Thanusu rasi guru peyarchi palangal 2021-22

தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Thanusu rasi guru peyarchi palangal 2021-22

உதவி என்று வருபவர்களுக்கு தயக்கமின்றி… தன்னால் முடிந்த உதவிகளை செய்திடும் தனுசு ராசி அன்பர்களே…!!

தனுசு ராசி அன்பர்களே, தனுசு ராசிக்கு இது வரை 2ம் இடத்தில் இருந்து மிகவும் அற்புதமான பலன்களை தந்து கொண்டு இருந்த குரு இப்போது ராசிக்கு 3ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பாக அமையும் என்று சொல்லிவிட முடியாது. மேலும் 3ம் இடமாகிய மறைவு ஸ்தானத்திற்கு குரு வருவது பொதுவாக நன்மை தர கூடியது அல்ல. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு கிடைப்பதால் மிக பெரிய நன்மைகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் கைகூடும். திருமண ஆனவர்களுக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் மிக பெரிய பாக்கியங்கள் ஏற்பட போகிறது. நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்த உயர் பதவிகள் இப்போது கிடைக்கும். லாப ஸ்தானமாகிய 11ம் இடத்தை குரு பார்த்துக்கொண்டு இருப்பதால் பொருளாதார ரீதியாக இருந்த அணைத்து தடைகளையும் தகர்த்தெறிய முடியும். வாங்கிய கடனை திரும்ப அடைத்துவிடுவீர்கள். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். தொழில் வருமானம் அதிகமாக கிடைக்கும். பெரியோரின் அன்பும் ஆசியும் கிடைத்து குரு பெயர்ச்சியை சிறப்பாக பயன்படுத்தி கொள்வீர்கள்.

இந்த பெயர்ச்சி சாதாரண பலன்களை அளிக்கும் காலக் கட்டமாக இருக்கும். உடன்பிறப்புகள் வகையில் சில நெருக்கடிகள் வரும். சேமித்த பணத்தை வீண் செலவு செய்ய வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன், மனைவிக்குள் சில நெருடல்கள் வரும். முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பார்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. பிறர் மனம் கோணாத வகையில் பார்த்துக்கொள்ளவும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருக்க இது ஏற்ற தருணம். இது உங்கள் எதிர்காலத்தை மேன்மையாக்க உதவும்.

சிறு சிறு பயணங்கள் நன்மை தரும். குடும்பத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயலாற்ற முடியும். எதிர்பார்த்த அதிர்ஷ்டம் உங்களை நாடி வரும். கடினமான முயற்சிகளில் வெற்றி பெற முடியும். குடும்ப நபர்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வர். நீங்கள், தேவையற்ற பேச்சுக்களையும், விவாதங்களையும் கண்டிப்பாகத் தவிர்ப்பது நல்லது. உங்கள் நிதிநிலையை மேம்படுத்திக் கொள்ள இது உகந்த நேரம் ஆகும். வீடு வாங்கல் விற்றல் மூலமும் நீங்கள் ஆதாயங்களைப் பெற இயலும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, உங்கள் உடன் பிறந்தவர்களுக்கும் நீங்கள் நிதி உதவி செய்து, அவர்களின் ஆதரவைப் பெறக் கூடும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியும். உரிய நேரத்தில் உறவினர்கள் அளிக்கும் உதவி,பெரியளவில் உதவியாக இருக்கும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். பெற்றவர்களும், பெரியவர்களும் கூட, உங்களுக்கு ஆசியும், ஆதரவும் தரக்கூடும். இது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கமாக அமையும். கணவன் மனைவி உறவும், குடும்ப உறவும் கூட, சுமுகமாகவே இருக்கக் கூடும். தற்போது உள்ள ஆரோக்கியப் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்தவும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொள்ளவும். அதனால் மனம் அமைதியின்மை ஏற்பட்டு அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். நீங்கள் புத்தி சாலித்தனத்துடன் எதிலும் செயலாற்ற முடியும். என்றாலும், உடன் உபாதைகள் காரணமாக, நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். எனவே நீங்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொவது சிறப்பு.

உத்யோகத்தில் பதவி உயர்வும், எதிர்பார்க்கும் ஊதிய உயர்வும் உங்களை நாடி வரும். வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி, தொழில், செய்பவராக இருந்தாலும் சரி, உங்கள் திறமைக்கு சாவல் அளிக்கும் தருணங்கள் நிறைய இருக்கும். சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உத்யோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாத வகையில் பணியாற்ற வேண்டும். கூட்டு தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கை தேவை, பணிகளை முழுவதுமாக அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காமல் கவனித்துக்கொள்வது நல்லது. தொழில் தொடர்பான பயணங்களுக்கும், மாற்றங்களுக்கும் நீங்கள் தயாராக இருப்பது நல்லது. உங்கள் முயற்சிகளுக்குக் கண்டிப்பாக, உரிய பலன் கிடைக்கும்.

பரிகாரம்: குரு பகவானின் திரு அருளை பெற ஞானிகள், தவசீலர்கள் முக்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று தரிசிப்பது நல்லது

காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment