Mithuna rasi Guru peyarchi palangal 2022-23

மிதுனம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்.. Mithuna rasi guru peyarchi palangal 2022-23

மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023

உங்களின் மதிப்பெண் – 60/100

அதிகம் ஆசைப்படாமல் உதிக்கும்போது விதிக்கப்பட்டதை உணர்ந்து வாழ்பவர்களே…!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை 10-வது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். வேலைப் பளு கூடும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பம் இருக்கும். எவருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.

2022 குருப்பெயர்ச்சி மிதுன ராசிபலன்கள்2022 குருப்பெயர்ச்சி மிதுன ராசிபலன்கள்
எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். முக்கியக் கோப்புகள், காசோலை விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்குக் கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வீண் பழி வந்து சேரும். விலை யுயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும்; கவனம் தேவை.

குருபகவானின் பார்வை பலன்கள்
குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் தடுமாற்றம் நீங்கும். சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குரு உங்களின் சுக வீடான 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயுடனான கருத்துமோதல் விலகும். தாய்வழிச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். என்றாலும் குரு உங்களுக்கு பாதகாதிபதி என்பதால், அவ்வப்போது வீண் கலக்கமும், செலவும், கணவன் மனைவிக்குள் கருத்துமோதல்களும் வரலாம். பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, கல்யாணம் ஆகிய வற்றைப் போராடி முடிப்பீர்கள்.

உங்களின் 6-ம் வீட்டை குரு பார்ப்பதால், கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். வழக்கில் வெற்றியுண்டு. கடன் வாங்கிப் புது வீடு கட்டுவீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். அயல்நாட்டு உறவினர்கள், நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை உங்கள் பாதகாதி பதியான குரு பகவான், தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதியில் 4-ம் பாதத்தில் செல்வதால், உத்தியோகத்தில் இடையூறுகள், கண வன் மனைவிக்குள் கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள், வீண் வதந்திகள் வந்து நீங்கும்.

30.4.22 முதல் 24.2.23 வரை, சனியின் உத்திரட்டாதியில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதுத் திட்டங்கள் நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். சகோதரருடன் மனத் தாங்கல் வரும். பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, புதிய சொத்து வாங்குவீர்கள். சோர்வு வந்து நீங்கும்.

8.8.22 முதல் 16.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் பண வரவு உண்டு. வருமானம் உயரும். விலை யுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

24.2.23 முதல் 22.4.23 வரை குரு புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், எதையும் சாதிப்பீர்கள். வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில்
சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுங்கள். சிலர் உங்களுக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போகவும்.

உத்தியோகத்தில்
வேலைச்சுமை இருக்கும். அலுவல ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. தேவையில்லாமல் விடுப்பு எடுக்கவேண்டாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. மூத்த அதிகாரிகளுடன் முரண்பட வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பிரபலங் களின் நட்பைப் பெற்றுத் தருவதுடன், யதார்த்த அணுகுமுறையால் முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: அனுஷ நட்சத்திர நாளில் கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் உள்ள தென்குடித் திட்டை தலத்துக்குச் சென்று, அங்கு அருளும் ஶ்ரீபசுபதிநாதரையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள். ஆதரவற்ற சிறுவர்களுக்கு உதவுங்கள்; நிம்மதி கிட்டும்.

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.

நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23

மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்

108 குரு பகவான் போற்றி 

ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்

குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்

Leave a Comment