Kumba rasi guru peyarchi palangal 2022-23
கும்பம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் – Kumba rasi guru peyarchi palangal 2022-23
கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2022 – 2023
உங்களின் மதிப்பெண் – 60/100
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே…!
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் காய் நகர்த்தி காரியம் சாதிப்பவர் நீங்கள். குருபகவான் 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்கிறார். அடிமனதில் இருந்த போராட்டம் விலகும். அலட்சியப் போக்கு மாறும். குடும்பத்தில் மதிப்பு கூடும்.
2022 குருப்பெயர்ச்சி கும்ப ராசி பலன்கள்2022 குருப்பெயர்ச்சி கும்ப ராசி பலன்கள்
எதையும் சமாளிக்கும் வகையில் பண பலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் வலி நீங்கும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் நிதானம் பிறக்கும். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.
குருபகவானின் பார்வை பலன்கள்
குரு 6-வது வீட்டைப் பார்ப்பதால் எதிரிகள் அடங்குவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்டபடி அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும். குரு 10-வது வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்தெடுக்கப் படுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்…
14.4.22 முதல் 29.4.22 வரை உங்களின் தன, லாபாதிபதியான குரு தனது பூரட்டாதி நட்சத்திரத் தின் 4-ம் பாதத்தில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இங்கிதமாகப் பேசி பழையப் பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.
30.4.22 முதல் 24.2.23 வரை உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பழுதான மின்னணு, மின்சார சாதனங் களை மாற்றுவீர்கள். சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் உண்டு. உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவைச் சரிப்பார்த்துக்கொள்வது நல்லது. வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.
8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள்.
24.2.23 முதல் 22.4.23 வரை குருபகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதி பதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். திடீர்ப் பயணங்களால் சேமிப்புகள் கரையும். பழைய உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள்.
வியாபாரத்தில்
தடுமாற்றம் நீங்கும். விளம்பரம், சலுகைகள் மூலம் பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர்கள். பாக்கிகள் எளிதாக வசூலாகும். அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் வந்துசேருவார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பத்தங் கள் கையெழுத்தாகும். மருந்து, கமிஷன், மர வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில்
மனப்போராட்டம் நீங்கும். மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக மாறுவார். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது டன், புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: பூசம் நட்சத்திர நாளில், திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூர் சென்று, அங்கு அருளும் ஶ்ரீஅக்னீஸ்வரரையும் ஶ்ரீதட்சணாமூத்தியையும் வணங்கி வாருங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதியருக்கு உதவி செய்யுங்கள்; நினைத்தது நிறைவேறும்.
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், விபசித்து முனிவர் மற்றும் தட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்
நன்றி: விகடன் மற்றும் இந்து தமிழ்
குருப்பெயர்ச்சி பலன்கள் 2022-23
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம்
ஶ்ரீ குரு ஸ்தோத்ரம் பாடல் வரிகள்
குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்