மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal 2023-24
மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024
அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே…!
லாப குரு – மிதுனம்
இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வழி நடத்தும் ஆற்றல் பெற்றது நவக்கிரகங்கள் நவக்கிரகங்களிலே சுபக்கிரகமாக விளங்கக் கூடிய ஸ்ரீ குருபகவான் ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு கடக்கும் காலம் 1 வருடம் ஆகும் ஸ்ரீ சோபகிருது வருஷம் சித்திரை மாதம் 09-ம் தேதி 22.04.2023 சனிக்கிழமை இரவு 11.27-க்கு மணிக்கு ஸ்ரீ குருபகவான் ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன இராசியிலிருந்து அஸ்வினி நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் இடத்திற்கும் 10-ம் இடத்திற்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். அதே சமயம் அவருடைய விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 3-ம் இடம்(சகோதர ஸ்தானம் ) 5-ம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) மற்றும் 7-ம் இடம் (களத்திர ஸ்தானம் )ஆகியவற்றில் பதியும்.
குரு பகவான் பொதுவாக 5, 7, 9 ஆகிய இடங்களை தன்னுடைய பார்வையால் சுபப்படுத்துவார்.
குரு ராசிக்கு 11ல் லாப ஸ்தனத்தில் சஞ்சரிக்கிறார்.
குருவின் 5 பார்வையால், உங்கள் ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குருவின் 7ம் பார்வையாக ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குரு 9ம் பார்வையால் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தைப் பார்க்கிறார்.
குருவின் அமைப்பு மற்றும் அவரின் பார்வை பலன் காரணமாக மிதுன ராசியினரின் நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் நீங்கள் ஆணவத்தை விடுத்து, நிதானமாக செயல்படுவது அவசியம்.
உத்தியோகஸ்தர்கள் இதுவரை பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கும். உங்களின் செயல்களுக்கு அங்கிகாரம் கொடுப்பது போல பதவி, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதே சமயம் தனக்கு அனைத்தும் தெரியும் என்ற மன எண்ணத்தில் செயல்பட வேண்டாம். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முயல்வது நல்லது.
பணியிடத்தில் கோபத்தைத் தவிர்த்து நிதானமாக செயல்படவும்.
தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் கடன் ஏதேனும் இருப்பின் அதை திருப்பி செலுத்த முயலவும்.
சிறப்பான முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாக இருக்கும் என்றாலும், உங்கள் தொழிலில் சரியான விதிமுறைகளை, சட்ட விஷயங்களைப் பின்பற்றி செயல்படவும்.
குருவின் அமைப்பு, குருவின் பார்வை உங்களுக்கு களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால், மேஷத்தில் குரு சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் திருமண முயற்சிகள் சாதகமாக அமையும். நல்ல துணையை கரம் பிடிக்கலாம்.
அதே போல குடும்பத்தை விட்டு பிரிந்த ந்பர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேர வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க சாதகமான காலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
அரசியல், அரசு துறையை சேர்ந்தவர்களுக்கு பல சாதமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த காலத்தில் உங்களுக்கு மறைமுக எதிரிகளின் தொந்தரவு இருக்கும்.
உங்களால் முடிந்த வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கவும். யோசித்து பேசுவதும், வாக்கு கொடுப்பது அவசியம்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அதிக கிடைக்க வாய்ப்புள்ளது. சரியான மற்றும் சரியாக வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுவது நல்லது.
கல்வி :
மாணவர்கள் கல்வியில் மேன்மை அடையக்கூடிய காலமாக இருக்கும். வெளிநாட்டு வேலை, கல்வி கிடைக்க சாதகமாக இருக்கும்.
பெரும்பாலான நாட்களில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும் உங்களின் காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்சினைகளில் கவனம். முதுகுத் தண்டு, ரத்தம் சார்ந்த பிரச்சினைகளில் மருத்துவரை முறையாக ஆலோசனை பெறவும்.
பயணங்களின் போது எச்சரிக்கையாகவும், மெதுவாகவும் செல்லவும்.
குரு பகவான் லாப ஸ்தானத்தில் அமரப்போகிறார் குருபகவான் தொட்டது துலங்கப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறும். விவாகரத்தானவர்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பொன்னால காலம் பிறக்கப்போகிறது.
பலன் தரும் பரிகாரம்
உங்களுக்கு அருகில் இருக்கும் மகான் கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள் ஒருமுறை மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர மஹானை தரிசித்து வாருங்கள் மகிழ்ச்சி மலரும். மிதுன ராசியினர் அடிக்கடி மகான்கள், குரு, சித்தர் சமாதி இடங்களுக்கு சென்று வணங்கி வாருங்கள். அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-24
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்
Thirumeeyachur lalithambigai temple பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் வரமுடியும்... திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் திருக்கோயில்... ஸ்ரீலலிதாம்பாள் எனும் இந்தத் திருநாமத்தில்… Read More
Anbenum pidiyul lyrics in tamil வள்ளலாரின் புகழ் பெற்ற பாடல் வரிகள் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும்… Read More
சென்னையின் நவக்கிரக ஸ்தலங்கள்!!.. சென்னைக்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் நவக்கிரக ஸ்தலங்களை அமைத்துள்ளனர். சென்னைக்கு அருகிலுள்ள… Read More
தை அமாவாசை முன்னிட்டு செய்ய வேண்டிய பித்ரு கடமைகள் thai amavasai special... அமாவாசை தினம் நமது சமயத்தில்… Read More
தைப்பூசம் தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி? 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔… Read More
Today Rasi Palan in Tamil | இன்றைய இராசிப்பலன் இன்றைய பஞ்சாங்கம் _*பஞ்சாங்கம்*_ °°°°°°°°°°°°°° *மாசி - 07*… Read More