ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் Rishaba Rasi Guru Peyarchi Palangal 2023-24
ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024
ஏமாளிகள், அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே..!
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்டவர் நீங்கள். உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள்.
விரைய குரு – ரிஷபம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
சுக்கிர பகவான் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே! வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்க போகிறது என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு வந்தாலும் அவர் ரிஷப ராசிக்கு ஓரளவு நல்ல பலனையே தர உள்ளார். நல்ல மாற்றங்கள் உண்டாகும். அடுத்த ஒரு ஆண்டு அதிக பயணங்களை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. நம்பிக்கையுடன் உழைத்தால் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.
விரய ஸ்தானம் என்பதால் அதிக செலவுகள் ஏற்படும் என்ற கவலை வேண்டாம். குரு முழு சுபர் என்பதால் உங்களுக்கு திருமணம், குழந்தைப்பேறு தொடர்பான சுப செலவாக தான் தருவார்.
குடும்ப தேவைக்காக கடன் வாங்கக்கூடிய சூழல் உருவானாலும், அதை வேகமாக திருப்பி செலுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களை தன் பார்வையால் பலப்படுத்துவார். ரிஷப ராசிக்கு 12ம் வீடான விரய மோட்ச ஸ்தானத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலையில் அவரின் 5ம் பார்வையால் ராசிக்கு 4ம் வீடான சுக, தாயார், வீடு, வாகன ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
இதன் காரணமாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. புது வீடு கட்டுவது தொடர்பாக செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தாயார் வகையில் உங்களுக்கு சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபார விருத்தி ஏற்படவும். புதிய தொழில் தொடங்க சில தடைகள் வந்து நீங்கும்.
குரு பகவான் தன் 7ம் பார்வையால் ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தைப் பார்க்கிறார். இந்த பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். தொழில், வியாபாரத்தில் உங்களின் எதிரிகளை சமாளிக்கக்கூடிய வலிமை கொடுப்பார். இதனால் வியாபாரத்தை விரிவுபடுத்த முடியும். உங்களுக்கு தடைகள், நெருக்கடிகள் விலகும்.
குருவின் 9ம் பார்வையாக ராசிக்கு 8ம் இடமான ஆயுள், மாங்கல்யம் ஸ்தானத்தைப் பார்க்க உள்ளார். இந்த காலத்தில் உங்களுடன் போலியாக பழகியவர்களின் உண்மை ரூபம் உங்களுக்கு தெரியும். வேலை தேடுபவர்களுக்கு தகுந்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
நீங்கள் உங்களின் ரகசியத்தையும், குடும்ப விவகாரங்களையும் வெளிநபர்களிடம் பேச வேண்டாம். ஆராய்ச்சி படிப்பில் உள்ளவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும்.
விரைய குரு காலம், சுப செலவுகள் அதிகரிக்கும். நிலம், சொத்து வகையில் பணத்தை முதலீடு செய்யலாம். தங்க ஆபரணங்கள் வாங்கலாம். கூட்டுத் தொழில் செய்ய இது ஏற்ற காலமில்லை. அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். போட்டித்தேர்வில் வெற்றிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண விசயங்களில் கவனம் தேவைப்படும் காலமாகும்.
பரிகாரம்
அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை வணங்கி வாருங்கள் வாழ்வில் ஏற்றம் இருக்கும். வியாழக் கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்வதும், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நல்லது
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை: கந்த சஷ்டி விரத மகிமைகள், கந்தசஷ்டி விரதம் கடை… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _* _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *ஐப்பசி -… Read More
Lakshmi kubera pooja சகல ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர விரத பூஜை... சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில்… Read More
Diwali celebrations தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்? நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு முக்கிய பண்டிகை தீபாவளி. அதாவது தீபங்களின் வரிசைகள்,… Read More
Yema Deepam தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் ! யம தீபம் - 30/10/2024 -------------------… Read More
Lord muruga different darshan temples குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் (Lord Muruga) இருக்கும் இடம் என்பார்கள். அபூர்வ தோற்றத்தில்… Read More
Leave a Comment