Events

Meena rasi Guru peyarchi palangal 2023-24 | மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்

Meena rasi guru peyarchi palangal 2023-24

மீனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Meena rasi guru peyarchi palangal 2023-24

மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024

மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவர்களே…!

எளிய மக்களை அதிகம் நேசிக்கும் அன்பர் நீங்கள்.

குடும்ப குரு – மீனம்

இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குரு பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே. குருபகவான் உங்கள் ராசிக் மற்றும் 10-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானமான 2-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே நோய்-கடன் (6-மிடம் )ஆயுள் -அவமானம் (8-மிட)தொழில் (10மிடம்) ஸ்தானங்களில் பதியும். வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குரு பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்திலிருந்து 2வது வீடான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். 12 வருடங்களுக்கு பிறகு உங்க ராசிக்கு 2வது இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் பல நன்மைகளை அளிக்கவுள்ளார். பொருளாதார ரீதியான தட்டுப்பாடு, தடை, தாமதம் விலகி முன்னேற்றம் ஏற்படும். செல்வ செழிப்பு அதிகரிக்கும். இருப்பினும், விரைய சனி காலம் என்பதால், விரைய செலவுகள் அதிகரித்தே காணப்படும். அதாவது, வரவு இரு மடங்காக இருந்தால் ஒரு மடங்கு செலவுக்கே போய்விடும். எனவே, பார்த்து பக்குவமாக செலவுகளை செய்ய வேண்டும். வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பேச்சினால் பல இடங்களில் பிரச்சனை, அவமானம் ஏற்பட்டிருக்கும். எதிரிகள் தொல்லை தலைவலியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்தும் விலகி அமைதியான சூழல் உருவாகும். எதிர்கள் நண்பர்களாகவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் அனைத்தும் விரைவில் நடந்து முடியும். சிலருக்கு புது வீட்டுக்கு குடியேறும் யோகம் உண்டு. வியாபாரத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை, நெருக்கடி, இழுபறிகள் அனைத்தும் விலகி சுமூகமாக நிலைக்கு வரும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை இருந்த வண்ணம் இருக்கும்.

கைக்கு வராமல் இழுத்தடித்த பணவரவு வசூலாகும். பணியிடத்தில் இருந்த சம்பள பிரச்சனை நீங்கி புதிய பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலையிழந்தவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாத மீன ராசியினருக்கு குழந்தை பிறக்கும். புதிய வேலையில் சேர விரும்புவோருக்கு நல்ல காலக்கட்டம். அதேபோல், குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 6வது வீடான ருணரோக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால், மருத்துவ செலவுகள் குறையும். வீண் தகராறுகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. புதிய தொழில் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பெரிய முதலீடுகளில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 8வது வீட்டை பார்வையிடுவதால், தூக்கமின்மையால் அவதிபட்டு வந்த மீன ராசியினருக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. வழக்கு பிரச்சனைகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பு.

மேலும், குரு பகவான் தனது 9வது பார்வையாக ராசிக்கு 10வது வீடான ஜீவன ஸ்தானத்தை பார்வையிடுவதால், சொந்த தொழில் செய்வோருக்கு வளர்ச்சி பெருகும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனை முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் வாய்ப்புண்டு. நண்பர்கள் வழியில் ஆதாயம் அதிகரிக்கும்.

மீன ராசிக்காரர்களே ஜென்ம குரு இடப்பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இனி தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சுபிட்சமான கால கட்டமாகும். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும்.

பரிகாரம்
அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு புதன் கிழமை புதன் ஓரையில் சென்று வாருங்கள்.ஒரு முறை ஸ்ரீ ரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்.வாழ்க்கை செழிப்படையும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Share
ஆன்மிகம்

Leave a Comment
Published by
ஆன்மிகம்
 • Recent Posts

  Today rasi palan 14/07/2024 in tamil | இன்றைய ராசிபலன் ஆனி – 31 பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை

  Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன்   *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 ஆனி:~ 𝟯𝟬 :-*… Read More

  4 hours ago

  ஆனி திருமஞ்சனம் திருவிழா

  *ஆனி திருமஞ்சனம் என்பது என்ன?* சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று… Read More

  3 days ago

  ராசி மண்டலங்கள் என்றால் என்ன? | Rasi Mandalam in Tamil

  ராசி மண்டலங்கள் என்றால் என்ன? Rasi Mandalam in Tamil 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம்… Read More

  1 week ago

  ஏகாதசி தோன்றிய கதை மற்றும் விரதமுறை| Ekadasi story tamil

  ஏகாதசி தோன்றிய கதை மற்றும் விரதமுறை| Ekadasi story tamil ஏகாதசி திருநாளில் முழு உபவாசம் இருக்கலாம்; அல்லது தானியமற்ற… Read More

  2 weeks ago

  பிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham viratham benefits

  பிரதோஷ விரதமுறை மற்றும் பலன்கள் பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்… Read More

  2 weeks ago

  Kandha sasti kavasam lyrics in Tamil

  கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் (Kandha sasti kavasam lyrics… Read More

  1 week ago