தர்மத்தின் அளவை பொறுத்து எந்த பாவமும் உங்களை அண்டாமல் காக்கும். தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும். அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை, பௌர்ணமி, ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள், ஞாயிற்றுக்கிழமை, தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .
உங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகும்!
நாம் மீனுக்கு உணவு கொடுத்து உதவுகிறோம் சரி, அது வளர்ந்த பின் அதை கொன்று சாப்பிடுகிறார்களே அது பாவம் இல்லையா என்று கேட்க தோன்றும், இந்த கேள்வி நியாயமானது தான், உயிரை வளர்ப்பது தர்மம் இந்த வாய்ப்பு பாவமற்றவருக்கும் துன்ப விடுதலை உள்ளவருக்கும் உண்டாகும் . உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள், எனவே நம் செயல் தர்மம் செய்து உயிரை வளர்ப்பதாக இருக்கட்டும், அத்தனை உயிர்களுக்கும் இது பொருந்தும் .மரங்களுக்கும் பொருந்தும், எனவே தான் சித்தர்கள் ஒரு உயிரை கொன்றாலும் பல நன்மைக்கு பயன்படுத்தினார்கள், மூலிகை என்னும் உயிரை கொல்லும் முன் சாப விமோசனம் செய்தார்கள். பாவ விமோசன மந்திரம் கூறி காப்பு கட்டி இறைவனை வேண்டி அதன் உயிர் அதன் உடலிலேயே இருக்க வேண்டும் என வேண்டி எடுத்து பின்பு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள், ஒன்றை கொன்றாலும், பல உயிர் பிழைக்க மருந்தாகவும் பயன்படுத்தினார்கள்! எந்த உயிரை கொன்றாலும் தவறு என்பதை உணர்ந்து பாவ புண்ணிய கணக்கை உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள் எனவே நாம் செய்யும் தர்மம் மூலமே அவர்களை சாந்தப்படுத்த முடியும்!!!
சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்