Rishaba rasi Ragu ketu peyarchi 2020

ராகு – கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் ரிஷபம்:  (1.9.2020 முதல் 21.3.2020)

ரிஷப ராசி வாசகர்களே

ராகு பலன்கள்: இது நாள் வரை உங்கள் ராசிக்கு 2 ம் வீட்டில் அமர்ந்து வளர்ச்சிக்கு தடையாகவும் மன உளைச்சலையும் கொடுத்து வந்த ராகு இனி உங்கள் ஜென்ம ராசியில் வந்து அமர்வதால் இது நாள் வரை ராகுவாலும் , அஷ்டமத்து சனியாலும் அனுபவித்து வந்த கஷ்டங்கள் விலகி இனிதான நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முதல் இரண்டு மாதங்கள் மந்தமான நிலை உருவாகும் பிறகு 9 ல் வரப்போகும் குரு பகவான் உங்கள் ராசியையும் , ராசியில் நிற்கும் ராகு பகவானையும் தன் சுப பார்வையில் பார்க்கபோவதால் இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும்.

கேது பலன்கள்: இது நாள் வரை ராசிக்கு 8 ல் இருந்து பல விதமான பிரச்சனைகளை கொடுத்து வந்த கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டில் அமரப்போகிறார் . வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும் இதனால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக செல்லும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பண பிரச்சனைகள் விலகி புது தொழிலில் முதலீடு செய்வீர்கள். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.

 

ரிஷபம் ராசியில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள்

கார்த்திகை – அத்தி மரம்

ரோகிணி – நாவல் மரம்

மிருகசீரிஷம் – கருங்காலி மரம் ஆகிய மரங்களை நட்டு பராமரித்து வளர்க்கலாம். இதனால் மிகுந்த நற்பலன்களைப் பெறலாம்.

 

கார்த்திகை – 2, 3, 4:

இந்த ராகு கேது பெயர்ச்சி மனதில் மகிழ்ச்சியான எண்ணங்களை தரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

 

ரோகிணி:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

 

மிருகசீரிஷம் – 1, 2:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் வீடு கட்டுவதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

ராகு & கேது பரிகார ஸ்லோகம்:
ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ருபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹீ பராக்ரமாய,  பக்ஷி ராஜாய , சர்வ வக்ர, சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.
இந்த மந்திரத்தை 27 முறை சொல்லவும்.

 

பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 4, 7

மலர்பரிகாரம்: மல்லிகை மாலை கட்டி தாயாரை பூஜிக்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீ மகாலட்சுமி நம: என்று 11 முறை கூறவும்.

ராகு பகவான் 108 போற்றி

கேது பகவான் 108 போற்றி

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

 

Leave a Comment