உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்? | Siddhar for 27 stars and rasi

உங்கள் பிறந்த நட்சத்திரம் மற்றும் இராசிக்கேற்ற சித்தர் வழிபாடு (Siddhar for 27 stars) :

நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்களோ அதே நட்சத்திரத்தில் பிறந்த சித்தர்களையும் – அவர்கள் சமாதி கொண்ட ஆலயங்களையும் தரிசிப்பதன் மூலம் அற்புதமான பலன்களை பெறலாம்.

சித்தர்களின் குறித்த மூலமே தெரியாத போது அவர்கள் இந்த நட்சத்திரத்தில் தான் பிறந்தார்கள் என்பது எப்படித் தெரியும் .. ??? என்று நீங்கள் கேட்கலாம்..

ஜனனசாகரம் எனும் போகர் எழுதிய நூலில் சித்தர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார்கள்? எவ்வளவு காலம் இருந்தார்கள்? அவர்களின் வல்லபங்கள் மற்றும் அவர்கள் சமாதியான இடங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

கீழ்கண்ட பதிவு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்

பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசிகேற்ற சித்தர்கள் வழிபாடு:

மேஷ ராசி சித்தர் (Mesha rasi siddhar)

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.

ரிஷப ராசி சித்தர் (Rishaba rasi siddhar)

ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

மிதுன ராசி சித்தர் (Midhuna rasi siddhar)

திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.

புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

கடக ராசி சித்தர் (Kadaga rasi siddhar)

பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)

ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

சிம்ம ராசி சித்தர் (Simma rasi siddhar)

மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர், அழகர் கோவில், மதுரை அருகில்.

உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

கன்னி ராசி சித்தர் (Kanni rasi siddhar)

அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூரார் – கரூர்.

சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

துலா ராசி சித்தர் (Thula rasi siddhar)

சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி, ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

விருச்சிக ராசி சித்தர் (Viruchiga rasi siddhar)

அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

தனுசு ராசி சித்தர் (Thanusu rasi siddhar)

மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்

பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்
.
உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி .

மகர ராசி சித்தர் (Magara rasi siddhar)

திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

கும்ப ராசி சித்தர் (Kumba rasi siddhar)

சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில், சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட்டா.

மீன ராசி சித்தர் (Meena rasi siddhar)

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோகி பரமஹம்ஸர், ஓமலூர்.

உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

சித்தர்கள் வகுத்த 64 கலைகள் பெயர்கள்

18 சித்தர்களின் பிறப்பும் மறைவும்

சித்தர்களின் மூல மந்திரம்

4 Comments

  • thirumoolar avittam nakshatram endru ungaludaiya 18 sidhhargal pirappum maraivum pathivil ..pathivida pattulathu aanal intha pathivil thirumoolar sadhayam nakshatram endru ullathu?
    ithil ethu, unmai?

    • Siddhargalin natchathiram veru, avaravar raasikku yettra vazhipada vendiya siddhargal veru… namakku kidaittha vivarangalil ivvaru kurippida pattulladhu.. melum idhu pattri naam research seidhu padhivai vilakkuvoam… nandri…

Leave a Comment