Guru Peyarchi Palangal 2022-23 Parigarangal
குரு பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023 (Guru Peyarchi Palangal 2022-23)
மேஷம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே…!
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள். இதுவரையிலும் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து பணப் புழக்கத்தையும், பிரபலங்களின் அறிமுகத்தையும், வசதி வாய்ப்பையும் கொடுத்து வந்தார் குரு பகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.2023 வரையிலும் விரய வீடான 12-ம் வீட்டில் வந்து அமர்கிறார்.
பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திர நாளில் தஞ்சை மாவட்டம்-வலங்கைமான் வட்டத்திலுள்ள ஆலங்குடி ஶ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் வழிபட்டு வாருங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்; வெற்றி கிட்டும்.
திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரையும், ஸ்ரீ எறும்பீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 70/100
ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து எந்தவொரு முடிவையும் உறுதியாக எடுக்க முடியாமல் தவிக்க வைத்தார் குருபகவான். இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை, லாப வீட்டில் வந்து அமர்கிறார்.
பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில் காஞ்சி அருகிலுள்ள தக்கோலத்துக்குச் சென்று, அங்குள்ள ஈசனையும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். முதியோருக்கு உதவுங்கள்; உங்கள் வாழ்வில் நல்லது நடக்கும்.
திருவையாறுக்கு அருகிலுள்ள திருப்பழனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்
மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 60/100
அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே…!
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை 10-வது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். வேலைப் பளு கூடும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பம் இருக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
பரிகாரம்: அனுஷ நட்சத்திர நாளில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டை தலத்துக்குச் சென்று, அங்கு அருளும் ஶ்ரீபசுபதிநாதரையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுங்கள்; நிம்மதி கிட்டும்.
கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.
கடகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
கடகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 70/100
கடமை உணர்வு கொண்ட நீங்கள் எல்லாவற்றையும் விரும்பிச் செய்பவர்களே…!
சீர்திருத்த சிந்தனை அதிகமுள்ளவர் நீங்கள். குரு பகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ல் அமர்வதால், உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும்.
பரிகாரம்: மூலம் நட்சத்திர நாளில், விருத்தாசலத்தில் அருளும் ஶ்ரீவிருத்தகிரீஸ்வரரையும், ஶ்ரீவிபசித்து முனிவரையும், ஶ்ரீதட்சணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.
சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்புக் கூடும்.
சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே!
ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்பவர் நீங்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை 8-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். 8-ல் நிற்கும் குருவால் பெயர் கெடுமே, எந்த வேலையையும் திறம்பட செய்ய முடியாதே என்றெல்லாம் வருந்தாதீர்கள்.
பரிகாரம்: சித்திரை நட்சத்திர நாளில், காஞ்சி-உத்திரமேரூர் பாதையில் உள்ள திருப்புலிவனம் சென்று, அங்கு அருளும் ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரரையும் ஶ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி உண்டு.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.
கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
கன்னி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 75/100
வெளிப்படையாக மற்றவர்களை சில நேரங்களில் விமர்சிக்கும் மண்ணின் மைந்தர்களே…!
மனிதநேயம் மாறாதவர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து, உங்களை நேருக்கு நேர் பார்க்கவுள்ளார். உங்களு டைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
பரிகாரம்: அனுஷம் நட்சத்திர நாளில் சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருளும் ஶ்ரீகுருபகவானை, நெய் விளக்கேற்றி வணங்கி வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.
கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஹயக்ரீவரை புதன்கிழமையில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.
துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
துலாம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 50/100
வெகுளித்தனமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுப்பவர்களே…!
மற்றவர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். குருபகவான், 14.4.22 முதல் 22.4.23 வரை 6-ம் வீட்டில் அமர்ந்து, சந்தோஷத்தையும் சங்கடங்களையும் கலந்துத் தரவுள்ளார்.
பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சிதம்பரத்தில் அருளும் ஶ்ரீநடராஜப் பெருமானையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள். வாய் பேச இயலாத அன்பர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் சென்று தரிசியுங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.
விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 75/100
பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே…!
வாக்கு சாதுர்யம் மிகுந்தவர் நீங்கள். குருபகவான், தற்போது 14.4.22 முதல் 22.4.23 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்கிறார். உங்களைப் புதிய பாதையில் பயணிக்க வைப்பார். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள்.
பரிகாரம்: அசுவினி நட்சத்திர நாளில் திருச்செந்தூரில் அருள்புரியும் ஶ்ரீமுருகப்பெருமானையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; நிம்மதி பெருகும்.
தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 45/100
தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர்களே…!
சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும் என்ற சூட்சுமத்தை உணர்ந் தவர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை நான்காவது வீட்டிற்குள் அமர்கிறார். வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள்.
பரிகாரம்: பூரட்டாதி நட்சத்திர நாளில், கருவூரில் அருளும் ஶ்ரீபசுபதீஸ்வரரையும் ஶ்ரீதட்சிணாமூத்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும்.
மகரம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 40/100
உதட்டால் பேசாமல் இதயத்தால் பேசுபவர்களே…!
பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காதவர் நீங்கள். குருபகவான், 14.04.22 முதல் 22.4.23 வரை, ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். எதையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும். ஒரு வேலையை இரண்டுமூன்று முயன்று முடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனினும் முடிவு வெற்றியாகவே அமையும்.
பரிகாரம்: புனர்பூசம் நட்சத்திர நாளில் காஞ்சிபுரம் சென்று, ஶ்ரீஏகாம்பரநாதேஸ்வரரையும் அங்குள்ள ஶ்ரீதட்சிணாமூத்தியையும் வணங்கி வாருங்கள். மனவளம் குன்றிய அன்பர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.
கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டையில் வீற்றிருக்கும் பசுபதிநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.
கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 60/100
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே…!
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் காய் நகர்த்தி காரியம் சாதிப்பவர் நீங்கள். குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். அடிமனதில் இருந்த போராட்டம் விலகும். அலட்சியப் போக்கு மாறும். குடும்பத்தில் மதிப்பு கூடும்.
பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில், திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூர் சென்று, அங்கு அருளும் ஶ்ரீஅக்னீஸ்வரரையும் ஶ்ரீதட்சணாமூத்தியையும் வணங்கி வாருங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவி செய்யுங்கள்; நினைத்தது நிறைவேறும்.
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்
மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-2023
மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 60/100
மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே…!
எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள். குருபகவான் 14.4.22 முதல் 22.4.23 வரை, உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாகப் பலன் தரப் போகிறார். பொறுப்புகளும், வேலைச்சுமையும், தேடலும் அதிகரிக் கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்க்கும் சூழல் வரலாம்.
பரிகாரம்: மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில், தஞ்சாவூருக்கு அருகில் திருக்கருகாவூரில் அருளும் ஶ்ரீமுல்லைவனேஸ்வரரையும் ஶ்ரீதட்சிணாமூத்தியையும் சென்று வணங்கி வாருங்கள்; ரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும்; முன்னேற்றம் உண்டாகும்.
சென்னை திருவலிதாயத்தில் (பாடி) அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்