Kumba rasi guru peyarchi palangal 2021-22
கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் – Kumba rasi guru peyarchi palangal 2021-22
குணம் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே..!!
கும்ப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் இருந்து அதிகப்படியான செலவுகளை தந்து கொண்டு இருந்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்கிறார். ஜென்ம ராசியில் குரு இருப்பது பொதுவாகவே பலம் பொருந்திய அமைப்பாகும். இது வரை 12ம் இடத்தில் இருந்த குரு மிகுந்த அலைச்சலையும் சேமிக்க முடியாத செலவுகளையும் கொடுத்து இருப்பார். ஜென்ம குருவாக இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வை செய்து பலம் சேர்கிறார். 5ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அவ்விடத்தை குரு பார்ப்பதால் உயர்வான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் உள்ளோர்க்கு விரைவில் மணவாழ்க்கை அமையும். புத்திர பாக்கியம் கிட்டும். 7ம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணம் கைகூடும். 7ம் இடம் என்பது வாழ்க்கை துணையை மட்டும் சொல்வதல்ல, கூட்டு தொழிலை பற்றி சொல்வதும் 7ம் இடம் தான். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் உங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. 9ம் இடத்தை குரு பார்ப்பதின் மூலம் அணைத்து வகையான செல்வங்களையும் அடையப்போகிறீர்கள் என்று இந்த குரு பெயர்ச்சி சொல்கிறது.
இந்த குரு பெயர்ச்சி சாதகமான பலன்களை அளிக்கும். மனதில் உற்சாகம் பொங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். கோபம் அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட முன் நிற்க வேண்டாம். வங்கி கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று சரிபார்த்து காசோலை தருவது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிலும் நேர்மையுடன் செயல்படுவது நல்லது. சவாலான தருணங்களையும் எளிதில் எதிர் கொண்டு ஜெயிக்க முடியும். குறைந்த முயற்சிகளில் நிறைவான பலன்களைப் பெற முடியும். உங்கள் சிந்தனையில் தெளிவு இருக்கும். அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தேடி வரும். புதிதாக வருபவர்களிடம் சிறிது எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சமூக நலனில் அக்கறைகொள்ளவும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பொருளாதார முயற்சிகளை அதிகப்படுத்தினால் அதிக பலன்களைப் பெற முடியும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற வருமானம் போதுமானதாக இருக்கும். பொது நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க முடியும். குடும்ப உறவுகளை சரியான முறையில் பராமரிக்க நேரம் இது. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதியர் பரஸ்பரம் அன்னியோன்யமாகப் பழகி வருவர். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பு நல்லது. பயணத்தின் போது ஒவ்வாமை ஏற்படாதவாரு இருக்க வேண்டியது அவசியம். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. முறையான ஓய்வும் மன அமைதியும் ஆரோக்கியத்திற்கு தேவை.
உத்யோகத்தில் பணி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. இந்த மாற்றம் நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமையும். அதன் மூலம் எதிர்பாராத பல நல்ல பலன்களைப் பெற முடியும். இந்தக் காலக் கட்டத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகள் திருப்தி அளிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் வெற்றியை பார்க்க முடியும். புதிய தொழிலுக்கான பல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம் : தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருக்கருகாவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுல்லைவனேஸ்வரரை வணங்குங்கள். ரத்த தானம் செய்யுங்கள். அந்தஸ்து பெருகும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்