குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24 Mesha rasi guru peyarchi palangal 2023-24
மேஷம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024
சுயமரியாதையின் சொந்தக்காரர்களே…!
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர் நீங்கள்.
ஜென்ம குரு – மேஷம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
மேஷ ராசிக்கு 9ஆம் இடமான தனுசுவுக்கும் 12-ஆம் இடமான மீனத்துக்கும் உரியவர் குரு பகவான். இதுவரை 12ம் இடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது உங்கள் ஜென்ம ராசியான மேஷத்திற்கு வருவது அவரது விசேஷப் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் களத்திர ஸ்தானம் பித்ரு ஸ்தானங்களில் பதியும்.
மேஷ ராசி அதிபதி செவ்வாயின் நட்பு கிரகமாக குரு விளங்குகிறார். குரு பகவான் மேஷ ராசியிலேயே இருக்கும் ராகுவுடன் சேர உள்ளதால் ஓரளவு சுப பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் ராகு ஒரு நிழல் கிரகம், அவருடன் ஒளி கிரகம் சேர உள்ளதால் குருவின் சுப ஒளியின் தன்மை சற்று குறையும். அதனால் குருவினால் கிடைக்கக்கூடிய சுப பலன்கள் குறைய வாய்ப்புள்ளது.
அதே சமயம் இந்த அமைப்பு அடுத்து அக்டோபர் மாதம் நடக்க உள்ள ராகு கேது வரை மட்டும் தான். ராகு மீன ராசிக்கு சென்ற பின்னர் குரு பகவான் மிகவும் சிறப்பான பலனை தன் முழு ஒளியுடன் வாரி வழங்க உள்ளார்.
குரு தரும் நன்மைகள் :
ஒரு ராசிக்கு குரு மட்டுமோ அல்லது சனி மட்டுமோ நன்மை தீமைகள் வழங்கிவிட முடியாது. நவகிரகங்கள் சேர்ந்து தான் நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களை தருகின்றனர்.
தற்போது குரு ஆனவர் உங்கள் ராசியிலேயே அமர்ந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்து அதற்கான பலன்கள் தருவது சிறப்பானதாக இருக்கும் என்ற நிலையில், ஏற்கனவே ஜனவரி 17ல் நடந்த சனி பெயர்ச்சியும் உங்களுக்கு லாபம் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதால் பல வகையில் உங்களுக்கு கவலைகள் தீரக்கூடியதாக இருக்கும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமண பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது.
குரு பகவானின் அமைப்பால் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செயல்பாடுகளில் அதிர்ஷ்டம் சிறப்பாகக் கிடைக்கும். பெற்றோர்களுக்கு தங்களின் பிள்ளைகள் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகள் நீங்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் சேர வாய்ப்புள்ளது.
வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் மேன்மை அடையவும், நல்ல பெயர் வாங்கவும் வாய்ப்புள்ளது. வேலை, தொழில் தொடர்பாக நீங்கள் எடுத்த முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி, வளர்ச்சி ஏற்படும். உங்களுக்கு வராமல் தடைப்பட்ட வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும்.
வேலை மாறுதல், பதவி உயர்வு போன்ற விஷயங்கள் உங்களுக்கு உயர்வு தரக்கூடியதாக இருக்கும்.
அதனால் உங்களுக்கு நிதி கிடைக்கக்கூடிய வேலை, தொழில் போன்ற விஷயங்களில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும். அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளை அடைந்திட முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும்.
ஏற்கனவே உங்கள் ராசியில் அசுப கிரகமான ராகு அமர்ந்து உங்கள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டைப் போடுவது, நினைத்த காரியம் பழிக்காமல் போதல், சுப விஷயங்கள் நடக்காமலிருந்தால் போன்ற விஷயங்களை குருவின் சுபத்துவத்தால் தடுக்கப்பட்டு உங்களின் சாதகமற்ற சூழலிலிருந்து மீட்டு எல்லா வகையிலும் ஒரு மேன்மையை அடைந்திட முடியும். எந்த வேலையையும் ஒரு ஆர்வத்துடன் செய்வீர்கள்.
உங்கள் தலைமேல் அமர்ந்துள்ள ராகு உடன் குரு இணையப்போகிறார். வெளிநாட்டுக்கு வேலை, படிப்புக்காக செல்லலாம். தொழில், வேலையில் கவனம் தேவை. பெரிய அளவில் அகலக்கால் வைக்க வேண்டாம். வெளிநாடுகளில் தொழில் தொடங்கலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய உயர்வுக்கு செல்லப்போகிறீர்கள். நல்ல காரியங்கள் நடைபெற மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க சிவ ஆலயங்களில் நவ கிரக குரு பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
பரிகாரம்
குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும் முடிந்தால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். குரு பெயர்ச்சி பல்வேறு விதத்தில் மேஷ ராசிக்கு நன்மைகள் மட்டுமே அதிகம் தர வாய்ப்புள்ளது. அதோடு சனி பகவானும் உங்களுக்கு கைகொடுக்க உள்ளதால் இந்த 2023ம் ஆண்டு பெரியளவில் சாதகமான ஆண்டாகவே இருக்கும்.
குருவின் அருளைப் பெற்றிட மேஷ ராசியினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது நன்மை தரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
Sivapuranam lyrics Tamil - சிவபுராணம் பாடல் வரிகள் சிவபுராணம் பாடல் வரிகள் (sivapuranam lyrics tamil) மற்றும் இந்த… Read More
Aadi Pooram Festival ஆடிப்பூரம் (Aadi Pooram) என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது… Read More
ஓம் நமசிவாய... ஓம் சக்தி.... நம: பார்வதீ பதயே என்பது என்ன? சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல,… Read More
சக்தி வாய்ந்த 6 சிவன் மந்திரங்கள் | Powerful Shiva Mantras Tamil Powerful shiva mantras tamil |… Read More
பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல்… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் Join our 3rd WhatsApp group *_📖 பஞ்சாங்கம்:… Read More
Leave a Comment