கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் – Kumba rasi guru peyarchi palangal 2023-24
கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024
சூழலுக்கு ஏற்ப காய் நகர்த்தி காரியத்தைக் கச்சிதமாக முடிக்கும் திறமைசாலிகள் நீங்கள்.
தைரிய குரு – கும்பம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சனி பகவானின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே!!! குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 11-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 4-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே திருமணம் ,நண்பர்கள் (7-மிடம் ) பாக்கியஸ்தானம் (9-மிடம்) லாபம் (11மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குரு பகவான் உங்க ராசிக்கு 2வது வீட்டிலிருந்து 3வது வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே ஜென்ம சனி காலக்கட்டம் ஆரம்பம், தற்போது குரு பகவானும் சரியில்லாத இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குரு பகவான் 3வது வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தைரிய குறைவு ஏற்படும், எதிலும் தயக்கம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியாக அடிக்கடி சிக்கல் வரும். சிலருக்கு ஏற்கனவே வேலை செய்துக்கொண்டிருந்த இடத்தைவிட்டு இடமாற்றம் செய்யவோ அல்லது அந்த வேலையைவிட்டு விலகக்கூடிய சூழ்நிலையும் வரும்.
உத்தியோகம் நிமித்தமாக, தொழில் நிமித்தமாக ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். முக்கியமான பொருள் திருட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே, தங்க நகைகள், செல்போன், வண்டி, வாகனம் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைக்கவும். எதிரிகள் அதிகரிக்கும் காலம் அதனால் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். எதிரிகளே வம்பிற்கு வந்தாலும் ஒதுங்கி இருப்பது நல்லது. மனக்குழப்பம் அதிகரித்துக் காணப்படும். எனவே, முடிந்தவரை மனதை தெளிவாக வைத்துக்கொண்டு வாழ்க்கை பற்றிய சிந்தித்து செயல்பட வேண்டும்.
அதேபோல், உணர்ச்சிவசப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் வீண் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, உங்க வேலையுண்டு நீங்க உண்டு என்று இருந்தால் பிரச்சனை இருக்காது. பல அனுபவப் பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். கவலைப்படுவதை தவிர்த்துவிட்டு பிரச்சனையை சரிசெய்வதற்கான வழியை தேட முயற்சி செய்ய வேண்டும். மேலும், இளைய சகோதர்களுடன் வாக்குவாதங்கள் வரும். இப்படி, குரு பகவான் அமரக்கூடிய இடம் பல கலவையான பலன்களை கொடுப்பார். இருந்தாலும், பார்க்கக்கூடிய இடம் ஓரளவுக்கு ஓகேவாக இருக்கும்.
அதாவது குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 7வது வீட்டான களஸ்திர ஸ்தானத்தை பார்ப்பதால், திருமணத்தில் இருந்துவந்த தடை விலகி விரைவில் திருமண யோகம் ஏற்படும். காதலர்கள் தம்பதிகளாக மாற வாய்ப்புள்ளது. பிரிந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பம் மற்றும் சமுதாயத்தில் இழந்த மதிப்பு, மரியாதை மீண்டும் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு கிடைக்கும், இதனால் செல்வாக்கு உயரும். அடுத்ததாக, குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 9வது வீட்டான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால், தந்தைக்கும் உங்களுக்கும் இருக்கும் பரஸ்பர நெருக்கம் அதிகரிக்கும். தண்ட செலவுகள் குறையும்.
தொழில் விழுந்த அடியால் ரொம்ப கவலையாக இருந்திருப்பீர்கள், அவை அனைத்தும் விலகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மனமகிழ்ச்சியை கொடுக்கும். தொட்டது துலங்கும். உறவுகளால் இன்பங்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பட்ட கஷ்டத்திற்கான பலனை பெறக்கூடிய காலம் வந்தாச்சு. மேலும், குரு பகவான தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் தொல்லை அனைத்திற்கும் விடிவுகாலம் பிறந்தாச்சு. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகள் அனைத்தும் லாபத்தை கொடுக்க ஆரம்பிக்கும். வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களே..குரு பகவான் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்குப் போகிறார். ஏழரை சனி இருப்பதால் எந்த பிரச்சினை என்றாலும் கவலைப்பட வேண்டாம். பொறுமையும் நிதானமும் தேவை. குரு மூன்றில் மறைவதால் முயற்சிகளை கை விட வேண்டாம். காலம் கடந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
பரிகாரம்
அருகில் இருக்கும் சிவன் பார்வதியை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.ஒரு முறை திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்யுங்கள்.முடிந்தால் கிரிவலம் செல்லுங்கள்.உங்கள் வழக்கை பிரகாசிக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
அள்ளிக் கொடுப்பதில் பாடல் வரிகள்| Alli koduppathil song lyrics tamil அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்… Read More
பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்| Pachai Mayil Vahananae Lyrics Tamil பச்சை மயில் வாகனனே – சிவ… Read More
மஞ்ச பொடவ கட்டி பாடல் வரிகள் | Manja Podava Katti song lyrics tamil மண்ணளந்த காளி அவள்… Read More
மலையனூரு அங்காளியே பாடல் வரிகள் | Malayanooru Angaliyae song lyrics in tamil மலையனூரு அங்காளியே பாடல் வரிகள்… Read More
தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் - Onnam Padi Eduthu Song lyrics தன்னன்னா நாதினம் பாடல் வரிகள் அல்லது… Read More
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா! Karthigai deepam tiruvannamalai 🏕✅ தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை.… Read More