Simma rasi guru peyarchi palangal 2021-22

சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Simma rasi guru peyarchi palangal 2020-21

சவால்களை வென்று… சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே…!!

சிம்ம ராசி அன்பர்களே, சிம்ம ராசிக்கு 6ம் இடமான சிம்மத்தில் இருந்து பணக்கஷ்டம், கடன் வாங்குதல், மருத்துவ செலவுகள், எதிரிகள் என்று சகல விதத்திலும் பாதிப்பான பலன்களே கிடைத்து இருக்கும். இப்போது குரு உங்கள் ராசிக்கு 7ம் இடமான கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். குரு உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் 8ம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியாகவும் இருந்துகொண்டு 7ம் இடத்திற்கு வருவது மிகவும் அதிர்ஷ்டமான காலம் என்றே சொல்ல வேண்டும். 5க்கு உடைய குரு 7ல் சஞ்சரிக்கும் போது நல்ல குணமும் தர்மம் சிந்தனையும் இருக்கும். வெளிநாடு சென்று வாரும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமணத்திற்கு பின் வசதியான வாழ்க்கை அமையும். குரு பார்க்கப்படும் மூன்று ராசிகளில் ஒன்று உங்களுடையது என்பதே ஒரு பலம் தான். எந்த ராசிக்கு குரு பார்வை இருக்கிறதோ , அந்த ராசிக்கு பிற கிரகங்களால் எந்த தீமையும் ஏற்படாது. உடலும் உள்ளமும் வலுப்பெறும். உடன்பிறந்தசகோதரர்கள் ஆதரவாக செயல்படுவர்.வசதி வாய்ப்புகள் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். பண வரவு தாராளமாக இருக்கும.

இந்தப் பெயர்ச்சி, உங்களை செல்வச் செழிப்பில் ஆழ்த்த செய்யும். எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். கணவன் மனைவிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடி போவர். நெருக்கமானவர்களுடன் உறவு, மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் எல்லாவற்றிலும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயலாற்றுவீர்கள். வரும் தடைகள் அனைத்தையும் திறமையாகச் சமாளிக்க உதவும்.

இது உங்களுக்குச் சாதகமான காலகட்டம் என்பதால், உங்கள் விருப்பங்கள் நிறைவேற வழி கிடைக்கும். நீங்கள் அனைவரிடமும் மென்மையாகவும், மரியாதையாகவும் பழகுவீர்கள். வயதில் மூத்தவர்களுடன் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால், அவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும். நண்பர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் நன்மை தருவதாக அமையும். ஆன்மீக நாட்டம் குறையும். உங்கள் மனம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளது. பொது இடங்களில் விதி முறைகளை மீறி நடக்க வேண்டாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் மிகச் சிறப்பாக இருக்காது. பலவித வருமானங்களின் வழியாக, கணிசமான பணம் வந்து சேரும். உங்கள் வருமானம் நிலையாகவும், தேவைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமானதாகவும் இருக்கும். எதிர்காலத்திற்காக பணம், சேமிப்பது நல்லது.

குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். குடும்ப நபர்கள் அன்புடனும், ஆதரவுடனும் இருப்பர். வயதில் மூத்தவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ள முயலவும். உங்கள் கருத்துக்களை குடும்ப உறுப்பினர்கள் ஆதரிப்பர். குடும்பத்திற்குள் ஒத்துழைப்பு அதிக அளவில் காணப்படும். உற்றார், உறவினர்கள் அளிக்கும் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். திருமணத்திற்காக வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல துணை அமையவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுபோல, உடன்பிறப்புக்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் பெற்றோரின் உடல்நிலை கவலை அளிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும், மன அமைதியே உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகின்றது.

உத்யோகத்தில் பணி நிமித்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். உத்தியோகம் நல்ல முறையில் அமையும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க இயலாது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் சிறந்த பலனும் காண்பர். தொழில் முயற்சிகளுக்கும், கூட்டுத் தொழிலுக்கும், பொதுவாக, இது சாதகமான காலமாக இருக்கும். உங்கள் கடுமையான முயற்சிகள் மூலம் சிறந்த பலன்களைக் காண முடியும். தொழில், வியாபாரத்தில் கணிசமான லாபம் அடையலாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க போகிறது இந்த குரு பெயர்ச்சி.

பரிகாரம் : தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும்.

சிம்மராசிக்காரர்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் எப்போதும் துணையாக இருப்பார். எனவே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்யுங்கள். அங்கே இப்போதும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருக்கிற சித்தர் பெருமக்களை மனதார நினைத்து வணங்க அனைத்து நன்மைகளும் பல மடங்காக நடக்கும். வாழ்க வளமுடன்.

சென்னை திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை வணங்குங்கள். புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2021-22

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

 

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment